Tuesday 5 April 2011

கலக்கல் காக்டெயில்-27

ஜெயிப்பவன் தோற்பான், தோற்பவன் ஜெயிப்பான்.........


உலகக் கோப்பையை நழுவ விட்டு தாய்நாடு திரும்பிய இலங்கை வீரர்களை வருத்தெடுத்துக் கொண்டிருக்கிறது சிங்கள ஊடகங்கள். முரளியின் மனைவி இந்தியன் என்பதால்தான் முரளி விக்கட் எடுக்கவில்லை என்று கூறுவது சிங்களக் காடையர்களின் அபத்ததிற்கு எடுத்துக்காட்டு. தோல்வி சங்கக்காரவின் ராஜினாமா வரை போயிருக்கிறது.

“சங்கா” பூவா தலையா போடும் பொழுதே தன் அழுகுணி ஆட்டத்தையும் அழுகையையும் தொடங்கிவிட்டார். அவர் தலை என்று சொன்னது அவருக்கே கேட்கவில்லை எனபது அபத்தம். இருநூறு வருட கிரிக்கட் சரித்திரத்தில் இருமுறை பூவா தலையா கேட்ட ஒரே வீரர் என்ற பெருமையை சங்கா பெறுகிறார். அவர்களுடைய தோல்வி அப்பொழுதே எழுதப்பட்டுவிட்டதாக தோன்றுகிறது. தோனியின் ரன் அவுட்டை கோட்டைவிட்ட சங்கா அப்பொழுதே கோப்பையை நழுவவிட்டுவிட்டார். முன்னாள் கிரிக்கட் வீரர் “பேடி” சொல்வதுபோல் தொன்று தொட்டே ஸ்ரீலங்கா இந்த அழுகுணி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிரார்கள்.

முளையிலேயே கிள்ளி எறியனும்

நம்ம ஊர் தேர்தல் களத்தில் இந்த நடிகர்கள், நடிகைகள் அடிக்கும் கூத்து தாங்கவில்லை. “குடை பிடிச்சவன் ஏற்றி விட்ட ஏணியை ஏசுகிறான்” என்று எதிரணி சொன்னாலும், “தண்ணியில மிதக்கிற கப்பலை ஓட்டுபவன் கேப்டன், எந்நேரமும் தண்ணியில மிதக்கிறவன் கேப்டன் இல்லை” என்று வாங்கிய காசுக்கு அதிகமாகவே கூவுகிறார் வைகைப் புயல். தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அவரை நல்ல வெயிட்டாக கவனிப்பார்கள் போல் தோன்றுகிறது.

கேப்டன் எப்பொழுது நிதானத்தில் இருப்பார் என்று அவர் பேச்சை கேட்பவர்கள் சொல்ல முடியாது.

இதற்கு மேல் கொசுறாக குஷ்பு, விந்தியா என்று ஒரு கூட்டம் அவர்கள் பங்கிற்கு உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் புதிய அரசியல் வரவு “டாக்குட்டரு” அப்பா மதுபான தொழிற்சாலைக்கு லைசென்ஸ் கேட்டுதான் அம்மாவிற்கு பிரசாரம் செய்கிறார் என்று சொற்பமிருந்த ரசிகர்கள் அறிவாலயம் போய் விட்டார்கள்.

இவர்களை எல்லாம் முளையிலேயே கிள்ளி எறியனும். இல்லை என்றால் கொடி காலை சுற்றி கழுத்தறுக்கும்.

இந்த வார ஜொள்ளு


கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா?

அவனவன் மண்டை காய்கிற வெயிலில் வருந்திக் கொண்டிருக்க இந்த தேர்தல் கூத்தையும் சகிக்க வேண்டிய காரணத்தால் இந்த வார ஜொள்ளுப் படம் இரண்டு.





Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

Anonymous said...

கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா செம-;))

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சதீஷ்.

RayJaguar said...

aaha figure samma takkarupa. naakula niagara varuthu!!!! election comedy padu joru

சரியில்ல....... said...

இலங்கையின் தோல்வி குறித்து மலிங்கா (அதாங்க மாங்கா...) தெரிவித்த கருத்து...
"இந்தியா அண்ணா நாடு இலங்கை தம்பி நாடு... யாரு ஜெயிச்சா என்ன?"
இதைப்போல பாக்கிஸ்தானிடம் எதிர்பார்க்க முடியாது..... நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

sarathy said...

இரண்டு லட்டு (ஜொள்ளு) எங்கே இருந்தாலும், தின்ன ஆசை (ஜொள்ளு)தான்!
இலங்கை பரவாலை, தலைவா; ஆஸ்திரேலியா, பாக்கிஸ்தான் அழுகுணி ஆட்டம் கூட பார்க்கும் போது!
'கொடி காலை சுற்றி கழுத்தறுக்கும்' .... கால் steady ஆனால் தானே..... கழுத்து தெரிந்தால்தானே! பார்த்துக்கலாம் சாமி...

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.