Wednesday 23 December 2015

டீ வித் முனியம்மா பார்ட் 39

இன்னாடா மீச கடிய ஒரு மாறி தொறந்துகின.............இன்னடா வெள்ள நிவாரணம் கடிச்சுதா?

எந்தா லிங்கம் சாரு........ஒன்னும் கிட்டில்லா..........பாய்...யானும் காசு கொடுத்தது.

சரி முனிம்மா வருது சாய் அடி.

டேய் லோகு இன்னடா வியாவாரம் எப்படி கீது?.

அது இன்னா பீ.........ப்.............வியாவாராமோ போ செல்வம்.

டேய் இன்னாடா பயய  வார்த்தையெல்லாம் வுட்டுகினு கீற.

இன்னா முனிம்மா இந்த சொம்பு லுச்சா..பையன் போட்டிய பத்தி பாடிக்கினானமே. இப்போதான் போட்டி கறி துன்ன கூடாதுன்னு வடநாட்டுலே அடிச்சிகினானுங்க, இப்போ இன்னாவாம் போட்டிக்கி.

டேய் செல்வம் அது போட்டி இல்லடா..........நீ கண்ணாலம் கட்டிக்கும் முன்னி பேசிக்கினு இருந்தே நம்ம பாச...........நம்ம எல்லாம் அத்த வுட்டுட்டு இன்னா ரீஜென்டா மாறிகினோம்.........இந்த சொம்பு பையனும், அந்த ஓம குச்சியும் ஒரு பாட்டு போட்டுகிறானுங்க.......இன்னா பாட்டுன்னா இன்னா பு....க்கு லவ் பண்ண..அப்படின்னு போட்டுக்கிறான். அந்த வார்த்த வரசொல்ல பீப் ன்னு சவுண்டு வுட்டுகிறான்,,,,,,,,,,பாட்ட கேட்டவங்க சொல்றானுங்க பீப் சவுண்ட விட கெட்டவார்த்தைதான் சவுண்டா கேக்குதான்.

சரி விடு முனிம்மா........இதெல்லாம் இந்த வெடல பசங்க வாழ்க்கைல அப்டி இப்டி இருப்பானுங்கோ.

அது இல்ல லிங்கம் சாரு............இத எதிர்த்து இப்போ கோர்ட்டுல கேசு போட்டுகிறானுங்க. இத்த விசாரிக்க சொல்ல ஒரு வக்கீலு ஜட்ஜாண்ட சொல்லிக்கிறான் பாட்ட ஒரு தபா கேட்டுப்பாருன்னு.........இவரு ஐய நமக்கு இதெல்லாம் வேணாம்பா.......அப்பால போலிசாண்ட சொல்லிகிறாரு, நீங்க அவனுகள புடிச்சி உள்ள போட எல்லா ஆதாரமும் இருக்குதுன்னு. சரி விடு இதெல்லாம் ஒரு மேட்டருன்னு நாம குத்த வச்சி படிச்சிகினு கீறோம்.

முனிம்மா இந்த டெல்லி கற்பழிப்பு கேசுல அந்த சின்ன பையன வெளியே வுட்டுட்டானுங்களாமே. இதென்ன நியாயம்.

பாய் நம்ம நாட்டுல சட்டம் இன்னா சொல்லுதுன்னா.....பதினெட்டு வயசு கீய இருந்த அஜால் குஜால் படம் பாக்கக்கூடாது............ஆனா மேட்டருக்கு ஒகேவாம்........இன்ன சட்டமோ.

ஆமாம் முனிம்மா அவனுக்கு தையல் மெசின்னு..........பத்தாயிரம் பணம் வேற கொடுத்துகீறாங்களாம்.

ஆமாண்டா செல்வம் ஆனா இந்த பொடிப்பையன் தான் அந்த பொண்ணு உள்ளார இரும்பு கம்பிய வுட்டு பெருங்கொடலு எல்லாம் டேமேஜ் பண்ணிக்கிறான். அது விடுறான்னு கெஞ்ச சொல்ல.........பொட்ட நாயே சாவுடின்னு இன்னும் கம்பிய வுட்டு ஆட்டிகிறான். அதுக்குதான் கவர்மெண்டு ரிவார்டு கொடுத்துகீறானுங்க.

சரி முனிம்மா வெள்ளம், வெள்ளநிவாரண நிதி, ஸ்டிக்கர், செம்பரம்பாக்கம் மேட்டர் எல்லாம் இன்னாச்சு?.

அதான் நாடார் நம்ம ஜனங்க மனசு..........புச்சா மேட்டரு ஒன்னிய கண்டுகிணானு வச்சிக்கோ பழைய மேட்டரு டீல் வுட்டு அம்பேல் ஆயிருவானுங்க. மொதலோ கொரலு வுடுவானுங்க அடுத்த தபா எலிக்சன் வரசொல்ல வக்கிறேன் பாரு ஆப்புன்னு.............அப்பால துட்டு வாங்கி  ஒட்டு போட்டு சரக்கடிச்சு மட்டையாய்டுவானுங்க. இன்னத்த சொல்ல நம்ம தமிழ் நாட்டு விதி.

சரி முனிமா ஒரே நூசெல்லாம் பேஜாராகீது. நம்ம சினிமா நூசு எதாவது சொல்லு.

டேய் செல்வம் அவனுகள பத்தி பேசாத..................சொம்பு பாட்டு வார்த்தையெல்லாம் வண்டை வண்டையா வருது........படத்தப் பாத்து கம்முன்னு போய்கினே இரு.








Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

நிஷா said...

ம்ம்
மனசைகொல்லும் நிஜங்கள் வக்கிரமானவைகள்.பல நேரம் மன்னிப்ப்புகளுக்கும் மதிப்பு இல்லாமல் போவதும் இது போன்ற செயல்களால் தான்.அதெப்படி பதினெட்டு வயதாகி ஒரு நாளில் வரும் அறிவு பதினெட்டு வயதாகும் முன்னொரு நாளில் வருவதில்லை என கணக்கெடுக்கின்றார்கள் என புரிவதுமில்லை.

அப்படி தண்டனை கொடுக்க சட்டத்தில் இடம் இல்லை எனில் ஆயுசுக்கும் ஜெயிலுக்குள் கிட என சொல்லி இருந்தாலாவது இனியும் தப்புசெய்ய போகும் சிந்தனை வருபவனுக்கு இது ஒரு பாடமாயிருக்கும். சட்டமே குற்றம் செய் என சொல்லி கொடுப்பது போல் இருக்கும் இவர்களின் நீதி.

அதே நேரம் இதற்குள் மதத்தினையும் இனத்தினையும் நுழைத்து திசை திருப்புதலும் கண்டிப்புக்குரியது.

இலங்கையிலும் நிர்ப்பயா போன்றகொடூர சம்பவம் வெளிப்பட்டது .. குற்றவாளிகள் இன்னாரென தெரிந்தும் இழு இழு என இழுக்கின்றார்கள்.

Unknown said...

இதைக் காணும் முன்பு வரை ரோஜாதான் ரொம்ப அழகுன்னு நினைத்து இருந்தேன் :)

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு...
என்ன அழகு... எத்தனை அழகு....

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.