Wednesday 23 April 2014

கலக்கல் காக்டெயில்-143

அம்மாவும் நாற்பது அடிமைகளும்

அம்மா தனது அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் ஏற்றி குனிய வைத்து பிரச்சாரம் செய்தது தான் அரசியல் தேர்தல் களத்தில் சூடான தகவல்.
கோவிந்தா கோவிந்தா...................
அம்மா தாயே பிச்சை போடுங்கம்மா.
இந்தக் காட்சி நமக்கு ஒன்று புதியதல்ல. இதை எழுதி கிண்டலடிக்காத பத்திரிகைகள் தமிழகத்தில் இல்லை என சொல்லலாம் (மக்கள் குரல், நமது எம்.ஜி, ஆர் நீங்கலாக).

1996 தேர்தலில் தோற்ற பொழுது அனைத்து உலக அகிலாண்டேஸ்வரி தாய் புரட்சி தலைவி அம்மா அவர்கள் இதையெல்லாம் தான் வெறுப்பதாக ஒரு பேட்டி அளித்தார். ஆனால் இப்பொழுது நாம் காணும் காட்சிகள் வேறு, அம்மா ஹெலிகாப்டரில் வரும் பொழுது அனைத்து அமைச்சர்களும் மற்ற அல்லக்கைகளும் தரையில் விழுந்து கும்பிட்டு பின்னர் அம்மாவை வரவேற்க ஓடுவது கண்கொள்ளா காட்சியாக தொலைக்கட்சிகளில் தினம் ஒளிபரப்பப்படுகிறது.

எப்போ திருந்துவீங்கப்பு............

லேடி,மோடி,டாடி

குஜராத் வளர்ச்சி,  தமிழக வளர்ச்சி என்று போட்டி போட்டுக்கொண்டு மோடியும், லேடியும் வார்த்தைதோரனங்கள் கட்ட பிரச்சார மேடை ஜொலிக்கிறது. ஆனால் உண்மை நிலையில் தமிழகம் இருண்டு கிடக்கிறது என்பதே உண்மை. தமிழகத்தை கடந்த முப்பது வருடகாலமாக மாற்றி மாற்றி ஆண்டு கொண்டிருக்கும் இரு கழகங்களும் தமிழக வளர்ச்சிக்கு ஒன்றும் "புடுங்கவில்லை" என்பதே உண்மை. இரண்டு கழகங்களும் இலவசங்களை அள்ளி வழங்கி டாஸ்மாக் வியாபாரத்தை பெருக்கியதுதான் சாதனை.

போதாத குறைக்கு தமிழகத்தின் வளர்ச்சி எங்கள் டாடியால்தான் என்று தளபதி தன் பங்கிற்கு  வார்த்தை சிலம்பம் ஆடுகிறார்.

அந்த நாட்களிலிருந்தே "பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைத்த வஞ்சகர் கூட்டம்" என்று வார்த்தை சிலம்பம் ஆடியே மக்கள் மூளையை மழுங்க அடித்திருக்கின்றனர்.

வாழ்க தமிழகம்.

அரசியல் களத்தில் ரசித்த கீச்சுகள்

"சந்தியாவின் மகள் இந்தியாவை ஆள்வார்" நாஞ்சில் சம்பத் # இன்னோவா வாங்கியோர் சொம்படித்தே சாவார்------------தில்லுதொர 

இது வரை தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிடாத ஒரே பத்திரிகைன்னா அது திருமணப் பத்திரிகை மட்டும் தான்.


ரசித்த கவிதை 

யார் யாராக

என் கை பற்றி 
நீ நடக்கும்போது
உன் பிடியில் 
நான் அடங்குவதாய் நீயும்
என் பிடியில்
உன்னை வைத்திருப்பதாய் நானும்
நாடகமாடுகிறோம்.
நீ நானாகவும்
நான் நீயாகவும்
மாறி மாறி ஆடும் ஆட்டத்தில்  
நீ நீயாகவும்
நான் நானாகவும்
சில நேரம் தடுமாறுகிறோம்.
யார் யாராக
எப்பொழுது மாறுகிறோம் எனக் 
கணிக்க இயலாது....................................எஸ்.ஆர். சரஸ்வதி



ஜொள்ளு 


Follow kummachi on Twitter

Post Comment

13 comments:

ராஜி said...

இது வரை தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிடாத ஒரே பத்திரிகைன்னா அது திருமணப் பத்திரிகை மட்டும் தான்.
>>
நிஜம்தான்

கும்மாச்சி said...

ராஜி வருகைக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

கீச்சு செம...

கவிதை அருமை...

Anonymous said...

Kanniyum 40 thirudargalumnu title potirukkanum.

”தளிர் சுரேஷ்” said...

அதிகமா முதுகு வளைப்போர் கட்சியினர் என்ன செய்ய முடியும் பாவம்! இவர்களும் திருந்த மாட்டார்கள். எதுகை மொகனை பேச்சை கேட்டு ஓட்டுப்போடும் மக்களும் வளர மாட்டார்கள்! என்ன செய்வது!

rajamelaiyur said...

லேடி ,

மோடி,

டாடி ,

எல்லாமே செம கேடி (கள் )

Jayadev Das said...

\\இரண்டு கழகங்களும் இலவசங்களை அள்ளி வழங்கி டாஸ்மாக் வியாபாரத்தை பெருக்கியதுதான் சாதனை.\\

வரிசை கிரமம் கொஞ்சம் மாறுகிறது......................
முதலில் ஒட்டு வாங்க இலவச அறிவிப்புகள்.
ஆட்சிக்கு வருதல்
இலவசங்களை கொடுத்தல்
அதை சரிகட்ட டாஸ்மாக் கடைகள்.

அருணா செல்வம் said...

எல்லோரும் ஓர் குலம்
எல்லோரும் ஓர் இனம்.
எல்லோரும் நம் நாட்டு மக்கள்.....

Unknown said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

கும்மாச்சி said...

அருணா வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

ஜெயதேவ் உங்கள் கருத்து மிகவும் சரி, நாக்குதான் வேறு வழி இல்லை.

கும்மாச்சி said...

ராஜா லேடி மோடி, டாடி, கேடி ஆஹா இந்த வார்த்தைகளை சேர்த்தாலே ஒரு கவிதையாகிறது.

Gowda Ponnusamy said...

நல்ல கவிதை. நம்ம மக்கா அல்லாருமே இலவசம்னா கவுந்துடுவாங்களே.
ஒரு நல்ல மனிதர் இந்த நாட்டை வழி நடத்த கிடைக்காமலா போயிடுவார்?
-பொன்சாமி

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.