Sunday 18 April 2010

புயலில் சாய்ந்த மரம்


படித்து முடித்த கவிதை
எடுத்து முடித்த வேலை
நடத்தும் வாழ்வை நகர்த்த
தொடர்ந்த அலுப்புத் தொழில்
கொடுத்து வைத்த தர்மம்
அடுத்து எடுக்கும் செயல்
என எப்பொழுதும் அலை
ஓடும் எண்ணங்களில் படிக்க
நேரமின்றி தொலைத்துவிட்ட
வாழ்வை திரும்பி பிடிக்கும்
முயற்சியில் மனம்
அடித்து விட்ட புயலில்
முறிந்து சாய்ந்த மரம் போல்
வெறுத்து நிற்கிறது.


தொடரும் வேலைப் பளுவில் வலைப்பூ வாடாதிருக்க என் எண்ண ஓட்டத்தில் எழுந்த ஒரு கவிதை

Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

vasu balaji said...

good one :)

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி வானம்பாடிகள்

ஹேமா said...

கும்மாஞ்சி...
விஞ்சிய வேலைக்குள்ளும்
இணையத்து நண்பர்களை
நினைத்து
நனைத்து வைக்க
சிந்திய எண்ணத்தில்
வடித்த வாசகம்
வாழ்வியலின் யாசகமானாலும்
இன்றைய யதார்த்தம் !

Chitra said...

எப்பொழுதும் அலை
ஓடும் எண்ணங்களில் படிக்க
நேரமின்றி தொலைத்துவிட்ட
வாழ்வை திரும்பி பிடிக்கும்
முயற்சியில் மனம்

...... வாவ்! மிகவும் அருமையாக, கவிதை வந்திருக்குங்க. பாராட்டுக்கள்!

settaikkaran said...

நல்லாயிருக்கு! விரைவில் பணிப்பளு குறைந்து மேலும் படைப்புகளுடன் வர வாழ்த்துகள்!

க‌ரிச‌ல்கார‌ன் said...

ந‌ல்லாருக்கு ந‌ண்பா தொட‌ருங்க‌ள்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.