Tuesday 15 December 2015

பித்தம் தெளியவேணும் பாட்டி

தமிழக அரசியலில் "பாட்டி" (இதய தெய்வம்......புரட்சி தலைவி..ஆத்தா|) இப்பொழுது காமெடி செய்துகொண்டிருக்கிறது. முன்னாள் டி.ஜி.பி நடராஜ் அவர்களை கட்சியிலிருந்து நீக்கி பின்னர் மறுபடியும் சேர்த்துக்கொண்டு மழையால் நொந்து நூலாகிப்போன மக்களை நகைக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

வெறும் தொலைக்காட்சி செய்தியை வைத்து ஒருவரை கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி தான் இன்னும் அதே "எடுப்பேன் கவிழ்ப்பேன்" நிலையில்தான் இருக்கிறேன் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார். மொத்தத்தில் தந்தி டிவிக்காரன் நடராஜை "வச்சு நல்லா செஞ்சிட்டான்".

செம்பரம்பாக்கம் ஏரியை இரவோடு இரவாக திறந்துவிட்டு சென்னை மக்களை வெள்ளத்தில் மூழ்கவும் மிதக்கவும் விட்டதற்கு முதலமைச்சர்தான் பொறுப்பு என்று பத்திரிகைகளும் எதிர்கட்சிகளும் கூறிக்கொண்டு இருப்பதற்கு காரணமில்லாமில்லை. தமிழ்நாட்டில் உள்ள ஏறி, குளம், குட்டை, கழிப்பிடங்கள் எல்லாம் மாண்புமிகு புரட்சி .............இதய..........ஆத்தா ஆணைப்படிதான் திறந்து விடப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கையில் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பது பற்றி ஆத்தாவிற்கு தெரியாமல் இருந்திருக்காது.  இப்பொழுது விஷயத்தின் தீவிரம் உணர்ந்து தலைமை செயலர் அறிக்கை விடுகிறார், முதலமைச்சரின் உத்தரவு காத்திருக்கவில்லை, அதற்கு அவசியமுமில்லை என்று. ஒரு கட்சி உறுப்பினர் விஷயத்திலேயே இவ்வளவு தெளிவாக முடிவெடுக்கும் ஆத்தா செம்பரம்பாக்கம் ஏரியை வைத்து நல்லாவே "செஞ்சிட்டாங்க"

இப்பொழுது தமிழ்நாடு அரசாங்கம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறதா? இல்ல ஆத்தா போல் ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் ஸ்டிக்கர் ஓட்டுவது மட்டும் வெகு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது, இப்பொழுது பச்சைக் கலர் "ஆத்தா" டோக்கன் வேறு கொடுக்கிறார்களாம்.

ஒன்று நிச்சயம் ஆத்தா இப்பொழுது செயல்படுகிறாரா? இல்லையா?என்பது பெரிய சந்தேகமாக உள்ளது. அதற்கு உடல்நிலை ஒரு காரணமாக இருக்கலாம். தற்போதைய நிலைமை பித்தம் பிடித்திருக்க வைத்திருக்கலாம். இவற்றை தெரிந்துகொண்டுதான் கட்சிக்காரர்கள் நிவாரண நிதியில் ஆட்டையைப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். கடலூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவளித்த வழியாக ஒரு 400 கோடிக்கு வழி செய்துவிட்டார்கள்.

தமிழ் நாட்டு தலை எழுத்து செயல்படாத அல்லது செயல்படாத முடியாதவர்கள்தான் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள்.

பாட்டிக்கு இப்பொழுது "பித்தம் தெளிய நல்ல மருந்து" வேண்டும். வெள்ளநிவாரண நிதியிலிருந்தே எடுத்து கணக்கு காட்டிக்கொள்ளலாம்.


Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

KILLERGEE Devakottai said...

ஸ்டிக்கர் ஒட்டு இன்னுமா தொடர்கிறது நண்பரே...

அன்பே சிவம் said...

பேருக்கேத்த மாதிரி ச்சும்மா கும்மு கும்முன்னு கும்மிட்டீங்க...

ஒரு வருத்தம்,

அதனாலதான்
இந்த திருத்தம்

எங்கள் 'மா-- மி.. அ-- அவர்கள் ஆ---- கிணங்க
இந்த பதிவு வெளியிடப்படுகிறது.
அப்டின்னு ஒரு வார்த்தை சேக்காம வெளியிட்ட உங்களை
பணிவுக்கு பேர் பெற்ற பாசக்கார ப.ப அவர்கள் சார்பாக கடும் கண்டணம் தெரிவிகிறோம்.

Unknown said...

அவரை நீக்கியது யார் ,சேர்த்தது யாருன்னு தெரியலையே :)

நிஷா said...

ஹாஹா! அமபலமான பவர்புல் அரசியல் ரகசியங்களை சுருக்கமாக சொல்லிட்டிங்க! எத்தனை காலம் தான் ஏமாறுவார்? இப்படித்தான் ஒரு நாள் எல்லாமே வெளிக்கு வரும்.

வெங்கட் நாகராஜ் said...

வேதனை.....

மீரா செல்வக்குமார் said...

அய்யோ..அய்யோ....

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.