Monday 14 December 2015

கலக்கல் காக்டெயில்-174

வெள்ள அரசியல் 

சென்னையில் வெள்ளம் அடித்து வடிந்துவிட்டது. இப்பொழுது அரசியல் வெள்ளம் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கிறது. சென்னை வெள்ளத்தின் காரணம் இயற்கை மட்டுமல்ல செயலற்று இருந்த நிர்வாகமுமே காரணம் என்று இந்தியா டுடே, ஃப்ரென்ட் லைன் பத்திரிகைகளில் செம்பரம்பாக்கத்தில் ராவோடு ராவாக திறந்துவிட்ட தண்ணீரே காரணம் என்று பிரித்து மேய்ந்து விட்டனர். இதற்கெல்லாம் அரசாங்கம் மௌனம் சாதித்து வருகிறது.

இதுதான் சாக்கு என்று இதை பெரிய அரசியல் ஆக்கி லாபம் பார்க்க மற்ற கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பிவிட்டன. ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விட்டதில் நடந்த குளறுபடிகள், அதிகாரிகளின் கையிலிருந்து மாறிய அதிகாரம் முதலியவற்றை விரிவாக இந்து நாளிதழ் அலசி ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. ஆத்தாவின் ஆணைப்படியே நடந்த வழிமுறைகள் வெள்ள நேரத்திலும் தொடர்ந்ததால் சென்னையில் உள்ள மக்கள் இரவோடு இரவாக தண்ணீர் மட்டம் உயர,  போட்டதை போட்டபடி ஓட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

இப்பொழுது  ஆளுநரிடம் இந்த குளறுபடியை  சென்னை உயர்நீதிமன்ற தலைமையில் கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று மனு கொடுக்கப்பட்டுள்ளது.

யாரு அந்த அதிர்ஷ்டசாலி நீதிபதியோ?


காவி அரசியல் 

சென்னையில் சமீபத்திய வெள்ளத்தில் சிக்கித்தவித்தவர்களை காப்பாற்றி உண்ண உணவு, இருப்பிடம் என்று கொடுத்து ஜாதி மதங்களை புறந்தள்ளி ஒருவருக்கொருவர் உதவி செய்திருக்கின்றனர்.

இது ஒன்றும் தமிழகத்திற்கு புதிதல்ல. காலம் காலமாக இங்கு அனைத்து மதத்தினர்களும் ஒற்றுமையாகத்தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். வட இந்தியாவில் காணும் மதக்கலவரங்கள் தமிழகம் ஒரு போதும் கண்டதில்லை இனியும் காணமுடியாது.

மேலும் இப்பொழுது அடித்த வெள்ளம் காவி அரசியலுக்கு இங்கு ஒரு போதும் இடமில்லை, எப்படியாவது இங்கு காலூன்றலாம் என்ற அவர்களின் ஆசையை அடித்து சென்று கடலில் போட்டு விட்டது.

நீர் வழிச்சாலைகள் 

சமீபத்தைய சென்னை வெள்ளம் நமக்கு நிறைய பாடங்களை கற்று கொடுத்துக் கொண்டிருக்கிறது. சென்னையின் மேற்கு கிழக்காக ஓடும் அடையாறு, மற்றும் கூவம் பற்றிய கட்டுரைகள் தற்பொழுது நிறைய பேர்களால் எழுதப்பட்டு பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கின்றன. பக்கிங்காம் கால்வாய் பற்றிய கட்டுரை "எப்படி இருந்த நான் இப்படி ஆனேன்" துளசிதரன் தில்லைகாத்து வலைதளத்தில் வந்துகொண்டிருக்கிறது. மிகவும் பயனுள்ள கட்டுரை. முக்கால் வாசி சென்னை வாசிகளுக்கு அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் பற்றி அதிகம் தெரியாது. அவர்களை பொறுத்தமட்டிலும் தூர்நாற்றம் வீசும் எந்த நீரோடையும் கூவம்தான். பக்கிங்காம் கால்வாய் ஆங்கிலேயர்களால் நீர்வழி சாலையாக உருவாக்கப்பட்டு பொருட்கள் எடுத்து செல்ல உபயோகப்படுத்தப்பட்டது. பின்னர் அது புறக்கணிக்கப்பட்டு கழிவு நீர் சாலையாக மாறி சென்னையின் வடக்கு தெற்காக ஓடி சென்னையை மணக்க செய்துகொண்டிருக்கிறது.

ரசித்த கவிதை 
சூழ்ந்து நிற்கும் கேள்விகள் 


சேவலின் உச்சிக் கொண்டையாய்
மைக் கொண்டு பாங்கு ஓதும் பள்ளிவாசல்களில்
ஒதுங்கிநிற்கிறோம்.
வாடகை வீடுகள் மறுக்கப்பட்டவர்களின்
பள்ளிவாசல்கள்தான் அவை.
செல்பேசிகள் அணைந்துவிட்டன.
சகமனிதர்களிடம் பேசத் தொடங்கினோம்.
இப்போது இருட்டிலும் அவர்கள் தெரிகிறார்கள்.
அல்லது இருட்டில்தான் அவர்கள் தெரிகிறார்கள்.
சாதனங்கள் முடங்கிய
மின்சாரத்துக்கு அப்பாலான
காலத்தில் நிற்கிறோம்.
அந்தக் காலத்தில் தண்ணீர் இருந்தது.
ஆறுகள் நிறையத் தண்ணீர் இருந்தது.
ஏரிகள் நிரம்பத் தண்ணீர் இருந்தது,
தண்ணீர் திணறத் திணற
பாட்டில்களில் அடைத்து விற்பனையைத் தொடங்கினோம்.
தண்ணீரின் நெஞ்சாங்குழி அதிர
தூண்களை இறக்கி கட்டடங்கள் எழுப்பினோம்.
மிச்சமிருந்த தண்ணீரை
குளிர்பானங்கள் ஆக்கி
அவற்றையும் விற்பனைக்கு அனுப்பினோம்.
நமது கால்களுக்குக் கீழ் நழுவும் பூமியில்
சில கேள்விகளோடு
அலைந்துகொண்டிருந்தது தண்ணீர்.
அந்தக் கேள்விகள்
ஆகாயத்துக்குப் போய் மீண்டும்
பூமிக்கு இறங்கி
இப்போது நம்மைச் சூழ்ந்துகொண்டன.
பள்ளங்களில் தேங்கி நிற்பவையும்
பாலங்களின் மேல் எழுந்து நிற்பவையும்
தண்ணீரின் கேள்விகள்தான்.
வாசலைத் தாண்டியும்
நம் வீடு வரைக்கும்
கேள்விகளை அனுப்பியிருக்கிறது தண்ணீர்.
ஆனாலும் நம் பதில்களை
தண்ணீரிலேயே எழுதி
கரைக்கத் தொடங்கும்பொழுதுகளில்
வானத்தின் ஏதேனுமொரு மூலையில்
கருமைகொண்டு
உறுமத் தொடங்கும் கேள்விகள்.

நன்றி: சுகுணா திவாகர் 



ஜொள்ளு 




Follow kummachi on Twitter

Post Comment

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ஜி...

KILLERGEE Devakottai said...

யாரு அந்த அதிர்ஷ்டசாலி நீதிபதியோ ?
புரிஞ்சிடுத்து நண்பரே...
தில்லை அகத்தை தொடர்கிறேன் கவிதை நன்று.
தமிழ் மணம் 4
நண்பரே எனது பதிவு பந்தை அடிக்க கோடரி எதற்கு ? படிக்கவும்

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஜி

அருமையா சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

காக்டெயில் அருமை

Unknown said...

#யாரு அந்த அதிர்ஷ்டசாலி நீதிபதியோ?# அவரை அடுத்த 'குமாரசாமி 'என்றா சொல்கிறீர்கள் :)

கும்மாச்சி said...

ஆமாம், ஆமாம் அதில் சந்தேகமென்ன?

வலிப்போக்கன் said...

சம்ந்த பட்டவர்கள் பாடம் கற்றுக் கொண்டதாக தெரியவில்லையெ........

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கலக்கலா இருக்கு!

ராஜ நடராஜன் said...

கும்மாச்சி!வணக்கம். இப்பொழுது ஆளும் கட்சியென்பதால் ஜெயலலிதாவை குறை சொல்ல காரணம் இருக்கிறது.ஆனால் சிங்கார சென்னையென்றெல்லாம் அளந்து விட்டது முந்தைய அரசு என்பதோடு தீர்வுக்கான வாய்ப்புக்களும் அதிகமாக இருந்தது என்பதை கலைஞரின் தொடர் பதவிகளே சான்று.

தமிழகத்தில் பருவ மழை காலம் மிக குறைவே.ஆனால் வெயில் காலம் அதிகம் என்பதால் கால்வாய்களை வறண்டு போகாமல் தக்க வைத்துக்கொள்வது எப்படி? நக்கீரன் பரம்பரையென்பதால் குறை சொல்ல நிறைய பேர் இருக்கிறோம்.ஆனால் தீர்வுக்கான சிந்தனை மிகவும் குறைவு.

பக்கிங்காம் கால்வாய்,கூவம் போன்றவை வளமாக இருந்த காலம் காவிரி நீர் செழித்து நின்ற காலம்.

எகிப்தின் சூயஸ் கால்வாய் பள்ளிக்கூட வரலாற்றுப் பாட திட்டம். படம் பார்க்க.

https://en.wikipedia.org/wiki/Suez_Canal

முன்பு ஒரு முறை சேது சமுத்திர திட்டத்திற்கு சூயஸ் நிபுணர்களை அழைத்ததாக நினைவு. ஒரு பக்கம் சுப்ரமணி சுவாமி கேசு போட இன்னொரு பக்கம் திட்ட திமுக மந்திரி ஆட்டைய போட்டதுடன் திட்டம் நின்று விட்டது. வீராணம்,கூவம் திட்டமெல்லாம் இப்படித்தான் ஆனது.

அம்மாம்பெரிய கடற்பரப்பை மெட்ராசில் வைத்துக்கொண்டு கூவம் நாறுகிறதென்பதெல்லாம் அழுகுணி ஆட்டம்.இனியாவது புத்தி வருதான்னு அஞ்சு வருசத்துக்கு அப்புறமா சொல்றேன்.

ராஜ நடராஜன் said...

உங்களுக்கு கூடவா திட்ட மன்னர்கள் உள்ளார்கள்? பெட்டியை பூட்டி வச்சிட்டு விருப்பமிருந்தாத்தான் திறப்பேன்கிறீங்களே!

மீரா செல்வக்குமார் said...

உங்கள் பதிவுகள் யோசிக்க வைக்கின்றன...நன்று..மகிழ்கிறேன்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.