Wednesday 16 April 2014

டீ வித் முனியம்மா---------பார்ட் 5

நாடார் இன்னா முன்னியமே வந்து குந்திகினு கீற..........

டேய் பயம் நீதான் ஆள் வச்சுகினு வியாவாரம் செய்வியா.........நமக்கும் ஆள் கீது...........பையன் கீறான்........கல்லாவுல குந்திகினு.......

பாத்து நாடார் கல்லாவுல கை வச்சிடப்போறான்.....

டேய் பேமானி வாய கயுவுடா..................பயம்.........

இன்னா லிங்கம் சார் இன்னா மேட்டரு...............

தோ டா முனியம்மா வந்துகினு கீது அதான்டையே கேளு...............

டேய் இன்னாடா லோகுப்பயல டீக்கடையாண்ட காணோம்...........

தோ வந்துகினே கீறேன்க்கா.............

சரி முனியம்மா இந்த தாடி மனுஷன் மோடி இன்னாத்துக்கு நம்ம தலீவரு படையப்பாவ வூட்டாண்ட போயி கண்டுகினு வந்துகிராறு.............

அட லோகு இன்னா இது ஒரு புது மேட்டரா? எலிக்சன் வர சொல்ல அந்தாள அல்லாரும் வந்து பாத்துகினு போட்டோ பிடிச்சிகினு போவானுங்க............

நம்ம படையப்பரும் சரி அவருக ஆளுங்களும் உஷாரு பார்ட்டிங்கோ...........வாய் உட மாட்டாங்க............

அவரு யாருக்குதான் ஒட்டு போட சொல்லுவாராம்?

அட இது இன்னா கேள்வி லிங்கம் .............அவரு வயக்கம் போல உங்களுக்கு யாரு தோணுதோ அவருமேல குத்துங்கன்னு சொல்லிட்டு இமயமலியாண்ட குந்திக்குவாறு..........

ஆனா தலீவரு டக்கர் பார்ட்டிப்பா..................அவரு கண்டி நெனைச்சா...............சரி அத்த வுடு ...................

இன்னா மோடி தலீவரு வூட்டாண்ட போனதில கேப்டன் காண்டாயிட்டாராமே...............நாடார்

அஹான் நாடாறு இந்தாளு கூட்டணி தலீவருன்னு ஒரு கணுக்கா மப்புல வரசொல்ல மோடி அவர கண்டுக்கினா கேப்டன் கான்டாக இன்னா செய்வாரு?

இன்னா இன்னும் ஒரு ரெண்டு கட்டிங் எஸ்டா உட்டுகினு...........மக்கழ கூவிகினு போயிருப்பாரு.......பாய்

பாய் உங்காளுங்க இன்னா அம்மா கட்சிக்கு ஆதரவு இல்லைன்னு சொல்லிகினு ஐயா கட்சிக்கு ஆதரவுன்னு சொல்லிகிறாங்க............

இன்னா முனியம்மா அப்டி சொல்லிகின, அல்லாரும் நம்ம ஆளுதான்..........இதெல்லாம் அரசியல வயக்கம்போல நடக்கிறதுதான்..........

இன்னா முனியம்மா வைகோ வாண்ட விருதுநகரு ஆளுங்க ஓட்டுப்போட துட்டு கேட்டடுகிரானுகளா?

அஹான் மீச அந்தாளு ஒரே பெஜராயிட்டாறு..................சூடாய் அங்கிருத்து எஸ் ஆகிக்கிராறு............

இன்னா நம்ம கார்த்திக்கு எலிக்ஸனுக்கு கூவ போயிட்டாராம்........

அதான் பாய், அந்தாளு தொப்பி ஒன்னு வாங்கிகீரான் அத்த போட்டு சொம்மா பிலிமு காமிச்சிகினு கீறான்...............சரியான காமெடி பீசு........

சரி முனிம்மா சினிமா நூசு இன்னா................

இன்னாடா இப்போ நூசு கோச்சடையான் வருதான்............அதான் நூசு.......இந்த வாரம் நம்ம வைகைப்புயலு படம் வருது..........அப்பாலிகா இப்போ எலிக்சன் டயம் அதால அல்லா ஸ்டாருங்களும் அப்படியே அம்பேல் ஆகிட்டானுங்க.....................இவனுக எதாச்சும் கொரலு வுட்டு அப்பாலிக அந்தம்மா படம் வர வுடாம செய்யுன்னு பம்மிகிரானுங்க.........

அதான் நூஸா முனிம்மா அதான் அணிலு, பெருச்சாளி எல்லாம் பொந்துல பூந்திடுச்சா...........................

ஆமாண்டா பயம்.............இந்த எலிக்சன் வந்ததால நம்ம கொண்டிதோப்புல பகலுல டூபு லைட்டு போட்டுகிரானுங்க.................ரவைக்கி உருவிடுரானுங்க..........இன்னா வோ நடக்குது போ...........





Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

rajamelaiyur said...

நைனா ... கலக்கிட்ட போ ... செம டரியல் ...

கும்மாச்சி said...

ராஜா வருகைக்கு நன்றி.

அம்பாளடியாள் said...

அரசியல் கதம்பம் வெகு சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரா !

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சகோதரி.

சென்னை பித்தன் said...

பயந்தான்!

”தளிர் சுரேஷ்” said...

டீ ச்சுவை அருமை! நன்றி!

திண்டுக்கல் தனபாலன் said...

என்னவோ... என்னென்னவோ நடக்குது....!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

எஸ்.ரா வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.