Thursday 22 May 2014

புதிய அரசும் புளித்துப் போன வெளியுறவும்

மோடி பதவி ஏற்பதற்கு முன்பாகவே பிரச்சினைகள் கூட்டம் போட்டு கொடிபிடிக்க ஆரம்பித்து விட்டன. பதவி ஏற்பு விழாவிற்கு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் கலந்துகொள்ளப் போவதாக இலங்கை அதிபர் ராஜபக்ஷேவும் அறிவித்துள்ளார்.

அவர் கலந்து கொள்ளப்போகும் பதவி ஏற்பு விழாவிற்கு தமிழக முதலமைச்சர் செல்வாரா? என்ற கேள்வி இப்பொழுது எழுந்துள்ளது.

பா.ஜ.க. வுடன் கூட்டு சேர்ந்த கட்சிகள் பா.ஜ. க ஆட்சிக்கு வந்தால் இலங்கையுடனான வெளியுறவு கொள்கையில் மாற்றம் ஏற்படும், ஈழத்தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கு விடிவுகாலம் என்று எல்லா தலைவர்களும் தேர்தல் பரப்புரைகளில் சொல்லி வந்தனர். இருந்தாலும் பா.ஜ.க தலைவர்கள் இந்தியா இலங்கையுடன் நட்புறவை பேணும் என்றுதான் கூறிக்கொண்டிருந்தனர். ஆனால் இப்பொழுது தொடக்கத்திலேயே பா.ஜ. க தன் நிலைமையை மேலும் உறுதி செய்துள்ளது.

இபோழுது வை.கோ போன்றோர் புலம்ப ஆரம்பித்துவிட்டனர். மேலும் இருபத்தியாறாம் தேதி தமிழ் நாட்டில் ராஜபக்ஷே வருகையை எதிர்த்து போராட்டம் என்று சில கட்சிகள் அறிவித்துவிட்டன. இந்த நிலைமையில் தமிழக முதலமைச்சர் என்ன முடிவெடுப்பார் என்பது பெரிய கேள்விக்குறி.

பா.ஜ. க இந்தியாவில் தீவிர வாதத்தை ஒழிக்க அல்லது ஒடுக்க இலங்கையுடனான நட்புறவு அவசியம் என்று கருதுகிறது. இந்த கருத்தில் ஒரு நியாயம் இருக்கவே செய்கிறது. சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையுடன் நெடுங்காலமாகவே நெருங்கிவருகிறது.  இது இந்தியாவிற்கு நல்லதல்ல. அதிலும் பாகிஸ்தான் இலங்கை மூலமாக தென்னிந்திய நாடுகளுக்கு ஆட்களை அனுப்பி தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டங்கள் தீட்டுகிறது என்பதை நமது உளவுத்துறை ஏகனவே பலமுறை எச்ச்சரித்துவிட்டது. ஆதலால் பா.ஜ. க வும் இலங்கை ஆதரவு நிலைப்பாடே  எடுக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

இந்த விஷயத்தில் தமிழக அரசியல் தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து செயல்பாட்டாலே இந்த நிலைப்பாட்டில் ஓரளவிற்கு மாற்றம் கொண்டு வரமுடியும். ஆனால் இவர்கள் இந்த விஷயத்தில் ஒன்று சேரமாட்டார்கள். இல்லையேல் வை.கோ. போல அனைவரும் புலம்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான். மேலும் இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் நடத்துவது வெகு காலத்திற்கு தாங்காது.

(சீமான் என்று ஒருவர் கூவிக்கொண்டிருந்தாரே அவரை எங்கே காணோம்?)




Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

Unknown said...

கும்மாட்சி, இப்போ எதுக்கு எங்கேயோ தண்ணி அடிச்சிட்டு கவுந்து கிடக்கும் சீமானை கிளப்பி விடுறீங்க. அந்த ஆள், யாராவது எதுகை மோனையுடன் ஒரு முழ நீளத்திற்க்கும் எழுதி கொடுக்கும் மேட்டரை வீர வேசமாய் படிக்கவா?

கும்மாச்சி said...

உண்மை அசோக்ராஜ். அவர்தான் ஈழத்தமிழனை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

கும்மாச்சி said...

எஸ்.ரா. வருகைக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

சீமான் in something something...!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

அம்மாவும் எதிர்ப்பு குரல் கொடுத்துவிட்டார்! என்ன நடக்கிறது பார்க்கலாம்!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

அருணா செல்வம் said...

ராஜபக்ஷேவுக்கே இவ்வளவு தைரியம் இருக்கும் பொழுது நம் முதல் அமைச்சருக்கு இருக்காதா.... கும்மாச்சி அண்ணா?

கும்மாச்சி said...

அருணா வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.