Monday 16 February 2015

அனேகன்-எனது பார்வையில்

கே.வி.ஆனந்திடமிருந்து ஒரு ரொமாண்டிக் த்ரில்லர். எழுத்தாளர் சுபாவினுடைய கதை.

விடியோ கேம்ஸ் ப்ரோக்ராம் அமைக்கும் கம்பனியில் அமைரா தஸ்தூருக்கு வேலை. பாப்பாவிற்கு பூர்வ ஜென்ம நினைவுகள் எல்லாம் நியாபகம் வந்து படுத்துகிறது. ஒவ்வொரு ஜென்மத்திலும் காதலனுடன் சேர முடியவில்லை. பரிதாபமாக இறந்து போக நேரிடுகிறது.

நிகழ் காலத்தில் தனது காதலனை மறுபடியும் சந்திக்கிறார். அவரிடம் ஒவ்வொரு முறை தனது கனவுகளை சொல்லும் பொழுதும் காதலனுக்கு மெண்டலாக (அழகான மெண்டலாக) தெரிகிறார்.

ஒரு ஜென்மம் 1960 களில் பர்மாவில் நடக்கிறது. அங்கு தமிழர்களுக்கு எதிராக கிளர்ச்சி வந்த பொழுது அங்கிருந்து காதலன் நாடு கடத்தப்படும் பொழுது அவருடன் எஸ் ஆக கப்பல் ஏறியதும் ராணுவ அப்பாவால் காதலன் சுடப்பட்டதும் காதலி தானும் அவருடன் தண்ணீரில் மூழ்கி இருக்கிறார்.

மற்றுமொரு ஃபேண்டசி காதல் இளமாறன் சொம்மா ஒரு பாட்டிற்காக சேர்த்திருக்கிறார்கள்.

படத்தின் கலக்கல் அந்த வியாசர்பாடி காதல் தான். இடைவேளைக்குப் பிறகு வரும் அந்த எபிசோடில் காளி, கல்யாணி காதல், பின்னர் வில்லனால் ஏமாற்றப்பட்டு, சாகடிக்கப்பட்டு புதைக்கப் படுகிறார்கள். அந்த கொலையின் மர்மம் இருபத்தெட்டு  வருடங்களுக்குப் பிறகு அமைராவின் மருந்து செய்யும் வேலையில் முடிச்சவிழ்க்கப்படுகிறது. இதற்கெல்லாம் காரணமானவர யார்? அவர்  எப்படி முடிக்கப்படுகிறார் என்பது படத்தின் உயிரோட்டம், இன்னும் கொஞ்ச வழக்கமான பாணியை தவிர்த்து விறுவிறுப்பாக எடுத்திருக்கலாம்.

வியாசர்பாடி காதல் ஆரம்பித்தவுடன் வரும் பாட்டு "டங்கமாரி ஊதாரி" கலக்கல் ரகம். தனுஷ் தரலோகல் லெவலுக்கு இறங்கி கலக்கியிருக்கிறார். அந்த காதலில் ஐயர் பெண்ணாக அமிராவும் அம்சமாக செட்டாகிறார்.

கிட்டத்தட்ட நான்கு ரோல்களில் தனுஷிற்கு தன் திறைமையைக் காட்ட நல்ல ஸ்கோப். தனுஷ் கீசிக்கிறார்.

கார்த்திக்கிற்கு ரீ என்ட்ரி இதைவிட நன்றாக அமையாது. அசால்டாக நடித்திருக்கிறார்.

அமைரா தஸ்தூர் பற்றி சொல்லியே ஆகவேண்டும். சாதாரணமாக வட இந்திய நடிகைகளை எங்களது இயக்குனர்கள் உத்திரப்ரதேசத்தை உரித்து மத்திய பிரதேசத்தை அசக்கி ஆடவைத்து அனுப்பிவிடுவார்கள். அவர்களிடம் அதற்கு மேலும் எதிர் பார்க்கமுடியாது. ஆனால் அமைரா தஸ்தூர் பாப்பா அழகாகவும் இருந்துகொண்டு நடிக்கவும் செய்கிறார். ஐஸ்வர்யா தேவன் சில இடங்களில் அள்ளுகிறார்.

அமைராவிற்கு  நல்ல இயக்குனர்களும்  நல்ல கதைகளையும் கிடைத்தால் ஒரு ரவுண்டு கட்டி அடிக்கலாம்.

படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். "டங்கா மாரி ஊதாரி" டிபிகல் லோக்கல் சரக்கு. ஆத்தாடி ஆத்தாடி நல்ல மெலடிதான், ஆனால் "இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன" வை தட்டி டிங்கரிங் பண்ணி வைத்திருக்கிறது அப்பட்டமாக தெரிகிறது.

இந்தக் கதைக்கு லாஜிக்கெல்லாம் தேவையில்லை, பூர்வ ஜென்மமோ இல்லை எப்போலமைனோ இல்லை ஏதோ ஒரு மைனோ வேலை செய்தால் தோன்றும் சிந்தனைகளுக்கு லாஜிக் ஏது..............சும்மா தாறு மாறாக பூந்து வூடு கட்டியிருக்கிறார்கள் கேவி ஆனந்து குழுவினர். பாடல் காட்சிகள் படமாக்கிய விதம் குறிப்பாக ஆத்தாடி ஆத்தாடியும், டங்கா மாரியும் நன்றாக உள்ளது.

மொத்தத்தில் படம் டிபிகல் மசாலா ஹிட்...................



Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
தங்களின் பார்வையில் விமர்சனம்நன்று படம் பார்த்தாச்சி பகிர்வுக்கு நன்றி த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கும்மாச்சி said...

ரூபன் வருகைக்கு நன்றி.

Anonymous said...

Nalla comments theaterla makkal nallave rasikiranga inga sila arivu jeevigal mattum saridon venum elthuranga

KILLERGEE Devakottai said...

அனேகமா பார்க்கலாம்னு சொல்றீங்க...
தமிழ் மணம் 3

கும்மாச்சி said...

கில்லர்ஜி படம் நல்ல இருக்கு, பார்க்கலாம்.

'பரிவை' சே.குமார் said...

இன்னும் பார்க்கலை...
விமர்சனம் நன்று... பார்க்கணும்.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி குமார்.

திண்டுக்கல் தனபாலன் said...

நவசர நாயகன் அசத்தி விட்டார்...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பலரும் படம் நன்றாக இருக்கிறது என்றே சொல்கிறார்கள் நல்ல விமர்சனம்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.