Thursday 1 May 2014

காங்கிரஸ்காரனுக்கு சென்ற இடமெல்லாம் செருப்பு

வலை கீச்சுதே.

இந்த வாரம் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கையில் நமது கீச்சர்களும் மிகவும் சுறுசுறுப்பாக கீச்சிய கீச்சுகளில் ரசித்தவை.

ஆணி சொல்கிறது " சிலுவையில் நாங்களும்தான் அடிவாங்கினோம்"-குருசாமி எனும் குடிகாரர் ஒருவரின் கவிதை--------கோட்டிக்காரன் 

யாரைப் பார்த்தும் பயப்படமாட்டேன்# பிரியங்கா காந்தி-# கண்ணு செவந்து நாக்கை துருத்தர எங்க கேப்டன் மூஞ்சியைப் பார்த்துக்கூடவா?----------கணியன்

அஞ்சலை குப்பவாசியின் பெயராம், அஞ்சலா குபேரவாசியாம் என்னையா நியாயம்------------------கோவை-கமல் 

கடந்த தலைமுறையில் வாங்கிய பூரிக்கட்டை அடியால்தான் அதை தாங்கும் சக்தியை இன்றைய தலைமுறை பெற்றிருக்கிறோம்# அப்பாவுக்கு நன்றி-------------உடன்பிறப்பே 

அம்மா சொன்னது மாதிரி திருடனுங்க பூரா ஆந்திராக்கு போயிட்டானுங்க போல#திருப்பதில என்  புது செருப்பு தொலைஞ்சு போச்சு------------------ட்விட்டர் MGR

இங்க (அமெரிக்காவில்) இந்த குளிர்காலம் மரங்களை நிர்வாணமாகவும் பெண்களை முழுவதும் மறைக்க வைத்து ஆண்கள் இயற்கையை ரசிக்க முடியாமல் செய்து விடுகிறது----------------ஞான "உள்" குத்து

சிரஞ்சீவி காங்கிரசில் இருக்கப் போயிதான் அசிங்கப்படுத்தி விட்டுருக்கானுங்க போல# காங்கிரஸ்காரனுக்கு சென்ற இடமெல்லாம் செருப்பு--------------பொதிகை செல்வன் 

கையா அன்றிக் கமலமா வெல்லும்
பையா உனக்கு பதற்றம் எதற்கு?
மையால் விரலில் மச்சம் வைத்தபின்
தையா தக்க ததுங்கி னத்தோம்.#கலிவிருத்தம்-------------------என் . சொக்கன் 

நான் சாவேன் எனத்தெரிந்தே பூமிக்கு எனை  அனுப்பியவன் சாமி எனில்அதே நோக்கத்தில் எனக்கு சரக்கு வாங்கித்தரும் நண்பனும் சாமிதான் -------------சால்ட் & பெப்பர் தளபதி 

வயிறு எரிஞ்சு சொல்றேன்
-
-
-
-
வெயில் காலத்தில் யாரும் காரசட்னி சாப்பிடாதீங்க-----------சுட்ட பழம்

Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

விதை விதைத்தவன் நிச்சயம் ஒருநாள் அறுவடை செய்தாகவேண்டும்.....

மேதின வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கும்மாச்சி said...

ரூபன் வருகைக்கு நன்றி.

வாழ்த்துகள்.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி எஸ்.ரா.

”தளிர் சுரேஷ்” said...

காங்கிரசுக்கு சென்ற இடமெல்லாம் செருப்பு! செம! பகிர்வுக்கு நன்றி!

அருணா செல்வம் said...

அனைத்து கீச்சுகளும் அருமை கும்மாச்சி அண்ணா.

அதுவும் காரசட்னி..... நண்பன் சாமி..... ஹா ஹா ஹா...

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

அருணா வருகைக்கு நன்றி.

ம.தி.சுதா said...

காங்கிரசுக்கு நரகத்தில் போனாலும் செருப்படி தானே

கும்மாச்சி said...

மதி சுதா வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.