Thursday 10 November 2011

கலக்கல் காக்டெயில் -48


கலாம் அறிக்கை

அப்துல் கலாம் அவர்கள் கூடங்குளம் சென்று, விஞ்ஞானிகளையும் அதிகாரிகளையும் சந்தித்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆராய்ந்து ஒரு விரிவான அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார். அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் போரட்டாக்காரர்கள், மற்றும் மக்களின் விருப்பம். அதை விடுத்து சில ஊடகங்களும், மற்றும் இணையதளத்திலும் அவரைப் பற்றிய கீழ்த்தரமான விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. ஒரு பதிவர் சற்று ஒரு படி மேலே போய் “பயோடேட்டா” என்ற பெயரில் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்திருக்கிறார். அப்துல் கலாம் இதற்கு முன்பு இவர்களால் தூக்கிவைத்து கொண்டாடப்பட்டார், இப்பொழுது நிலமை மாறியிருக்கிறது. கலாம் அவர்கள் நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு தயாரித்த அறிக்கை அது. மக்களே சிந்தியுங்கள்.

13500 பேர் ஒரே ஆணையில் கல்தா  

மக்கள்நலப் பணியாளர்களை ஒரே ஆணையில் வழக்கமான ஸ்டைலில் அம்மா வெளியேற்றி இருக்கிறார்கள். இதற்க உண்டான காரணம் யாவரும் அறிந்ததே. இதை பற்றிய விவாதங்கள் ட்வீட்டரிலும் மற்றைய தளங்களிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நம் தலை எழுத்து இன்னும் எத்தனை வருடங்கள் இந்த கழகப் பிடியில் மாட்டிக்கொண்டிருப்போமோ, யாமறியேன் பராபரமே.

ரசித்த நாட்டுப்பாடல்

ஒரு தட்டு மண்ணெடுத்து
நான் போட்ட ரயில்ரோட்டு
நான் போட்ட ரோட்டுக்குள்ளே
நம்ம துரை வருவாரிப்போ
நம்ம துரை வந்தவுடன்
நமக்குப் பணம் தருவாரிப்போ
கொடுக்கிறது ராணித் துட்டு
எடுக்கிறது மணிப் பிரம்பு.


நகைச்சுவை  

ஏர்டெல் கஸ்டமர் கேருக்கு வந்த இந்த புகார் பேச்சை கேட்டு சிரிக்காம இருக்க முடியவில்லை. இது உண்மையிலே அவர் மஞ்ச மாக்கானா, இல்லை ஏர்டெல் காரரை கலாய்க்கிறாரா என்று தெரியவில்லை.ஜொள்ளு 


Follow kummachi on Twitter

Post Comment

28 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கலாம் அவர்கள் நாட்டின் ஒட்டுமொத்த ஆக்கத்திற்க்காக சிந்திக்க கூடியவர்...

அவர் தன்னுடைய கருத்தை சொன்னார் அவ்வளவுதான்..


உண்மையில் அவரை விமர்சித்தது துரதிஷ்டமானது...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்றை காக்டெயில் அனைத்தும் சூப்பர்..

கும்மாச்சி said...

நன்றி சௌந்தர் ஸார்.

settaikkaran said...

//சில ஊடகங்களும், மற்றும் இணையதளத்திலும் அவரைப் பற்றிய கீழ்த்தரமான விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.//

மிகவும் மிதமாகச் சொல்லியிருக்கிறீர்கள்! வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்பது என் கருத்து.

கும்மாச்சி said...

சேட்டை உமது கருத்தே சரி, வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இருதயம் said...

திரு அப்துல் கலாமை குறித்த கீழ்த்தரமான கருத்துகள் மிகவும் வருந்ததக்கது .

ரிஷபன் said...

காக்டெய்ல் உண்மையிலேயே கலக்கல்தான்..
கஸ்டமர் கேர் வாய் விட்டு சிரிக்க வைத்து விட்டது.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ரிஷபன்.

MANO நாஞ்சில் மனோ said...

கலாமை கீழ்த்தனமாக பேசுவது கண்டிக்கத்தக்கது அதேவேளையில் அவர் சொன்ன கருத்துக்கு பதில் கருத்து சொல்ல இந்தியாவின் ஒவ்வொரு மன்னனுக்கும் உரிமை உண்டு சரியா....

MANO நாஞ்சில் மனோ said...

இன்றைய காக்டெயில் சூப்பர்...!!!

Unknown said...

ஏர்டெல் கஸ்ட(ம)ர் கேர் காமெடி கேட்டு சிரித்து,சிரித்து, கண்களில் கண்ணீரே வ்ந்து விட்டது ஐயா.காக்டெயில் சூப்பர்.

கும்மாச்சி said...

செழியன், மனோ வருகைக்கு நன்றி.

M.R said...

பலதகவல்கள் அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி

த.ம 5

கோகுல் said...

அவரது கருத்துக்கு மாற்றுக்கருத்து இருந்தா முன் வைப்பதில் தவறில்லை,அவரையே தரம் தாழ்த்துவதை தவிர்க்கலாம்!

கஸ்டமர் கால் -சிரிச்சு சிரிச்சு முடியல!
நன்றி!

Philosophy Prabhakaran said...

யப்பா என்னமா சேலை கட்டியிருக்காங்க...

கும்மாச்சி said...

பிரபா, கோகுல் வருகைக்கு நன்றி.

Unknown said...

மாப்ள கலக்கல் காக்டெயில்!...அந்த கால் சேவை சூப்பர்!

சக்தி கல்வி மையம் said...

ஏர்டேல் ஆடியோ... இன்னும் சிரிச்சுகிட்டே இருக்கேன்..

கும்மாச்சி said...

நன்றி விக்கி.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி கருண்.

மன்மதக்குஞ்சு said...

அனுஷ்கா அருமையான படம். கொஞ்சம் முன்னாடியோ அல்லது பின்னாடியோ படமெடுத்து போட்டா ரொம்ப புண்ணியமா போகும். ஹி...ஹி...

கும்மாச்சி said...

எம்.கே. வருகைக்கு நன்றி, பின்னாலேதானே போட்டிருக்கேன்.

SURYAJEEVA said...

நடிகைகளின் முதுகை பார்த்து ஜொள்ளு விட்டு கொண்டே இந்தியா முன்னேறி விடும் என்று கனவு காண்பவர்களுக்கு எதுவும் சொல்வதற்கில்லை, கஷ்டப் படும் மனிதனாக...

கும்மாச்சி said...

சூர்யா ஜீவா, கருத்தை கருத்தில் கொண்டேன். வருகைக்கு நன்றி.

அம்பாளடியாள் said...

எவரையும் தவறாக விமர்சித்தல் எப்போதுமே நாகரீகம் அற்றதுதான் .
அறியாத தகவல் அறிந்துகொண்டேன் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .....

உலக சினிமா ரசிகன் said...

அப்துல் கலாம் விமர்சனத்துக்கு உரியவரே.
அவரை தெய்வ வடிவாக்கி கொண்டாடுவதில் அர்த்தம் இல்லை.

குண்டாய் இருக்கும் பெண்ணின் அக உளைச்சல்களை மிக அற்ப்புதமாக படமாக்கி உள்ளார் ஒரு பெண் இயக்குனர்.
ஆண் இயக்குனர்கள் தொட முடியாத உயரத்தில் காட்சிகள் அமைந்துள்ள
FAT GIRL என்ற படத்திற்க்கு பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து கருத்துரைக்கவும்.

சி.பி.செந்தில்குமார் said...

கலக்கல் காக்டெயில்

அம்பாளடியாள் said...

உங்கள் அடுத்த பதிவைக் காண ஆவலுடன் வந்தேன் காணவில்லையே.......

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.