Monday 28 April 2014

டீ வித் முனியம்மா----------பார்ட் 7

முனியம்மா இன்னா டென்சனா கீற...........

இன்னா லோகு...... பேமானிங்க.......... இந்த கச்சிகாரனுங்க ரண்டு நாளா நம்ம எரியாண்டையே மார்கயி மாச நாயிபோல சுத்திகினு கீறானுங்க.........

ஏன் இன்னா விசயம்முனிம்மா.............

இன்னா நாடாறு கையில துட்டு வச்சிகினு அல்லாருக்கும் குடுக்க கூப்பிடுரானுங்க........ஓட்டு  போடணுமாம்.
அப்படியே எங்க குப்பத்து ஜனங்க மெர்சல் ஆயிடுதுங்க............

ஐய முனிம்மா இன்னா பிலிமு காடுற, துட்டு குடுத்தா கணுக்கா அமுக்கிக்க.......சொம்மனாகாட்டியும் இங்கன வந்து உதார் உட்டுகினுகீர......

போடா பேமானி, பயம் உன்னிய மாதிரி அயுகின பயம் விக்குற பார்ட்டியாடா.........அப்படியே செவுலுல உட்டா அகுளு பகிளாயிடும்.......இன்னா மூவாயிராம் ரூவா கொடுக்கிரானுங்களாம், அத்த குத்துட்டு இவனுங்க அஞ்சு வருஷம்அங்கப் போயி இன்னா காசு அடிப்பானுங்க தெரிமா? தொகுதி மேம்பாடுல ஆட்டையப் போடுவானுக, ட்ரைன்ல டிக்கட் எடுக்காம சுத்துவானுங்க, எராப்லான்லையும் வித்தவுட்ல போவானுங்க, அப்பாலிக்கா லட்ச கணக்குல சம்பளம் போட்டுப்பானுங்க.............நமக்கு கணக்கு போட்டுப்பாரு அஞ்சு வருசம் இவனுக அனுபவிக்க மூவாயிரமா,? அப்பா தெனத்திக்கு என்னாச்சு சொல்லுடா பயம்.

அஹான் அந்த கனுக்கு தெர்ஞ்சா நான் ஏன் பயம் விக்குறேன், நீயே சொல்லு முனியம்மா.

ஒரு ரூவா அருவத்தினாலு காசுடா குடாக்கு. தோ சிக்னலாண்ட பிச்ச எடுக்கிறானே அவன் பொயப்பே தேவல............சரி அத்த உடு நாம ஏதோ ரீஜென்டா பூ வித்து பொயப்பு நடத்திகினு கீறோம், நம்மாண்ட வந்து துட்ட நீட்டுரானுங்க ஊயலுக்கு பொறந்த பெருச்சாளிங்க...................

அதானே, மூவாயிரம் கோடி  துட்ட அள்ளி உட்டுகிராங்கலாம் ஆளும் கச்சி, சரி உடு முனியம்மா சூடாவாத...........யாரு கெலிப்பாங்க அத்த சொல்லு........

அய்ய நமக்கு இன்னா தெரியும்.......இல்ல நம்ம கச்சினு ஏதாவது வச்சிகிராமா தலீவரண்ட சொம்படிக்க..............ஏதோ ஒருபார்ட்டிவருவான்,சீட் பத்தல ஐயாநீ வரியா?அம்மா நீ வரியான்னு துட்டு காட்டி கூவுவாம், நம்ம தமியு கூட்டம் கீதே துண்டடில வெரல உறுவி அங்கன போயி சேந்துருவானுங்க ............அப்பாலிகா தமியன சுட்டான்,  தமியு ஈயம் பித்தளைன்னு நம்மாண்ட தெனைக்கும் வந்து கூவுவானுங்க இதே பொயப்பா போச்சி...............

முனியம்மா நெம்ப சூடா கீற? நீ ஒட்டு போட்டுகினையா?

அதெல்லாம் கரீட்டா போயி வரிசையில நின்னு குத்திட்டன்....

தமியு நாட்டுல யாரு கையி ஓங்கும்............மோடியா?, லேடியா?, டாடியா?

அல்லாரும் நல்லாத்தான் கூவினாங்க. மே பதினாருதேதிக்கு அல்லாம் தெரிஞ்சுடும். இப்போ நம்ம ஒட்டு குத்தியாச்சு இல்ல, இப்போ அந்தம்மா கொடனட்டுல குந்திகினு கரீண்டு வெலய ஏத்தப்போவுதான்...........கரீண்டு வேற அப்பப்போ புடுங்கிடுது..............அஹான் வராத கரீண்டுக்கு இன்னா துட்டு வச்சா நமக்குஇன்னா?

அஹான் இனி எல்லா டகிலு பாச்சா வேலையெல்லாம் அவுத்து விடும்.........

அப்பாலிகா முனிம்மா இந்த நூருநாளு வேல கொடுக்குற திட்டத்துல ஊயல் கீதாமே......

அஹான் பாய் மெய்யாலுமே அதிலயும் நல்லா ஆட்டைய போட்டுகிரானுங்க........அமிதா பச்சகனு, ஐஸ்வர்யா ராய், டெண்டல்கரு அல்லா பேர்லயும் கணுக்கு எய்தி சுட்டுகிரானுங்க.......பாடுங்க.......

சினிமா நூசு இன்னா?

அல்லாம் எலிக்ஸனுக்கு ஒட்டு போட்டு போசு கொடுத்துகினு போயினேகீறானுங்க......வேற இன்னா நூசு கீது........

இல்லமுனிமா புச்சாவந்த பொண்ணு இனி புல்லா காட்டப்போவுதாமே........


த பயத்துக்கு புத்தி போவுது பாரு.................படம் ஒன்னியும் கையில இல்லன்னா அதான் செய்வாளுங்க................இதெல்லாம் ஒரு நூசுன்னு கேக்குறான் பாரு...............








Follow kummachi on Twitter

Post Comment

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

ரெம்ப சூடாத்தான்கீது...!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.