Monday 11 November 2013

அகில உலக அகிலாண்டேஸ்வரி தாய் அம்மா

அகில உலக அகிலாண்டேஸ்வரி தாயே, ஈழத்தாயே, காவிரித்தாயே, பாரதத்தாயே, வருங்கால பாரதமே, மாண்புமிகு அம்மா அவர்களே உங்களுக்கு தமிழ் நாட்டு சராசரி குடிமகனின் வணக்கமுங்க............

யோவ் சும்மா இருங்கபா இதுக்கெல்லாம் போயி பெஞ்ச் தட்டிக்கினு........

குளிர்கால கூட்டத்தொடர்னு சட்டசபையை ஒரு ஐந்து நாட்களுக்கு கூட்டினீங்க சரி, அத சரியா ஏன் இந்தவாரம் வச்சிங்க அப்படின்னு நாங்க கேள்வி கேட்க ஒன்னும் கட்டிங்க்வுட்டு கவுந்து படுக்குற கேனையனுங்க இல்ல.

பரப்பன ஆக்ராஹாரத்தில தலைய காட்ட வேணாமுன்னு இங்கனயே குந்திக்க வழின்னு இந்த கோவாலு பையன் சொன்னான், அவன்கேடக்குறான், கேப்மாரி பய.

சரி அத்த விடுங்க போன ஆட்சில போட்ட திட்டங்கள் எல்லாம் இப்போ திறப்பு விழாவிற்கு தயாராக கொடி ஆட்டிட்டு வந்திட்டீங்க.

நீங்க பதவி ஏற்றவுடனேயே மிச்சமிருக்கிற போன ஆட்சி மெட்ரோ ரயில் திட்டத்த அடக்கம் செய்திட்டு மோனோ ரயில் அப்படின்னு சொன்னிங்க, உங்க அல்லக்கைகளும் பென்ச் தட்டினாங்க, அந்த திட்டம் இன்னும் டெண்டர் லெவலிலேயே நிக்குது. இந்த திட்டம் தொடங்கப்படுமா இல்லை வெறும் பென்ச் தட்ட போட்ட திட்டமா? இப்படிதான் போன முறை ஆட்சிக்கு வந்த  பொழுது கடல் நீரை குடிநீராக்கும்  திட்டமுன்னு போட்டு ரஷ்யாக்காரன் வந்து நீங்க கேட்ட கமிஷனுக்கு பயந்து துண்டை காணோம்  துணிய காணோமுன்னு ஓடிட்டானுங்க.

சரி சட்ட சபை விஷயத்துக்கு வருவோம்..................இந்த ஐந்து நாட்களில் சட்டசபையில் என்ன கிழிச்சிங்கன்னு நீங்களே யோசித்துப் பாருங்க.....உங்க அல்லக்கை அமைச்சர்  முன்னாள் முதலமைச்சரை "தள்ளுவண்டி தாத்தா" என்று அவரது வயோதிக்கத்தை கிண்டலடிக்க, மற்ற அல்லக்கைகள் பென்ச் தட்டுகின்றனர். மற்றுமொரு அமைச்சர் எதிர் கட்சி தலைவரை "தண்ணி தொட்டி" என்று கிண்டலடிக்க அனைவரும் பென்ச் தட்டுகின்றனர். நீங்களும் அதை கேட்டு அகமகிழ்ந்து உங்களது எதிரிகளை தூற்றிப்பாடிய முதன்மை அல்லக்கைக்கு பரிசாக அமைச்சர் பதவி அளிக்கிறீங்க. நல்ல முன் உதாரணம்.

அம்மா,  டாஸ்மாக் கடை திறந்து மக்களுக்கு போதையை வாரிவழங்கும் உங்களது கட்சியில் உள்ளவர்களோ  இல்லை போன முறை ஆட்சி செய்தவர்களோ இதை பற்றி பேச அருகதை இல்லாதவர்கள். மேலும் உங்களது கட்சியில் உள்ளவர்கள் யாவரும் டாஸ்மாக் கடை பக்கம் தலைவைத்து படுக்காதவர்கள் என்று நீங்கள் "வக்கிரகாளியம்மன்" மீது சத்தியம் செய்தாலும் மக்கள் நம்பத்தயாராக இல்லை.

இது என்ன சட்ட சபையா இல்லை டாஸ்மாக் பாரா? அம்மா டாஸ்மாக் பாரில் கூட போதையில் ஒரளவிற்கு கண்ணியம் காக்கப்படுகின்றது என்று சொன்னால் ஆச்சர்யமில்லை.

தமிழகம் இந்த முப்பது வருடங்கள் கண்ட "கழக"ங்கள் ஆட்சியில்  "கடமை, கணியம், கட்டுப்பாடு" இந்த மூன்று வார்த்தைகளுக்கும் உண்மையான அர்த்தத்தை உணர்த்திய பொற்காலம் என்று போற்றும்.......... சீ .................தூற்றும்.வாழ்க அண்ணா நாமம்....................


Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

Anonymous said...

sumo varathu saar ..paarthukkonga..

ராஜி said...

ரைட்டு

”தளிர் சுரேஷ்” said...

நெத்தியடி!

Jayadev Das said...

..........ஆத்தா..........தாத்தா..................நமக்கு யாரும் நல்லது செய்யப் போவது இல்லை.............:((

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.