Wednesday 4 January 2017

கலக்கல் காக்டெயில் -176

"மினி"ம்மா நாடகங்கள் 

டிசம்பர் ஆறாம் தேதிக்குப் பிறகு தமிழ் நாட்டு அரசியலில் புதுபுது நாடகங்கள் நாளொருமேனி பொழுதொரு வண்ணமுமாக அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

கட்சியைத தோற்றுவித்தவர் இறந்த பொழுது சட்டசபையில் குடுமிப்பிடி சண்டையிட்டு கட்சி இரண்டாகி இலையை தொலைத்து சேவல் புறா எல்லாம் அடித்து 14 ஆண்டு காலம் வனவாசம் இருந்தவரை அரியணை ஏற்றினார்கள்.

இந்த முறை கட்சியைக் காத்தவர் நிரந்தரமாக உறங்கிவிட்டார், இப்பொழுது கட்சியையும் ஆட்சியையும் பிடிக்க ஒரு கொள்ளைக்கூட்டம் காத்திருக்கிறது. முதலில் கட்சியை பிடிக்க முதல் கட்ட காட்சிகள் அரங்கேறின. இனி ஆட்சியை பிடிக்க அடிமைகள் அன்றாடம் தோட்டத்திற்கு வரவழைக்கப்பட்டு காலில் விழுந்து கதற வைக்கப்படுகின்றனர்.

அவங்களுக்கு இஷ்டம் இல்லையாமா...........ஏதோ இவங்க அழுவுறதுனால ஏத்துக்கப்போறாங்களாமா............

மினிம்மாவை பொம்மையாக்கி ஆட்டுவிக்க பின்னால் ஒரு கூட்டம் காத்திருக்கிறது.

ஆட்டுவித்தால் ஆடுகிற ஆள் மாதிரியும் மினிம்மாவை தெரியவில்லை..........இன்னும் நான்கரை ஆண்டுகளில் என்ன என்ன நடக்கப் போகிறதோ?.............

வருமான வரி சோதனைகள் சொல்வதென்ன? 

ருமான வரி  அதிகாரிகள் சில நாட்களாக தமிழ்நாட்டில் டேரா போட்டு ரவுண்டு கட்டி அடித்துக்கொண்டிருக்கிறார்கள். பொதுப்பணித்துறை காண்டிராக்ட்டர் முதலில் சிக்கினார். அவரை தொடர்ந்து தலைமை செயலர் என்று சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் வளைத்தது வருமான வரித்துறை. இதற்கெல்லாம் அரசியல் சாயம் பூசப்பட்டாலும் பிடிபட்ட தொகையும் தங்கமும் பிரமிக்க வைக்கிறது. என்னதான் வழக்கு வாய்தா என்று இவர்கள் இழுத்தடித்து ஜாமீனில்வெளியே இருந்து சேர்த்துவைத்த துட்டை அனுபவித்தாலும் போகும்பொழுது என்னமோ கொண்டு செல்லப் போவதில்லை.

எல்லோரையும் தன் கால்களில் விழவைத்தவர் தான் கால்களைக்கூட கொண்டு செல்லவில்லை என்ற பஞ்சாயத்து இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

ரசித்த கவிதை 


அந்தக் கூட்டத்தில்
யாரும் யாரைவிடவும்
கீழோ மேலோ இல்லை

மிகை நடிப்பில்
மிருதுவாகக் காட்டிக்கொள்வதில்
ஒப்பனையில்
ஒப்பாரிவைப்பதில்
யாரும் யாருக்கும்
கூடுதலோ குறைவோ
இல்லை

ஒரு பொருளை
ஒரு பதவியைப்
பறிப்பதிலும்
பங்கிட்டுக் கொள்வதிலும்கூட
சமமாகவே இருக்கிறார்கள்
சகலரும்

பாதத்தில் கிடக்க
பாவம்போல் நடக்க
சொன்னதைச் செய்ய
சூழலுக்கேற்ப ஒத்தூத
பழகியிருக்கிறார்கள்
ஒருவரைப்போலவே
இன்னொருவரும்

இப்போதுள்ள சிக்கல்
ஒரே மாதிரியானவர்களில்
ஒருவரைத் தேர்ந்தெடுப்பது
காத்திருப்போம்.........
எல்லோரும்  சேர்ந்து
யாரோ ஒருவரைத்
தள்ளத்தானே போகிறார்கள்
குழியில்

அல்லது

எல்லோரும் சேர்ந்து
ஒருவரைத் தள்ள
பறித்துகொண்டிருக்கிறார்கள்
குழியை..

நன்றி: யுகபாரதி


தமிழ் சினிமா 


சமீபத்தில் வந்த தமிழ் நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனித்து நிற்கிறார். ஐந்து வருடங்களுக்கு முன்பு "அவர்களும் இவர்களும்" படத்தில்அறிமுகமாகி கிட்டத்தட்ட 27 படங்களில் நடித்துள்ளார்.  அடுத்து இரண்டு மூன்று படங்களில் நடித்தப் பிறகு "அட்டக்கத்தி" படத்தின் மூலம் பிரபலாமானார். பின்பு ரம்மி, காக்கமுட்டை படங்களில் இவருடைய திறமை பாராட்டப்பட்டது, சொந்தக்குரலில் தமிழ் பேசி நடிக்கும் ஒரு நல்ல நடிகை. சன் தொலைக்கட்சியில் அசத்தப்போவது  யாரு நிகழ்ச்சி தொகுப்பாளினியாகத் தொடங்கி திரைத்துறையில்  நுழைந்து நல்ல முன்னேற்றம். தமிழ் திரையுலகில்  கவனிக்கப்பட வேண்டியவர்.



Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

யுகபாரதி அவர்கள் இணைப்பை (வலைத்தளம்...?) கொடுங்கள் ஜி...

கும்மாச்சி said...

தனபாலன் யுகபாரதி கவிதையை விகடனில் படித்தேன். வலைதள இணைப்பு என்னிடம் இல்லை, கிடைத்தால் நிச்ச்சய்கம் பகிர்கிறேன்.

Yarlpavanan said...

அருமையான பதிவு

மாதேவி said...

"மினிம்மா" ஹா......ஹா.

Unknown said...

கலக்கிடீங்க! Cocktail நல்லா இருந்திச்சி.

”தளிர் சுரேஷ்” said...

கலிகாலம் தொடங்கி விட்டது என்று எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்! யாருடைய ஆட்சியும் தேனாறும் பாலாறும் ஓடப்போவது இல்லை! இவ்வளவு சேர்த்தவர் எடுத்து போனது என்ன? இப்போது சேர்ப்பவருக்கும் இதே நிலைதான்! நிலையாமை ஒன்றே நிலையானது!

'பரிவை' சே.குமார் said...

கலக்கல் காக்டெயில்...
அருமை...

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.