Thursday, 1 October 2009

பதினாலு இட்லி பத்மநாபன்

பக்கத்து வீட்டு பெண்மணியிடம் என் மனைவியின் "ஓட்டல்" சற்று அதிகமாகவே இருக்கும்.

என்னங்க கீதா உங்க கல்யாண நாள் விருந்து எங்க தரப்போறிங்க என்று தொடங்கும் அரட்டை.

அவங்க வந்து வீட்டிலேயே செஞ்சுடலாங்க என்பார்கள்.

வீட்டிலே வேண்டாங்க வெளியிலே எங்கேயாவது போகலாமே என்பாள்.

உடனே கீதா "பீச் போகலாங்க" என்பாள்.

சரி அப்புறம் எந்த ஹோட்டலுக்கு போகலாம், மனைவி நக்கல் ஆரம்பமாகும் நேரம்.

அவங்க எந்த ஹோட்டல் சொன்னாலும் மறந்து கூட அந்த மைலாபூர் ஹோட்டல் பேரே சொல்லமாட்டாங்க.

மனைவி விடாம அந்த ஹோட்டலுக்குத்தான் போகணும் என்பாள்.

அந்த ஹோட்டல் பேரே சொன்னாலே அவங்க அலறுவாங்க.

வெகு நாட்கள் வரை என்னக் காரணம் என்று புரியவில்லை.
மனைவி விடாமல் என்னக் காரணம் என்று கண்டுபிடித்துவிட்டாள்.

கீதாவின் புருஷன் பத்மநாபன் ஒரு பயங்கிற உஷார் பேர்வழி.

காய்கறி காரியிடம் மல்லுகட்டி எப்படியோ ஒரு கிலோ என்பதை ஒன்னே கால் கிலோ வாங்கிடுவான். அவளிடன் தராசை எடுக்கும்போழுதே தான் பிடுங்கிக்கொண்டு, இதென்னம்மா தராசு ஒரு சைடா பொருள் இல்லாமலேயே சாயுது என்று ஆரம்பித்து அவளை ஒரு வழி பண்ணி அவளிடம் எக்ஸ்ட்ரா காய்கறி இஞ்சி, கொத்தமல்லி என்று கொசுரே வாங்கிவிடுவான்.

காய்கறிக்காரி போகும் பொழுது நம்ம பத்மனாபானின் குலம், கோத்திரம் எல்லாவற்றையும் ஒரு வழி பண்ணி, மேலும் அவன் பிறப்பையே கேள்விக்குரியிட்டுப் போய் விடுவாள்.

அப்பேர் பட்ட ஆளு, தன் மனைவியின் தொல்லை தாளாமல் அந்த ஹோட்டலுக்கு கூட்டிக்கொண்டு போயிருக்கிறான்.

காய்கறிக்காரி போகும் பொழுது நம்ம பத்மனாபானின் குலம், கோத்திரம் எல்லாவற்றையும் ஒரு வழி பண்ணி, மேலும் அவன் பிறப்பையே கேள்விக்குறியாக்கிவிட்டுப் போவாள்.

விஷயம் இதுதான் நம்ம ஆளு பதினாலு இட்லின்னு ஒரு ஐட்டம் அத்தே ஆர்டர் பண்ணிட்டு, மனைவிக்கு மசால் தோசை ஆர்டர் எல்லாம் செய்து நல்லா ஒரு கட்டிட்டு சர்வர் பில்லுகொடுக்கும் பொழுது தன் கைவரிசையை (சொல்வரிசையை) காட்டியிருக்கிறார்.

ஏம்பா பதினாலு இட்லின்னு சொன்னே பன்னிரண்டு இட்லிதான் இருந்தது. சார் குட்டி குட்டியா பதினாலு சாம்பார்லே மூழ்கியிருக்கும் சார் என்றிருக்கிறான்.

நம்ம "பத்து" விடாமே யோவ் பன்னிரெண்டுதான் இருந்தது, நான் சாப்பிட்டவன் எனக்குத் தெரியாதா, பதினாலு இட்லி ஐம்பத்தாறு ருபாய், பன்னிரண்டு இட்லி நான் நாற்பத்தெட்டு ருபாய் தான் தருவேன்.

சார் பேஜார் பண்ணாதே, இன்னா சார் இது போலே யாரும் சொன்னதில்லே சார், நீ கொடுக்கலேன்னா மானஜெர் காச்சிடுவார், டிப்ஸ் வேணா தராதே சார் என்றிருக்கிறான்.

யோவ் டிப்சா அப்படின்னா என்னா, யோவ் அம்மாக்கு நான் என்னய்யா கேட்டேன், மசால் தோசை நீ என்னய்யா கொடுத்தே சாதா தோசை அதாலே நீ அதுலே ஒரு நாலு ரூபாய் கழித்து வேறே பில் கொண்டுவா என்று சொல்லி ரப்ச்சர் பண்ணியிருக்கிறார்.

கீதாவோ இல்லைங்க மசால் தோசைதான் என்று சொல்ல, நீ கம்முன்னு இரு உனக்கு ஒன்றும் தெரியாது. என்று அடக்கியிருக்கிறார்.

விஷயம் அந்த ஹோட்டல்களில் இருந்த எல்லோருக்கும் தெரிந்து, ஒரே களேபரம் தான்.

மேலும் இவர் எப்பொழுது அந்த ஹோட்டலுக்குப் போனாலும், அந்த சர்வர் எல்லோருமாக சேர்ந்து இவருக்கு இவரை இப்பொழுது ஒருவழிப் பண்ணுகிறார்களாம்.

இவர் குடும்பத்துடன் போனாலே பதினாலு இட்லி பார்டி உஷார் என்கிறார்களாம்.

கீதாவின் அலறலுக்கு இதுவே காரணம் என்று புரிந்தது.

Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

jaisankar jaganathan said...

உள்ள 13 இட்லி இருந்தது. 13 unlucky நம்பர். ஏமாத்திட்டாங்க

சந்தனமுல்லை said...

:)))

பித்தன் said...

Hmmmmmmm....

கார்த்திகைப் பாண்டியன் said...

:-)))))

kggouthaman said...

Server : Sir - here is the bill!
Customer : OK here is the payment.
Server : Sir! - But this does not include anything for the server.
Customer : Server? Did I eat one?

ஹேமா said...

பாருங்க கும்மாச்சி,நாட்டில என்னல்லாம் நட்க்குது.அனுபவம் சிரிப்போடு கவனம்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

பக்கத்தூட்டுக்காரர் கதை மாதிரி தெரியலையே.. ஹிஹி..

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.