Thursday 15 May 2014

காம்பைப் பிடித்து பால் கறப்பதும்.............

 ரசித்த கீச்சுகள்

வாழ்க்கையில் நம் வெற்றியை தடுப்பது வெட்கமும் கூச்சமும்தான், எனவே கூச்சப்படாமல் கேட்போம் அண்ணே அக்கா என்ன ஃபாலோ பண்ணுங்கன்னு---------குருபிரபாகரன்.

சென்னைல அக்னி வெயில் கொளுத்துது  இதுல கரண்ட் வேறே இல்ல கொஞ்சம் கூட ஈவு  இரக்கமில்லாத அரசு------------சந்திரா தங்கராஜ் 

கடைசிவரை சென்னை 28 வசந்த் போல வயிறுமுட்ட குடித்தும் ஸ்டடியாக இருந்த மச்சான் சுப்புணியை வாழ்த்த வயதில்ல வணங்குகிறோம்:-)))----கர்ணா 

குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால்  குட்டுப்படவேண்டும் என்பதற்காக மோதிரம் அணிந்திருந்த  ஒருவரிடம் வம்பிழுத்தேன் "பொளேர்: என்று அறைந்துவிட்டார்------------மாண்டியா


ஆபீசுக்கு நீட்டா அயன் பண்ணின ட்ரெஸ்ல வரவன 4 பொண்ணுங்கதான் பாக்குறாங்க அதே அயன் பண்ணாம சுருங்கிய ட்ரெஸ்ல வரவன 40 பொண்ணுங்க பாக்குறாங்க------------கருத்து கந்தன் 

மாட்டின் கொம்பை பிடித்து அடக்குவது மிருகவதை என்றால் காம்பைப் பிடித்து பால் கறப்பதும் மிருகவதைதான்# எப்படியெல்லாம் யோசிக்கறாய்ங்க-------யாரோ--------கும்மாச்சி

கலைஞரின் பிறந்தநாளை எழுச்சியோடு கொண்டாடவேண்டும் --மு.க.ஸ்டாலின்# எல்லா கோவில்களிலும் சிறப்பு அர்ச்சனையும் தீபாராதனையும் ஏற்பாடு பண்ணிடலாம்---------கருத்து கந்தன் 

புதிய ராணுவ தளபதியாக தல்பீர் சிங் தேர்வு, அதுக்கு  விஜயகாந்தை ஏன்யா இழுக்குறீங்க--------------V. ஸ்ரீதர் 

தமிழர்களுக்கு தமிழ் மீதுள்ள  பாசம் பாராட்டுக்குரியது --------சித்தராமையா# இதெல்லாம் வக்கனையா சொல்வாரு குடிக்க தண்ணி கேட்டா மட்டும் தரமாட்டாரு----------கணியன் 

இன்னும் இரண்டு நாட்களில் இந்தியனின் தலைவிதி அடுத்த 5 வருடத்திற்கு எவன் கூட இருக்கப்போவுதோ. மோடிசார் டவரில் வைஃபை வாக்குறுதி மறந்துடாதீய-----------ராஸ்கோலு 

அன்பே! சித்ரா பவுர்ணமி அன்னைக்கு முத்தம் அளித்தால் குடும்பம் சுபிட்சம் அடையுமாம்.காசா? பணமா? கொடுத்துத்தான் பாரேன்-----சி.பி. செந்தில்குமார் 

 பெங்களூர்ல குருமா எப்படி வெப்பீங்கனுதான் கேட்டேன்! ஒரு குண்டா குழம்பும், ஒரு கப்பு கீரைப் பொரியலும் கொண்டு வந்து குடுத்துட்டுப் போறாங்க!------------மழை!!

 

Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

சேக்காளி said...

//அன்பே! சித்ரா பவுர்ணமி அன்னைக்கு முத்தம் அளித்தால் குடும்பம் சுபிட்சம் அடையுமாம்.காசா? பணமா? கொடுத்துத்தான் பாரேன்//
வருசத்துக்கொரு தடவை தான் சித்ரா பௌர்ணமி வரும். பௌர்ணமி தினத்தன்று என்றிருந்தால் மாதமாதம் மல்லிகை பூ வாசம் கிட்டும்.
அன்பே ! சித்ரா தானே . அன்பே சித்ரா ! இல்லையல்லவா?

”தளிர் சுரேஷ்” said...

சூப்பர் கீச்சுக்கள்! பகிர்வுக்கு நன்றி!

கும்மாச்சி said...

சேக்காளி வருகைக்கு நன்றி.

ராஜி said...

எப்படிலாம் யோசிக்குறாங்க!!

கும்மாச்சி said...

ராஜி வருகைக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

அடேங்கப்பா...! சிந்தனை செம...!

அம்பாளடியாள் said...

ரசிக்கவும் சிரிக்கவும் உகர்ந்த பகிர்வு அருமை .வாழ்த்துக்கள் சகோ .

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.