Tuesday, 12 November 2013

கலக்கல் காக்டெயில் - 127

ஈழத் தாயும், தந்தையும் 

காமன்வெல்த் மாநாட்டில் இந்திய கலந்துகொள்ளக்கூடாது ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றிருக்கும் வேளையிலே தமிழகத்தில் உள்ள இரண்டு பெரிய கட்சிகளுமே எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பிரதமர் கலந்துகொள்ளக்கூடாது என்று இரங்கி கோரிக்கையை நீர்த்துப்போக செய்ய பெரும் பங்கு ஆற்றியுள்ளனர்.

இத்துணை நாள் அம்னீஷியாவில் இருந்த வை.கோ இப்பொழுது பா.ஜ.கவை நெருங்குவதால் ஈழப்ப்ரச்சினையை கையில் எடுத்துக்கொண்டிருக்கிறார். முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஒலி ஒளி அமைத்தவரை கைது செய்த ஈழத் தாயை வசை பாட ஆரம்பிக்கிறார். நல்லா ஆடுறாய்ங்கப்பா.

மத்திய அரசு ராஜ பக்ஷேவிற்கு மன்னிப்பு கடிதம் அனுப்பிவிட்டு தமிழக அரசியவாதிகளை கேலிப்பார்வை பார்க்கிறது.

ஈழத்தந்தையோ ஆட்சியில் இருந்த பொழுது மூன்று மணிநேர உண்ணாவிரதம்,போராட்டக்காரர்கள் கைது, ராஜினாமா என்று ஒரு பாட்டம் ஆடிதீர்த்தார்.

இனி ஈழத் தாயும், ஈழத் தந்தையும் வேறு ஏதாவது பிரச்சினையை கையிலெடுத்தால் தான் இன்னும் கொஞ்ச காலத்திற்கு தமிழக அரசியலில் ஜல்லியடிக்க முடியும்.

அம்மாவிடம் வருத்தம் அக்காவிடம் புலம்பிய மானஸ்தன்

கல்கத்தாவில் நடக்கும் சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள சென்ற உலகநாயகன், மம்தா பேனர்ஜியை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இங்கு சினிமா நூற்றாண்டு விழாவில் நாலாவது வரிசைக்குத் தள்ளப்பட்ட அவர் அங்கு முதல் மரியாதை கிடைத்தால் ஏன் சொம்படிக்கமாட்டார்?.

ஐயா மானஸ்தரே அடுத்து ஜெயா டிவியில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் புகழுக்குக் காரணம்  "ஆணவமா? அகங்காரமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம்  நடக்கப்போகிறதாம், அதற்கு உங்களைத்தான் நடுவராக போடப் போகிறார்களாம். 

ரசித்த கவிதை

வேர்கள் 
 

உறவுகளை அறிமுகப்படுத்தி,
உயிரை உணரவைத்து,
காதலைக் கற்றுக்கொடுத்து,
நட்பை சொந்தமாக்கி,
தோல்விகளை தூரத்தள்ளி,
வெற்றிக்கு வடிவமைத்து,
சதையை உடலாக்கி,
உணர்வை உயிராக்கி,

என்னை நானாகவும்,
என்னை நீங்களாகவும்,

பார்க்கும் உங்களுக்காக மட்டும்
எனையும் மாற்றிக்கொள்வேன்.                    நன்றி:சஞ்சு 

 

ஜொள்ளு Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

ராஜி said...

அம்மாவிடம் வருத்தம் அக்காவிடம் புலம்பிய மானஸ்தன்
>>>
கூத்தாடிகளை நம்பலாமா!?

கும்மாச்சி said...

கூத்தாடிகளை நம்பலாமா?
நம்பக்கூடாது உண்மைதான்.

ராஜி வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

வழக்கமான அரசியல் காட்சிகள்! இதை நம்பும் நாம்தான் ஜோக்கர்கள்! கவிதை சிறப்பு! நன்றி!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.