Monday 28 December 2015

கேப்டன் துப்பியது யார் மீது?

தேர்தல் நெருங்கும் முன்பு கேப்டனின் முக்கியத்துவம் இப்பொழுது அரசியல் கட்சிகள் மட்டுமல்ல ஊடகங்களாலும் உணரப்படுகிறது என்பதையே கேப்டனின் "துப்பல்" உணர்த்துகிறது. கேப்டன் கேள்வி கேட்ட ஊடகத்தின் மீது மட்டும் துப்பவில்லை, இலவசம் வாங்கி சரக்கடித்து தூங்கிக்கொண்டிருக்கும் நமது மக்களின் மீதும் துப்பியிருக்கிறார்.

2011 தேர்தலில் என்னதான் எதிர்கட்சிகளும்,ஊடகங்களும்  தனது வேட்பாளரின் பேரை மாற்றி சொன்னதால் தட்டியதை கிராபிக் செய்து கேப்டனை கழுவி கழுவி ஊத்தினாலும் முடிவுகள் அவரது அரசியல் பலத்தை காண்பித்தது. பின்னர் அவர் முதுகில் சவாரி செய்து ஆட்சியைப் பிடித்தவர்கள் அவரை கழற்றிவிட்டது தனி கதை.

செம்பரம்பாக்கம் ஏரியை அகால நேரத்தில் திறந்து விட்டு சென்னை மக்களை தத்தளிக்க விட்டு தூங்கிய ஆளுங்கட்சியை கேள்வி கேட்க துப்பில்லாத கேடுகெட்ட ஊடங்களின் மீது கேப்டன் துப்பியது ஒன்றும் தப்பில்லை. அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டிய ஊடகங்கள் இப்பொழுது நடிகனின் பீப் பாடல் கிடைக்குமா, என்று அலைந்து அதை வைத்து செய்திகளை திசைதிருப்பி தங்களது கீழ்த்தரமான வேலையை செய்துகொண்டிருக்கிறது. ஒரு வாரம் பீப் பாடல் பிறகு இளையராஜா பேட்டி என்று இரண்டு வாரங்கள் ஓட்டியாகிவிட்டது பின்னர் இப்பொழுது கிடைத்தார் கேப்டன்.

இதை வைத்து இன்னும் சிறிதுகாலம் ஒட்டி பின்னர் நடிகர் சங்கம், இல்லை எதாவது ஒரு நடிகனின் படம் வெளியாவதில் சிக்கல் என்று ஜல்லியடித்து பிரதான விஷயத்தை மறக்கடிக்கப் பார்க்கிறார்கள்.

ஆளுங்கட்சிக்கு துணை போகும் இந்த ஊடகங்களை மக்கள் புறக்கணிக்கப் போவது வெகு தூரத்தில் இல்லை.

அது வரை கேப்டனுடன் சேர்ந்து நாமும் இந்த ஊடகங்களின் மீதும் வெட்டி அரசியல்வாதிகளின் மீதும் துப்புவோம்.






Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

MUTHU said...

துப்புகெட்ட ஊடக தர்மத்தை துப்பியது தப்பே இல்லை.

KILLERGEE Devakottai said...

இதுவும் சரிதானோ......
தமிழ் மணம் 1

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
சரியாத்தான் சொன்னீர்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

'பரிவை' சே.குமார் said...

சரியாச் சொன்னீங்க...


தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.