Thursday 14 April 2011

தேர்தல் ஆணையம் ---------------பணம் கூரையிலே

எழுபத்தைந்து விழுக்காடு வாக்குப் பதிவாம் தமிழகத்தில், தேர்தல் ஆணையம் தன் .........தை தானே சொரிந்து கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் இம்முறை பண்ணிய கெடுபிடிகள் பொது மக்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. உண்மையான பணம் பட்டுவாடா செய்தவர்களை பிடிக்காமல், தினக்கூலிகளிடமும், சில்லறை வியாபாரிகளிடமும் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் ஆணையம் மார் தட்டிக்கொண்டிருக்கிறது.


ஆளும் கட்சி கொடுக்கிறார்கள் என்று எதிர் கட்சிகள் புகார் செய்தவுடன் அந்த இடத்தில் ஆஜராகியும், எதிர் கட்சிகள் கொடுக்கும் பொழுது அம்பேல் ஆனதும் ஊரறிந்த ரகசியமாகிவிட்டது. தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை மக்களின் மத்தியில் ஒரு கேள்விக் குறியே.

அமைதியாக தேர்தல் நடத்தியதற்கு தேர்தல் ஆணையம் பெருமை கொள்வதிலும் நூறு விழுக்காடு உண்மை இல்லை. மாநில அரசின் உதவி இல்லாமல் இது நடக்க சாத்தியம் இல்லை. இந்த முறை மக்களை விட மற்றைய சக்திகள் ஆளும் கட்சியை இறக்குவதில் மும்முரமாக இருப்பதாகத் தெரிகிறது.

இதை சொல்வதனால் நான் ஒன்றும் தி.மு. க அபிமானி அல்ல. தமிழ் நாட்டை பிடித்த இரு சனியன்கள்தான் இரு கழகமும் என்பது என் கருத்து. அ.தி.மு.க ஒன்றும் உத்தமாமான கட்சி இல்லை. தமிழ் நாட்டிற்கு விடிவு காலம் இந்தக் கழகங்களும், காங்கிரசும், மதவாதக் கட்சிகளும் இல்லாமல் புதியதாக (தொப்புள் தேய்க்கும் நடிகர்கள் தவிர்த்து) யாராவது வந்தால் தான் விடிவு காலம்.

“அவாள்” பத்திரிகைகள் எல்லாம் ஏதோ புதியதாக பண பட்டுவாடா இந்தத் தேர்தலில் தான் நடப்பது போல் எழுதுவது நகைச்சுவையின் உச்சக் கட்டம். அதற்கு “திருமங்கலம் பார்முலா” என்று நாமகரணம். பென்னாகரம் தேர்தலில் அ.தி.மு.க தலைமை கொடுத்த பணத்தை விநியோகம் செய்யாமல் “வட்டம்” “மாவட்டம்” சுருட்டிக் கொண்ட செய்தி அப்பொழுதே பேசப்பட்டது. “லட்டில் மூக்குத்தி”யை மறந்து விட்டார்கள் போலும்.

தி.மு.க பணம் கொடுக்காத இடங்களில் எல்லாம் “இந்தா அவர்களுக்கும் சேர்த்து நான் கொடுக்கிறேன்” என்று அ.தி.மு.க கொடுத்த காட்சியை பார்த்தவர்கள் பலர் உண்டு. இதைத் தவிர பேங்க் கணக்கில் போட்டு எ.டி.எம் மூலம் எடுக்க வசதி செய்த கட்சிகளும் உண்டு. நகைகளை மீட்டுத்தந்த சம்பவங்களும் அரங்கேறியது. பணம் வாங்காத வீட்டுக் கூரைகளில் சொருகிச் சென்றதாகவும் தகவல்.

அடுத்து மேற்கு வங்கத் தேர்தல் அங்கே தேர்தல் ஆணையம் என்ன பிடுங்கிறார்கள்? என்று பார்ப்போம்.

யார் ஆட்சிக்கு வருவார்கள்? என்ற தலை விதியை நிர்ணயம் செய்வது ஏழை எளிய மக்களின் வாக்குகளே. இந்த நாட்டில் படித்தவர்கள் தங்கள் வாக்குகளை தங்கள் அதி மேதாவித்தனத்தால் வீனாக்குதல் தொன்று தொட்டு நடந்து வரும் செயல். வாய் கிழிய பேசியும், தாள் கிழிய எழுதியும் தேர்தல் நாளன்று கவுந்தடித்து படுப்பது வழக்கம்.

தமிழ் நாட்டின் நிர்ணயிக்கப்பட்ட விதி அறிவிக்கப்படும் நாள் மே பதிமூன்று, பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow kummachi on Twitter

Post Comment

2 comments:

sarathy said...

உங்களின் (நம்) குமுறலுக்கு விடை கிடைக்குமா ... அல்லது விதி தொடருமா? பொறு, தமிழா..

RayJaguar said...

election commission konjam too much thaan!!! avanga admk vin adimai

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.