Monday 14 April 2014

கலக்கல் காக்டெயில்-142

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.


முத்துவும் மோடியும்

தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த மோடி போயஸ் கார்டன் சென்று ரஜினியை சந்தித்துள்ளார்.சந்திப்பிற்கு பின் பேட்டியளித்த ரஜினி நாங்க அரசியல் பேசவில்லை என்கிறார். பஸ் கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கி தமிழ் திரையுலகில் நுழைந்து இன்று தமிழ் படங்களை உலகளவு வியாபாரத்திற்கு வித்திட்டவர்கள் ரஜினியும், கமலும் என்று சொன்னால் அது மிகையாகாது. அதிலும் ரஜினியின் பங்கு இதில் அளப்பரியது. குழந்தைகள் முதல் கிழவர்கள் வரை பெரிய ரசிக பட்டாளத்திற்கு சொந்தக்காரர். எத்துணையோ தயாரிப்பாளர்கள் இவரால் நல்ல நிலையை அடைந்தவர்கள். இவரது புகழை பயன்படுத்தி ஒட்டு வேட்டையாட ஒவ்வொரு தேர்தலின் போதும் எல்லா கட்சி தலைவர்களும் போயஸ் கார்டன் இல்லத்தில் தவமிருப்பது வழக்கம்.

ரஜினி சுயமாக சிந்திக்கக் கூடியவர். நல்ல மனிதர் என்று எல்லோராலும் பாராட்டப்படுபவர். இது போன்ற அரசியல் தலைவர்களுக்கு தனது புகழையும் நன்மதிப்பையும் விற்று தமிழர்களின் மனதிலிருந்து இறங்கமாட்டார் என்று அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ரஜினி கைவிடமாட்டார்.

நாளைய பாரதம்

தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அல்லக்கைகளின்  பித்து தலைக்கேறிக்கொண்டிருக்கிறது. போனமுறை கேப்டனை நக்கல் செய்து சன் டிவியும் கலைஞர்  டிவியும் திரும்ப திரும்ப போட்டு காண்பித்த காட்சிகள் இப்பொழுது ஜெயா டீவியிற்கு மாறியிருக்கிறது.

இந்தியாவின் எதிர்காலம், நாளைய பிரதமர், வருங்கால பாரதம் என்ற கோஷங்களும், சுவரொட்டிகளும் இப்பொழுது நிறம் மாறிக்கொண்டிருக்கின்றன. பா.ஜ.க வை விமர்சிக்காத அம்மாவின் பேச்சு இப்பொழுது தடம் புரள்கிறது. யாருக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் எனபது இப்பொழுது கேள்விக்குறி?

எப்படியோ யாருக்கு எவ்வளவு கிடைத்தாலும் சாமானியனுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. அரசியல் கட்சிகளின் குதிரை பேரத்திற்கு தான் உதவப்போகிறது.

இந்த முறை தமிழன் சித்தித்து வாக்களிப்பானா? இல்லை பணத்திற்கும் படாடோபத்திற்கும் விலை போவானா? மே பதினாறு தெரிந்துவிடும்.

ரசித்த கவிதை 

விழி அசைத்த இரவு 


உறங்கிக்கிடக்கிறது ஊர்.
பக்கத்து வீட்டு 
விளக்கொளிகளும்
வீட்டாரோடு சேர்ந்து தூங்குகின்றன
நடு நிசியில்
நாயின் குரலோ
கைபேசி சினுங்கல்களோ 
ஆள் நடமாட்டமோ 
எதுவும் கேட்கவில்லை 
தூக்கம் வராத நான்
அங்குமிங்கும் நடந்த போது
என் கண்ணொளி இரண்டும்
அம்மாபெரும் இருட்டை 
அசைத்துக்கொண்டிருந்தன.
-------------------------------------------------வசந்த் பூபதி.
 ஜொள்ளு
Follow kummachi on Twitter

Post Comment

12 comments:

அம்பாளடியாள் said...

வணக்கம் !
இனிய சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரா .

கும்மாச்சி said...

நன்றி சகோதரி, உங்களுக்கும் உங்களது குடும்பத்தாருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

வெளங்காதவன்™ said...

//அம்மாபெரும் இருட்டை ///

அம்மா பேரும் இருட்டை?

#இரும்வோய். ஆட்டோ அனுப்புதேன். :)

வெளங்காதவன்™ said...

//அம்மாபெரும் இருட்டை ///

அம்மா பெரும் இருட்டை?

#இரும்வோய். ஆட்டோ அனுப்புதேன். :)

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

”தளிர் சுரேஷ்” said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

கும்மாச்சி said...

வெளங்காதவன் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

எஸ்.ரா இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

ராஜி said...

காக்டெயிலில் அரசியல் வாடை தூக்கலா இருக்கு!!

Jayadev Das said...

\\பணத்திற்கும் படாடோபத்திற்கும் விலை போவானா? \\ காசு குடுப்பவனுக்கு ஓட்டு போடுவான்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.