Friday 11 December 2015

காணவில்லை!!!

சமீபத்தில் சென்னையில் அடித்த வெள்ளத்தில் கீழ் காணும் நபர்களை காணவில்லை. அவர்களது விவரம் கீழே தரப்பட்டுள்ளது. தப்பி தவறி அவர்களை எங்காவது கண்டால் யாரிடமும் தெரியப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் காணாமல் போன நபர்களின் படங்கள் அவசியம் இல்லாததாலும் ஏற்கனவே நொந்து போயிருக்கும் மக்களுக்கு மேலும் பீதியை கூட்ட வேண்டாம் என்று  பிரசுரிக்கவில்லை.

இவர் தனது ஒரே!!! கட்சியின் ஒரே ஒரு சட்டசபை அங்கத்தினர், மேலும் சட்டசபையின் மேஜை உடைந்து போவதில் பெரும்பங்கு வகிப்பவர். நாட்டாமை அல்லது சித்தப்பா என்று அழைத்தால் திரும்பிப்பார்க்க வாய்ப்பிருக்கிறது. இவரை கடைசியாக நவம்பர் இறுதியில் திருநெல்வேலியில் பார்த்ததாக சொல்கிறார்கள். அப்பொழுது கையில் சொம்புடன்......வயல்காட்டில்........"மரமானாலும் சட்டசபையில் ஆத்தாவிற்கு பெஞ்ச் தட்டும் மரமாவேன், தோலானாலும் ஆத்தா காலுக்குசெருப்பாவேன்" என்று சொம்படித்ததாக அவருடன் கழித்தவர்கள்!!! சொல்கிறார்கள். சென்னையில் கடைசியாக  இவர் ஆத்தாவிடம் பல்பு வாங்கி சோகமுகத்துடன் திரும்பியதை கண்டிருக்கிறார்கள். அதற்கு பிறகு சென்னையில் அடித்த வெள்ளம் இவரை கிழக்கு கடற்கரையில் ஒதுக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இவரை யாராவது கண்டால் திரும்பி பார்க்காமல் ஓடிவிடுவது நல்லது.

இவர் தம்மை தமிழச்சி என்று சொல்லிக்கொண்டு தமிழை தப்பு தப்பாக பேசுவார். சித்தி அல்லது வாணி ராணி என்று விளித்தால் மாடு சாணி போடுவது போல் முகத்தை வைத்துக்கொள்ளுவார். அண்டை மாநிலத்தை பூர்விகமாகக் கொண்டாலும் தனது மாநில ஆட்களை " ரெட்டி ரெட்டி" என்றழைத்து இழிவு படுத்துவதாக நினைத்து மைக் பிடித்து கூவுவார். சித்தப்பாவுடன் அவ்வப்பொழுது இருந்தாலும் தொலைக்காட்சி தொடரில் எதிரணியுடன் சில்லறை சேர்ப்பார். இவரை சமீபத்தில் யாரும் கண்டதாக தெரியவில்லை. இவரையும் சமீபத்திய வெள்ளம் கொட்டிவாக்கம் பக்கம் ஒதுக்கி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது, இவரை யாரேனும் கண்டால் பிச்சைக்காரனை கண்ட பொட்டை நாய் போல் காலுக்குள் வாலை நுழைத்து தலை தெறிக்க ஓடினால் தெரு நாய்களுக்கு நல்லது.

தந்தையின் பெயரை தனது பெயரின் முன்பாதியில் வைத்து அவ்வப் பொழுது தலை காண்பிப்பார். கடைசியாக இவரை தொலைக்காட்சியில் "பரதேசி நாய் பரதேசி நாய்" என்று சொல்லி திரிந்து கொண்டிருந்ததாக கண்டவர்கள் சொல்கிறார்கள். எப்பொழுதும் கூட்டி கழித்து கணக்கு பார்த்து சரி சரி சரியாக இருக்கும் என்று பெனாத்திக்கொண்டு தி. நகர் அபிபுல்லா தெரு பக்கம் சுத்திக்கொண்டிருப்பார். சென்னை வெள்ளம் இவரை அடித்து சாந்தோம் பக்கம் ஒதுக்கி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இவரை யாராவது கண்டால் தயவு செய்து எந்த துப்புரவு தொழிலாளரிடமும் சொல்லி அவர்களை இழிவு படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மருத்துவராகிய இவர் ஆத்தா புண்ணியத்தில் டில்லி வரை அனுப்பப்பட்டவர். கடைசியாக இவரை தென் சென்னை மக்கள் போன வருடம் கண்டதாக சொல்லுகிறார்கள். அப்பொழுது அம்மா தாயே பிச்சை போடுங்கம்மா என்று திறந்த வண்டியில் கட்சி குண்டர்கள் புடை சூழ பிச்சை எடுத்ததாக சொல்லுகிறார்கள்.சமீபத்திய வெள்ளத்தில் இவருக்கு பிச்சை போட்டு வாழ்வளிக்கலாம் என்று பொது மக்கள் தொடர்பு கொண்ட பொழுது அவரது அலை பேசி "நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் ஆத்தா திசை நோக்கி கும்பிட்டு   தண்ணியில் மூழ்கிக்கொண்டிருக்கிறார்" என்று பதில்வந்ததாக சொல்கிறார்கள். தப்பி தவறி இவரை யாரேனும் தொடர்பு கொண்டால் சிம் கார்டை பிடுங்கி வெள்ளத்தில் வீசுவது இவருக்கும் நாட்டுக்கும் நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னையில் அடித்த வெள்ளம் இவர்களை போன்று இன்னும் பல பேர்களை காணாமல் அடித்துள்ளது. இதை பற்றிய மேலும் அறிவிப்புகள் இன்னும் தொடர்ந்து வந்து மக்களுக்கு இடுக்கண் வருங்கால் நகுக என்ற வள்ளுவர் வாக்கை நினைவு கொள்ள காத்திருக்கிறது.

Follow kummachi on Twitter

Post Comment

14 comments:

Unknown said...

Super ! super !! super !!!

கரிகாலன் said...

இன்னும் பலரும் இந்த லிஸ்டில் உள்ளனரே

KILLERGEE Devakottai said...

தங்களுக்கே உரித்தான குசும்பு ஒவ்வொரு வரியிலும் பிதிபலிக்கின்ற அருமை நண்பரே... நல்லது நானும் இவர்களைக் கண்டால் துஷ்டனைக் கண்டால் தூரமாய் ஓடி ஒளிவேன் தகவலுக்கு நன்றி
தமிழ் மணம் 2

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

சூப்பர்...

நம்பள்கி said...

[[[ மாடு சாணி போடுவது போல் முகத்தை வைத்துக்கொள்ளுவார்]]]

மாடு சாணி போடும்போது முகத்தை வேறு பார்ப்பீர்களா?

கும்மாச்சி said...

ஏதோ ஒரு ஃப்ளோல வந்திடுச்சி பாஸ்

Raja said...

இப்போதான் புரியுது, மழை வெள்ளத்துல ஆத்தா ஏன் இறங்கலன்னு!
அந்த அம்மா இறங்கி இருந்தா இந்த அடிமைகள் எல்லாம் கும்புடு போடுறேன்னு தண்ணீல முங்கி மண்டைய போட்டிருக்கும்!!!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பார்த்தால் உங்களுக்கு தகவல் அனுப்புகிறேன்.

அருணா செல்வம் said...

கத்தரிக்காய் முற்றியனால் கடைதெருவுக்கு
வந்து விடும் கும்மாச்சி அண்ணா

Thulasidharan V Thillaiakathu said...

ஹாஹஹ்ஹ்ஹ கும்மாச்சி ஐயோ ஐயோ! வயிறு குலுங்கி வெடித்துவிடும் அளவிற்குச் சிரித்து மாளலை...உங்கள் நையாண்டி செம...ம்ம்ம்

கீதா: சரி சரி நான் கண்டால் உங்களுக்கு மட்டும் ரகசியமாகச் சொல்லுகின்றேன்...எதோ சிலர் இலங்கைக் கடற்கரை வரை சென்று ஒதுங்கி உள்ளதாக...இங்கிருந்து தப்பிச்சுட்டாங்களோ...???!!!

இதற்கு முந்தைய கமென்ட் வேண்டாம்..

மீரா செல்வக்குமார் said...

சரியான தேடல்....தப்பான நபர்களை...
உண்மை நண்பரே இவர்கள் ஆடிய ஆட்டமென்ன...பாட்டென்ன...காணாமல் போன இவர்களை விடுங்கள்..இருந்துகொல்லும் சிம்பு என்னும் நாயை என்ன செய்வது...

வலிப்போக்கன் said...

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மாவா இருக்கும்.. ஒரு கதையுடன் வருவார்கள் நண்பரே....

Unknown said...

அட ஆமாம் ,இவர்கள் எங்கே போனார்கள் :)

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.