Friday, 28 November 2014

செய்திகளும் லொள்ளுகளும்

கத்தி படத்தில் லைகா பெயரைப் போடலாம் மீறி அச்சுறுத்தினால் தண்டனை-நீதி மன்றம் அதிரடி உத்தரவு.

இனி நீ வயசுக்கு வந்தா என்ன? வரலேன்னா என்ன?

ஒரு நடிகரை இருபது வருஷமாவா  அரசியலுக்கு கூப்பிடுவீங்க-பாரதிராஜா சாட்டையடி.

ஒவ்வொரு பட ரிலீசுக்கும் நூறு வருஷமானாலும் கூப்பிடுவாங்க-ரசிகர்கள் பதிலடி.

உனக்கு தைர்யம் இருந்தால் சட்டசபையில் நான் அமர ஏற்பாடு செய்துவிட்டு தகவலனுப்புங்கள் -கருணாநிதி

சீட்டு இருந்தால் சொல்லியனுப்பு தள்ளுவண்டி கிடைத்தால் வருகிறேன்.

ஸ்டாலினைப் பாத்துட்டாரு தீ போல் பரவிய செய்தியால் பதட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ.

ஐயோ நான் பார்க்கலாமா அவருதான் பார்த்தாரு.............ஊ...ஊ..ஊ..

பா.ஜ.க.வுக்கு ரஜினி வந்தால்தான் பலம் என்பதை ஏற்கமுடியாது--தமிழிசை

அவங்க வீட்டு சுண்டல் கொண்டுவந்தால் ஒரு வேளை பலம் வரலாம்.

சோனியா ராகுலை சந்தித்து காங்கிரசில் இணைந்தார் குஷ்பு.

இதுக்கு முன்னாடி இந்த கார ஜமீன்தார் வச்சிருந்தாரு, அதுக்கு முன்ன ஸ்வப்பனசுந்தரி வச்சிருந்தாக...........ஸ்வப்பனசுந்தரிய..........படுவா ஏண்டா என்னப்பாத்து அந்த கேள்வி கேட்ட.........

நல்லகண்ணு, நெடுமாறனுக்கு இல்லாத தகுதியா ரஜினிக்கு இருக்கு?-சீமான்

ஆமா அவிகள வச்சி படையப்பா-2 எடுங்க.

கருணாநிதிக்கு பினாமியின் அர்த்தம் தெரியவில்ல-ஓ.பி.எஸ்.

அஹான் அம்மாகிட்டேயும் வைகுண்டராஜன் கிட்டேயும் கேட்டா சொல்லுவாக விளக்கம்.


Follow kummachi on Twitter

Post Comment

14 comments:

Ponniyinselvan/karthikeyan said...

கும்மாச்சியின் லொள்ளு தாங்கலப்பா. நன்றாக ரசிக்கும்படி இருக்கிறது.தொடரவும்.அன்புடன்,
கார்த்திக் அம்மா
கார்த்திக் அம்மா

KILLERGEE Devakottai said...

எல்லாப்பயல்களையும் இந்தப்போடு போடுறீங்களே,, நண்பா.

கும்மாச்சி said...

கார்த்திகேயன் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

கில்லர்ஜி வருகைக்கு நன்றி.

Ponniyinselvan/karthikeyan said...

கார்த்திகேயன் அல்ல.கார்த்தியின் அம்மா .கார்த்தி இந்த உலகை விட்டு பிரிந்த பின் அவனது ப்ளாக்கை தொடரும் ஒரு பேதைத் தாய். ஆனால் எல்லோரும் கார்த்தி இந்த உலகில்தான் இருக்கிறான் என்று நினைத்து அவனுடன் உரையாட வேண்டும் என்பதே என் எண்ணம் .ஓ ரளவிற்கு அது நிறைவேறுகிறது.
கார்த்திக் அம்மா

கும்மாச்சி said...

கார்த்தி அம்மா,

கார்த்திகேயன் உலகை விட்டு பிரிந்த செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது. நாங்கள் முதலில் ப்ளாக் ஆரம்பித்த பொழுது ஒருவரை ஒருவர் கருத்துப் பெட்டியில் சந்தித்துக்கொள்வோம். பின்பு வெகுநேர இடைவெளிக்குப் பின்னர் கார்த்திகேயன் கருத்து இன்றுதான் வந்தது.
அம்மா தங்களது மகனுடைய நண்பர்கள் அவனுடன் உரையாடவேண்டும் என்று தங்களது என்னத்தை நாங்கள் நிறைவேற்றுகிறோம்.

கார்த்திகேயன் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். மகனைப் பிரிந்து வாடும் தங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் இந்த இழப்பை தாங்கும் சக்தியை வழங்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.

Geetha said...

ஆத்தாடி ....ஆனாலும் ரசித்தேன்.
கார்த்திகேயன் எல்லோர் மனதிலும் வாழ்வாங்க அம்மா.

கும்மாச்சி said...

கீதா வருகைக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் said...

அனைத்தும் அருமை.

Thulasidharan V Thillaiakathu said...

ஹ்ஹஹ் செமயா காச்சிருக்கீங்க கும்மாச்சி! ரசித்தோம்.....

கும்மாச்சி said...

குமார் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி துளசிதரன்.

”தளிர் சுரேஷ்” said...

லொள்ளூ பதில்கள் சூப்பர்!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.