Wednesday 5 August 2015

மது ஒழிப்பு மகாயுத்தம்

தமிழ்நாட்டில் இப்பொழுது ஒரு மகாயுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. மது ஒழிப்பு வேண்டி ஆதியிலிருந்தே பல போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தவர்களின் போராட்டங்கள் இப்பொழுது ஆடை அவிழ்த்து அம்மணமாக அலைகிறது. இல்லை துச்சாதனர்களால் துகிலுரியப்பட்டிருக்கின்றன.
இங்கு பார் வசதியும் போலிஸ் பாதுகாப்பும் உண்டு.

இப்பொழுது இந்தப் போராட்டம் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. ஆளும் கட்சி ஏற்கனவே இந்த யோசனையை விவாதித்தாகவும் அதை ஏதோ ஒரு எட்டப்பன் எதிரணியில் போட்டுக்கொடுக்க வந்தது "மது ஒழிப்பு போராட்டம்".

முழுமையான மது ஒழிப்பு சாத்தியமா? என்ற கேள்வி இப்பொழுது எல்லோரிடமும் உள்ளது. முழு மது ஒழிப்பு சாத்தியமா? என்பது ஒரு புறம் இருக்கட்டும், மதுவை அரசாங்கம் விற்க ஆரம்பிக்கும் முன் தமிழகம் எப்படி இருந்தது? மது அரசாங்கம் ஆரம்பித்தவுடன் இருந்த நிலை என்ன? இப்பொழுதைய நிலை என்ன? நாம் சற்று சிந்திக்க வேண்டும்.
குடிக்கிறவங்களுக்கு ஒரு பிரச்சினையும் இருக்கக்கூடாது......செய்வீங்களா? செய்வீங்களா?

தனியாரிடம் மது விற்பனை இருந்த பொழுது நிலைமை ஒரளவு கட்டுக்கு அடங்கி இருந்தது. அரசாங்கம் கையிலெடுத்து சில்லறை விற்பனை ஆரம்பித்தவுடனும் அவ்வளவாக பிரச்சனை இல்லை. எப்பொழுது இலவசம், விலையில்லா பொருட்கள் தேர்தல் உதவியால் சந்தைக்கு வந்தவுடன் பிரச்சனை தலை தூக்கியது.

இலவசங்கள் கொடுக்க அரசுக்கு அபரிமிதமான வருமானம் தேவை, அதற்கு மது விற்பனை கைகொடுக்கிறது என்றால் அது மிகையாகாது. அரசாங்கம் ஓரளவுக்கு கடனாளியாகாமல் இருக்க மது விற்பனையில் இலக்கு, நூறு மீட்டருக்கு ஒரு கடை என்று வியாவாரம் பெருக ஆரம்பித்தது. எத்துணையோ பேர் அறிவுறுத்தியும் போராட்டங்கள் நடத்தியும், வழிப்பாட்டுதலங்கள், பள்ளிகளு அருகிலேயே மதுக்கடைகள் என்று அரசாங்கம் திறந்துகொண்டே விற்பனையை அதிகரித்தது. விற்பனை ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கமிஷன் தரப்பட்டது, அவர்கள் எல்லோரிடமும் விற்பனையை தொடங்கினார்கள், இதற்கு சிறுவர், சிறுமியர் விதிவிலக்கு அல்ல.

அண்டை மாநிலங்களில் மது விற்பனை இருக்கிறது, ஏன் இந்தியாவில் இரண்டு மூன்று மாநிலங்கள் தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் மது விற்பனை இருக்கிறது. ஆனால் அங்கு பட்டப்பகலில் மது அருந்திவிட்டு ஒரு தெருவிற்கு நான்கு பேர் மட்டையாகும் "மன்னுளிப்பாம்புகளை" பார்க்க முடியாது. ஏன்? இந்தக் கேள்விக்கு நம் எல்லோருக்கும் பதில் தெரியும்.
ஆஹா க்வாட்டர் விட்டு மல்லாக்க படுக்கறது ஆனந்தம்.........

வேலையில்லாது எல்லாம் கிடைக்க வழி செய்தால் வரும் காசை எப்படி செலவழிப்பது. இந்த மன்னுளிப்பாம்புகள் எல்லாம் பெரும்பாலும் வெட்டிதான்........அவர்கள் குடும்பத்தில் யாரோ ஒருவர் சம்பாரிக்கும் காசுதான் இங்கு சரக்காக ஏறி மட்டையடிக்க வைக்கிறது.........இதர செலவுகளுக்கு இருக்கவே இருக்கிறது இலவசங்கள்............
ஒ இது மண்ணுளி இல்லையோ? வேறே வகை போலுள்ளது.........

இப்பொழுது போராட்டம் என்ற பெயரில் கடைகள் சூறையாடப்படுகின்றன? அடித்து நொறுக்கப்பட்ட எல்லா கடைகளிலிருந்தும் போராட்டக்காரர்கள் கையில் அகப்பட்டதை எடுத்துக் கொண்டு ஓடியதை பார்க்கமுடிந்தது.

அரசாங்கம் கடைகளுக்கு பாதுகாப்பு கொடுத்தது இப்பொழுது கேலிக்குரியதாகிவிட்டது. சமூக வலைத்தளங்களில் அரசாங்க பாதுகாப்பை வைத்து ஆளாளுக்கு கலாய்த்துக்கொண்டிருக்கின்றனர்.
தலைவரே நல்லா படியுங்க, அப்புறம் கடைய மூடலாம்.........
ஆகமொத்தம் மதுவிலக்கு என்பது இப்பொழுது நல்ல அரசியல் வியாபாரம், தேர்தல் வரை ஆளும் கட்சிக்கு குடைச்சல் கொடுக்க இது ஒரு வழி என்று எதிர்கட்சிகள் கையிலெடுத்திருக்கின்றன.

மதுவை தவிர வேறு பிரச்சினைகள் இவர்கள் கண்களுக்கு இப்பொழுது தெரியாது.

எல்லாம் தேர்தல் மாயம்...........






Follow kummachi on Twitter

Post Comment

8 comments:

KILLERGEE Devakottai said...

இவங்கே இப்படித்தான் பாஸூ சொல்லிக்கிட்டே இருப்பாங்கே....
த.ம 1

கும்மாச்சி said...

கில்லர்ஜி வருகைக்கு நன்றி. மதுவிலக்கு சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.

bandhu said...

ஒரேடியாக எலைட் பார்கள் மட்டும் திறந்துவிட்டு மற்றவை எல்லாவற்றையும் மூடி விடுவார்கள் என நினைக்கிறேன்... தேர்தல் வரையாவது!

மது விற்பனை என்ற பண்டோரா பெட்டியை திறந்தாகி விட்டது.. எப்படி மூடுவது?

வெங்கட் நாகராஜ் said...

இலவசம் பெறுவதை மக்கள் விட வேண்டும். கூடவே மது விற்பனையும் தடை செய்யப்பட வேண்டும்... செய்வார்களா?

கும்மாச்சி said...

இப்பொழுது ஆளுங்கட்சி எதை செய்தாலும் அது அவர்களுக்கே வைத்துக்கொள்ளும் ஆப்புதான், எலைட் கடைகள் திறந்தாலும் பிரச்சினைதான்.

தி.தமிழ் இளங்கோ said...

எப்பக்கமும் சாயாது நியாயமாகவே எழுதி இருக்கிறீர்கள். நீங்கள் சொல்வதைப் போல
/// அண்டை மாநிலங்களில் மது விற்பனை இருக்கிறது, ஏன் இந்தியாவில் இரண்டு மூன்று மாநிலங்கள் தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் மது விற்பனை இருக்கிறது. ஆனால் அங்கு பட்டப்பகலில் மது அருந்திவிட்டு ஒரு தெருவிற்கு நான்கு பேர் மட்டையாகும் "மன்னுளிப்பாம்புகளை" பார்க்க முடியாது. ஏன்? ///

என்ற கேள்வி சிந்திக்க வைத்தது. BANDHU அவர்கள் சொன்னதைப் போல எலைட்பாரோடு இப்போதைக்கு நிறுத்திக் கொள்வார்கள்.

Mahesh said...

எல்லாம் தேர்தல் மாயம்...........///

sariyaa sollittinga sir..

நெல்லைத் தமிழன் said...

தமிழ்னாட்டில் இயல்பான வளர்ச்சி இல்லை. டாஸ்மாக்கைத் தவிர வேறு வழியில்லை. பெண்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள் என்பதால் கிண்டல் செய்வதற்கு உரிமை இருக்கிறதா? டாஸ்மாக் திறந்ததால் குடிப்பவர்களின் புத்தி எங்கே போயிற்று?

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.