Thursday 15 January 2015

டீ வித் முனியம்மா பார்ட்- 28

டேய் மீச பொங்கலுக்கு இன்னாடா கடில போட்டுக்கிற, புச்சா இன்னா கீது, உனுக்கு இன்னா தெரியும், அதே தண்ணி டீ, பொறை, இட்லி, வட, வடகறி உட்டா இன்னா புச்சா போடப்போற..........

இந்தா மினிமா நிங்களுக்கு இன்னா வேணம், பற.

அடேய் இன்னிக்கு தமிழர் திருநாள் டா தமியில பேசு இல்ல கம்முன்னு கெட.

வாடா லோகு, செல்வம் இன்னா பொங்கலுக்கு புது துணி மாட்டிகினு சொம்மா ஸோக்காகீறிங்க.

பாய் வூட்டாண்ட வா பாய் உனுக்கு பொங்கலும், வடையும் தரேன், நீ பக்ரீத்துக்கு பிரியாணி போடுற நாங்க உனுக்கு பொங்கலு தாரோம்.

சரி முனிமா நாட்டுல இன்னா நடக்குது, கொஞ்ச நாளா எங்க தாராந்துகின, எங்கே போயிருந்த,

அட எங்க  லிங்கம் சாரு நான் போவேன், கடையாண்ட ஒரே வேல, மார்கழி மாசம் பாரு கோயிலாண்ட கூட்டம் அள்ளுது, இப்போ காசு பாத்தாதான் உண்டு.

சரி முனிமா சொத்து குவிப்பு வயக்கு எப்படி போவுது.

பெங்களுரு ஹைகோர்ட்டுல வாதத்த தொடங்கிட்டானுங்க, குன்ஹா தீர்ப்ப தப்பா எய்திகிராறு, எங்க அம்மாவ பத்தி அவருக்கு ஒன்நியம் தெரியாதுன்னு அம்மா வக்கீலுங்க கொரலு உடுரானுங்க.

அப்பால........

அப்பால நாடாரு அன்பயகன் வக்கீலுங்க உள்ளார வரசொல்ல, அன்பயகன் யாரு? அவருக்கும் இந்த வயக்குக்கும் இன்னா கணிக்சனு, கம்முன்னு போங்கன்னு கடுப்பாய் கிறாரு.

அத்த வுடு முனிமா அம்மா வெளிய வருவாங்களா?

வந்துருவாங்கன்னு தான் ரத்தத்தின் ரத்தம் சொல்லிகிரானுங்க. அதுல ஒரு ரத்தம் சொல்லுது புது ஜட்ஜுக்கு நூறு சியாம் அல்லாம் மேட்டரும் ஓவராம், அப்பால பாரு ன்னு சொல்லிட்டுப் போறான்.

இவன்தான் தூக்கி போய் குடுத்தான் போல. அல்லாம் துட்டு பேசும் முனிமா.

அத்த விடுடா லோகு.

நம்ம ஓ.பி. இன்னா சொல்றாரு?.

அவரு இன்னா சொல்லுவாரு, அம்மா வரங்காட்டியும் சொம்மா குந்திகினு கீறாரு.

முனிம்மா தரூரு கேசு இன்னாச்சு?

அந்தம்மா சுனந்தாவ வெசம் வச்சி கொன்னுகீரங்கன்னு சி.பி. ஐ சொல்லுது. அல்லாம் பெரிய இடத்து மேட்டரு. நமக்கு இன்னா?

முனிம்மா பொங்கலுக்கு இன்னா படம் வருது.......

டேய் பயக்கட உனுக்கு தெரியாது, சங்கரு படம் வந்துகீதுடா.

சொம்மா கேட்டேன் முனிம்மா நான் படத்த போகி அன்னிக்கே பாத்துகினேன்.

எப்படி கீதுடா?

சூபரா கீது முனிமா, சங்கரு நல்லா எடுத்துகிறான், நம்ம சீயான் பையன் நடிப்புல பின்னிகிறான், அத பாத்து நானே மெர்சலாயிட்டேன்.

டேய் செல்வம் நடிப்புல மெர்சல் ஆனியா இல்ல படத்துல வர ஹீரோயினிய கண்டுகினு ஜொள்ளு வுட்டு மெர்சலானியா?.

தொ சொம்மா கலாய்க்காத முனிமா? பாட்டெல்லாம் ஸோக்கா கீது, பூக்களே சற்று..........................ஓய்வெடுத்துக்க,,,,,,,,,,,அவ வந்துகினா அவ வந்துகினா.....

டேய் நிறுத்துடா.

வேறென்ன மேட்டரு முனிமா? டேய் இந்தாடா பேப்பர புச்சுகோ,  எனுக்கு வேலகீது. நீ நல்லா படம் பாத்துக்க.வரேன் லிங்கம் சார், பாய், நாடரு. டேய் பயக்கட நாளைக்கு கோயிலாண்ட வாடா கொம்புக்கு பெய்ண்ட்டு அடிச்சி பூ சுத்துறேன்.

த போ முனிம்மா வேலயப்பாரு, இந்த வயசுக்கு நக்கல பாரு.



Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

KILLERGEE Devakottai said...

தை ஜொள்ளு ஜில்லு

கும்மாச்சி said...

கில்லர்ஜி வருகைக்கு நன்றி.

நம்பள்கி said...

உங்க ஜொள்ளு படங்களை விட மினிம்மா ஓவியம் சூப்பர் நைனா!

கும்மாச்சி said...

டாங்க்ஸ்பா நம்பள்கி. பொங்கலு வாய்த்துபா..........

திண்டுக்கல் தனபாலன் said...

டக்கர்ப்பா....

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி. உங்களுக்கும் உங்களது குடும்பத்தாருக்கும் எங்களது பொங்கல் நல்வாழ்த்துகள்.

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

மச்சி ,(அல்ல அல்ல )மாச்சி ,....கொஞ்ச நாளா எங்க தாராந்துகின, எங்கே போயிருந்த,????//
தூள் கிளப்புரிங்கோ போங்கோ. தினமும் டீயையும் மினிம்மாவையும் எதிர்பார்க்கிறேன்.
kalakarthik

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.