Thursday 17 April 2014

தேடிப்போய் ஆப்பு வைத்துக்கொண்ட ஜெ .....................

நாடாளுமன்றத்தேர்தல் அறிவிப்பிற்கு பின்  தமிழக அரசியல் களத்தில் புதுப்புது வியூகங்கள், எல்லோரும் எதிர்பார்த்தது போல ஜெ. கூடவே  இருந்து ஜால்ரா தட்டிய கம்யூனிஸ்டுகளை கழற்றி விட்டார். போன சட்டசபை தேர்தலில் தே .மு.தி. க வின் ஓட்டுக்களை சேர்த்து வெற்றிபெற்ற பின்  அவர்களின் தயவு தேவையில்லை என்று சட்டசபையிலேயே கேப்டனின் வேட்டியை உருவி அவரை  வம்பிற்கு இழுத்து துரத்தியடித்தார்.

அடுத்து "சோ" அவர்களின் அறிவுரைப்படி தனக்கு பிரதமராக வாய்ப்புள்ளது என்று தங்களது அடிப்பொடிகளை உசுப்பிவிட்டு ஊரெங்கும் போஸ்டர் அடித்து வருங்கால பாரதமே, இந்தியாவின் எதிர்காலமே என்றெல்லாம் அலப்பறை செய்தார்கள். பின்னர் பி.ஜே.பி. விற்கு எப்படியும் தங்களது ஆதரவு தேவைப்படும் என்று கணக்கு போட்டு மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கலாம் என்று ஒரு கணக்கு ஓடியது. தேசிய கட்சிகள் இரண்டுமே பெரும்பான்மை பெற வாய்ப்புகள் இல்லாததால் பிராந்தியக் கட்சிகளின் தயவு தேவை என்பதால் அதிக சீட்டுகளை வெல்லும் கட்சியே பேரம் பேச முடியும், ஆதலால் தேர்தல் பிரச்சாரத்தில் முதலில் "இந்த தேர்தல் காங்கிரசையும் தி.மு.க. வையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய தேர்தல்" செய்வீர்களா? செய்வீர்களா? என்று ஹெலிகாப்டரில் பறந்து பறந்து முழங்கினார். மறந்தும்கூட பி.ஜே.பி யை அப்பொழுது விமர்சனம் செய்யவில்லை.

இதை கவனித்த பி.ஜே.பி யின் தமிழக கூட்டணிக்கோ ஜெ  மோடி தயவில் எங்கே தங்களது கூட்டணிக்கு வரவேண்டிய ஓட்டுக்களில் ஆட்டையைப் போட்டுவிடுவாரோ என்று கலங்கின. வை. கோ. வெளிப்படையாகவே இது அயோக்கியத்தனம், கயவாணித்தனம் என்று விமர்சித்தார்.

பின்னர் பி.ஜே.பி யின் தேர்தல் அறிக்கையில் ஜெ  விற்கு முதல் ஆப்பு தொடங்கியது. தி.மு.க அம்மையாரை உசுப்பி விட பி.ஜே.பி யின் தேர்தல் அறிக்கையில் பொடி வைத்தனர்.

அம்மா உளவுத்துறையின் தகவல்படி "பி.ஜே.பி யை விமர்சிக்காததால்" சிறுபான்மை வாக்குகள் சிதற வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து மிகவும் மென்மையாக மோடியின் தேர்தல் அறிக்கையில் காவிரி பற்றி ஒன்றுமில்லை, மீனவர்கள் பற்றி ஒன்றுமில்லை என்று சிறுபான்மையினரை வருடிக்கொடுக்க தொடங்கினார்.

ஆனால் ஸ்டாலின்,  அம்மையார் பி.ஜே.பி யின் தேர்தல் அறிக்கையில் உள்ள பொது சிவில்சட்டம், ராமர் கோயில் கட்டுவது போன்றவற்றை  விமர்சிக்காதது ஏன்? என்று அடிமடியிலேயே கைவைக்கும்  கேள்விகளை எழுப்பினார். மேலும் அ.தி.மு.க விற்கும் பி.ஜே.பி விற்கும் கள்ளத்தொடர்பு உள்ளது என்று போட்டு தாக்கினார். இப்பொழுது அம்மா மேலும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டார்.

இவையெல்லாம் தவிர அம்மாவின் அல்லக்கை மந்திரிகள் ஒட்டுக்கேட்டு செல்லும் இடமெல்லாம் பொது மக்கள் மின்வெட்டையும் தண்ணீர் தட்டுப்பாட்டையும் காரணம் காட்டி விரட்டி அடிக்கப்படுகின்றனர். அமைச்சர்களுக்கே இந்த கதி என்றால் அந்த தொகுதி எம்.எல். ஏக்களின் நிலைமை கேட்கவே வேண்டாம். மின்வெட்டை சரிசெய்ய ஒன்றும் இது வரை செய்யாதது இப்பொழுது தேர்தல் நேரத்தில் குடைச்சல் கொடுக்கிறது. அதை சமாளிக்கத்தான் தேர்தல்  நேரத்தில் மின்வெட்டு வருவது சதிவேலை சில கட்சிகளின் மேல் சந்தேகம் எழுகிறது என்று தனக்குத்தானே ஆப்பு வைத்துக்கொள்கிறார். தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு துறையில் சதிவேலை என்றால் சம்பந்தப்பட்ட அமைச்சரும் அதிகாரிகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

இதற்கெல்லாம் மேலாக அம்மையாரை விரக்தியடையச் செய்திருப்பது மோடி ரஜினி சந்திப்பு. காலையில் ரஜினியின் சிறப்பு பேட்டி ஜெயா டிவியில் ஒளிபராப்பாகிறது. மாலையில் மோடி  ரஜினியை அவரது இல்லத்தில் சந்திக்கிறார்.மேலும் இந்த சந்திப்பிற்கு மூலகர்த்தாவே அம்மையாரின் அரசியல் ஆலோசகர் என்ற கூடுதல் எரிச்சல் வேறு. உளவுத்துறையின் கணிப்பில் சிறுபான்மையினர் ஒட்டு  தி.மு.க பக்கம் போகிறது என்ற செய்தி வேறு தான் ஏறி உட்கார்ந்துகொண்டு ஆப்பை அசைத்து பார்க்கிறது.

இது எல்லாம் தி.மு.க வின் எதிர்பார்த்ததைவிட அதிக வெற்றிக்கு காரணமாக அமைந்து விடுமோ என்ற கலக்கம்.

தமிழகத்தின் தலை எழுத்து இந்த இரண்டு கட்சி(கழிசடை)களையும் விட்டால் வேறுவழியில்லை. 



Follow kummachi on Twitter

Post Comment

13 comments:

Unknown said...

;;KAZHI-ADAI-; WHICH MEANES; 'this one of the member you' DO NOT remmaber

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட்டு.

கும்மாச்சி said...

எஸ்.ரா வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

நல்லா சொன்னீங்க! வாழ்த்துக்கள்!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

J.Jeyaseelan said...

மிகவும் சரியாக சொன்னீர்கள், ஜெயலலிதாவின் பி.ஜே.பி எதிர்ப்பு ரஜினியை மோடி சந்தித்ததால் தான். ஆனாலும் அவர் தேர்தலுக்குப்பின் என்ன முடிவு எடுக்கப்போகிறார் எனத் தெரியவில்லை????? இதில் நமோவும் ஜெயும் போட்டிருக்கும் மறைமுக ஒப்பந்தம்???

அருணா செல்வம் said...

//தமிழகத்தின் தலை எழுத்து இந்த இரண்டு கட்சி(கழிசடை)களையும் விட்டால் வேறுவழியில்லை. //

உண்மை தான் வேற வழி...?

தெரியாத பேயைவிட தெரிந்த பிசாசுகளே மேல் என்று மக்கள் நினைக்கிறார்கள் போல.
பகிர்விற்கு நன்றி கும்மாச்சி அண்ணா.

கும்மாச்சி said...

ஜெயசீலன் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

அருணா உங்கள் கருத்து சரியே.

திண்டுக்கல் தனபாலன் said...

வேறு ஒரு வழி கண்டிப்பாக உண்டு... ஆனால் நாளாகும்...

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

விசு said...

யாரை தூக்கி எங்க வைக்கனுமன்னு யாருக்கும் தெரியிலே...

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி விசு.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.