Wednesday 10 November 2010

சுவரொட்டியும் சிங்கார சென்னையும்...................

“ஜல்” புயல் ஜல்சா பண்ணுதுன்னு சொல்லி தோஹாவில் விமானம் கிளம்ப ஐந்து மணி நேரம் தாமதம். திண்டாடி தெரு பொறுக்கி ஒரு வழியாக சிங்கார சென்னை வந்து சேர்ந்தேன். எல்லா வண்டியும் ஒரே நேரத்தில் வந்ததால் நம்ம இமிக்ரேஷன் முழி பிதுங்கி ஒரே குழப்பம். ஒரு வழியாக வெளியே வந்தால் டாக்ஸி இல்லை. புயலுக்கான அறிகுறியே இல்லை. வெயில் பின்னிக்கொண்டிருந்தது. ஒரு மணி நேரம் தேவுடு காத்த பின் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தேன். கிண்டி மேம்பாலம் அருகே நம்ம மேயர் தலைமையில் பிளாக்பெர்ரி விளம்பரத்திற்கு கருப்பு மை பூசிக்கொண்டிருந்தார்கள். டிவி கமெரா வைத்து படம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.


இன்னா விஷயம் என்று சாரதியை கேட்டா, எல்லா விளம்பரத்தையும் அகற்றுகிரார்கள் என்றார். சுவரொட்டி விளம்பர பலகைகள் எல்லாம் அகற்றப்போவதாக சென்னை மாநகராட்சி சொல்லி இருக்கிறார்களாம்.

சுவரொட்டியில்லாத சென்னை கேட்க நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் இது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை. இந்த சுவரொட்டி விளம்பரங்கள் ஒரு பெரிய தொழிற்பேட்டை. சமீப காலமாக, மைனாவிற்கு மஞ்சள் நீராட்டு, மங்கத்தாவிற்கு முதலிரவு, இல்லற வாழ்வில் இணையும் இன்பாவிற்கு வாழ்த்து என்று எல்லா சுவர்களும் பல்லிளிக்கின்றன. மேலும் தேர்தல் நெருங்கும் இந்நேரம் சுவரொட்டி, பெயிண்ட் வியாபாரம் களை கட்டும் இது தவிர்க்கப்படுமா என்பது சந்தேகமே.

என் நண்பர்கள் விளம்பர வியாபாரத்தில் கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் “பூவா”விற்கு என்ன செய்வார்களோ தெரியவில்லை. அந்தக் கவலையுடனே வீட்டிற்கு வந்து மாலை “கஜா”விற்கு அலை பேசினேன்.

இன்னாடா உன் தொழிலுக்கு பிரச்சினை போல இருக்கே என்றேன். எவன் சொன்னான், அட போடா போக்கத்தவனே இப்போதாண்டா இருபது லட்சத்திற்கு ஒப்பந்தம் போட்டிருக்கேன், சுவரொட்டியில்லா சென்னை சும்மா “ஓளவாகட்டிக்கு” என்றான்.

Follow kummachi on Twitter

Post Comment

8 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சென்னைய சிங்காரம் பன்ணிடுவாங்களோனு பயந்தே போயிட்டேன்..

அப்ப சரி..ஹா.ஹா..

கும்மாச்சி said...

பட்டாபட்டி வருகைக்கு நன்றி. இன்னா ரொம்ப நாளா கடைப்பக்கம் காணோம்.

கோவி.கண்ணன் said...

தமிழ்நாட்டை கருணாநிதி நாடு ன்னு மாற்றனுமா ? அவ்வ்வ்வ்வ்

கும்மாச்சி said...

கண்ணன், பொல்லாதவங்க செஞ்சாலும் செய்வாங்க.

Chitra said...

:-))

sarathy said...

அட ... சுவரொட்டியில்லா சென்னை... the charm of singara chennai will be lost then!!!!!

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

சுவரொட்டி இல்லாத சென்னைனா அது நல்லாத்தான் இருக்கும், ஆனால் விளம்பரங்கள் இல்லாத சென்னை நல்லா இருக்காது.

என்ன தான் இருந்தாலும் கிராமதிலிருந்து வர்ரவுகளுக்கு இந்த விளம்பரத்த பாத்தே மலச்சு போய் நிப்பாய்ங்கள்ள

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கும்மாச்சி said...

பட்டாபட்டி வருகைக்கு நன்றி. இன்னா ரொம்ப நாளா கடைப்பக்கம் காணோம்.

//

வந்துட்டுத்தான் இருக்கேன் பாஸ்.. கருக்கல்ல முக்காடு போட்டுட்டு வந்து படிச்சுட்டு ஓடிப்புடுவேன்..

ஆணி அதிகமாயிடுச்சு.. அதனால கமெண்ஸ் போடமுடியலே...

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.