Wednesday 9 June 2010

தமிழகத்தின் செல்லக் குரல்-----------எங்கிருந்து?.......... தொடர்ச்சி


இது வரை வந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் “அல்கா”தான் முதலிடம். வின்னரும் அவர்தான் என்ற கணிப்பு பரவலாக உள்ளது. அவர் கேரளா நாட்டை சேர்ந்தவர்தான் என்பது இப்போதைய சர்ச்சை. இரண்டாவதாக வரப் போகும் ரோஷனும் அந்த வகையே. அனால் இவர்களின் இசைத் திறமை வியக்க வைக்கிறது. “அல்கா” பதினொரு மொழிகளில் பாடி கின்னஸில் இடம் பெற்றிருப்பது கூடுதல் தகவல்.

ஆனால் இவர்களின் தமிழ் உச்சரிப்பை பார்க்கும் பொழுது இவர்களை தமிழர்களாக ஏற்றுக்கொள்வதில் சிறிதளவும் தயக்கம் இருக்காது. இன்று தமிழ் நாட்டில் பிறந்த தமிழ் தொகுப்பாளர்களும் தொகுப்பாளினிகளும் தங்க்லீஷில் பேசிக்கொண்டு “விலையும் பயிரை முலையிலே” தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

எனது முந்தைய பதிவில் “ஷான்” கேட்ட கேள்வி சிந்திக்க வைக்கிறது. தமிழன் என்பவர் யார்? தமிழ் நாட்டில் பிறந்தவனா?, தமிழ் படித்தவனா? தமிழில் பேசுபவனா? தமிழ் பெற்றோர்களுக்குப் பிறந்தவனா?

ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும் தமிழ் திரையிசையில் கோலோச்சிய சுசீலா, ஜானகி, பி.பி. ஸ்ரீனிவாஸ் எல்லோரும் பிறப்பால் தமிழர்கள் அல்ல. ஆனால் அவர்கள் தமிழ் திரை இசைக்கு செய்த சேவை மகத்தானது. மேலும் அவர்கள் வாழ்ந்துகொண்டு சுவாசித்துக் கொண்டிருப்பது “தமிழ்”.

இசை அமைப்பாளர்களில் எம்.எஸ்.வி பிறப்பால் தமிழர் அல்ல, ஆனால் அவரின் திரை இசைச் சேவைக்கு விளக்கம் தேவை இல்லை. அவரும் தமிழரே.

தமிழில் எண்ணற்ற கவிகள் புனைந்த “பாரதி” நம் பார்வையில் தமிழனே. ஆனால் மற்ற குறுகிய எண்ணம் படைத்தவர்களின் பார்வையில் அவர் “வந்தேறி”. அவரது படைப்புகள் இருட்டடிப்பு செய்யப்படுவது உலகறிந்த விஷயம். பொதிகை தொலைக் காட்சி தவிர மற்ற தொலைக் காட்சிகள் அவரது நினைவு நாளை நினைவு கூர்வதில்லை.

இரண்டு வருடம் முன்பு தமிழ் நாட்டு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிடவிருந்த வெளியீட்டில் தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்கள், கலைகள் பற்றிய முன்னோட்டத்தில் இசை விழாப் பற்றிய குறிப்பு அரசியல் தலையீட்டால் நீக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.

ஆனால் நாம் இன்றும்
“காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு,
கலைகளுக்கேல்லாம் தாய் வீடு”
என்று உதட்டளவில் உச்சரித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த பிரிவினை பாகு பாடெல்லாம் யார் விதைத்தது? யார் வளர்த்தது? யார் லாபமடைகிறார்கள்? சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம்.

எனது முந்தையப் பதிவைப் படிக்க

http://kummacchi.blogspot.com/2010/06/blog-post.html

Follow kummachi on Twitter

Post Comment

15 comments:

ராம்ஜி_யாஹூ said...

அல்கா தான் முதல் இடம் வர வேண்டும் என்பதே என் விருப்பமும்,

அவர் சிறந்த முறயில் பாடுகிறார், நல்ல குரல் வளம், ஆர்வம்

இதில் தமிழ் தெலுங்கர் மலையாளி என்ற பாகுபாடு எல்லாம் வேண்டாம்.

இன்னும் சொல்ல போனால், நாம் சொல்லி கொண்டு இருக்கிறோமே, தமிழர் ஆஸ்கார் வாங்கினார் என்று, அந்த ரஹ்மானின் தந்தை கேரளாவை சார்ந்தவர் தான்.


But Vijay Tv has been dragging this programme unnecessary.

கும்மாச்சி said...

ராம்ஜி வருகைக்கு நன்றி, என் ஓட்டும் அல்காவுக்கே. உங்கள் கருத்து பெரும்பாலானவர்களின் கருத்தாக இல்லையே என்பதுதான் என் ஆதங்கம்.

பித்தன் said...

போட்டின்னு வரும்போது மொழி மதம், இனம் எல்லாம் ரெண்டாம் பட்சமாகி விடுகிறது, அந்த விதத்தில் நானும் இதை வரவேற்கிறேன். எல்லாம் சரி, நம்ம வீட்டுப் பிள்ளைகளை வளர்த்தேடுத்தப் பிறகுதான் மற்ற பிள்ளைகளைப் பார்க்க முடியும். ஒரு தந்தையாய் வருத்தமே!! வாருங்கள் தளிர்களே அடுத்தமுறை வென்றிடலாம்.

ஜோதிஜி said...

பொருத்தமான திறமையான குழந்தை அல்லது பெண் அல்கா. சந்தேகம் என்பதே வேண்டாம்.

hayyram said...

// முலையிலே// என்றல்லாமல் "முளையிலேயே" என்றிருக்க வேண்டும் என நினைக்கிறேன். சரிதானா எனக்கூறுங்கள்!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இன்றுதான் பார்த்தேன்.. ஆகா.. நல்ல பாடும் திறமைகள்..

கும்மாச்சி said...

அண்ணே முலையிலே தெரியும் என்ற நையாண்டியை கவனிக்க தவறிவிட்டீர்கள். இன்றைய தொகுப்பாளர்கள் முளையிலே தெரியும் என்பதை முலையிலே என்று தான் சொல்கிறார்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

என் வாக்கும் "அல்காவுக்கே"
//
// முலையிலே// என்றல்லாமல் "முளையிலேயே" என்றிருக்க வேண்டும் என நினைக்கிறேன். சரிதானா எனக்கூறுங்கள்?//


என்ன HAYyram விலையை விட்டுவிட்டு முலையைப்( முளை) பிடித்துள்ளார்.
தங்கள் எள்ளல் அருமை.

Chitra said...

இந்த பிரிவினை பாகு பாடெல்லாம் யார் விதைத்தது? யார் வளர்த்தது? யார் லாபமடைகிறார்கள்? சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம்.


....... எல்லாத்திலேயும் அரசியல் கைவண்ணம்தான்.... :-(

பனித்துளி சங்கர் said...

மிகவும் சிறப்பான பதிவு சிந்திக்கத்தூண்டும் பல நிகழ்வுகளை பதிவு செய்து இருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி

சும்மா.. டைம் பாஸ் said...

If they had this title as South India's favorite voice then its acceptable. Since they say Tamilnadu's favorite voice then it should be someone from Tamilnadu only other wise it is cheating

ஆல் இன் ஆல் அழகு ராஜா said...

திறமை எங்கிருந்தாலும் மதிப்பதில் தவறில்லை..

அப்படி மதிக்கதவறினால் ஜானகி, சித்ரா போன்றவர்களை நாம் இழந்திருப்போம்.

எங்கெங்கு காணின்னும் அரசியல்...

ரிஷபன் said...

இந்த பிரிவினை பாகு பாடெல்லாம் யார் விதைத்தது? யார் வளர்த்தது? யார் லாபமடைகிறார்கள்?
சிந்திக்க வேண்டிய விஷயம்தான்.

Unknown said...

this is not fair i'm not against the fact that alka is super talented but she has had enough exposure already. same case with roshan, nithyashree and srinisha maybe they could encourage a new one like the one who is first time stage performer

Subha said...

Vijay TV portrays that she is a breed apart...If every one of you accept it then she should be crowned differently and not to compete with the average participants...
Though she is a good singer but the way the judges and the bulky host make us hate her....

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.