Monday 27 July 2015

டீ வித் முனியம்மா--------பார்ட் 33

டேய் மீச இன்னாடா கடியாண்ட யாரையும் காணோம், அல்லாம் எங்கே போய்கினாங்க?

அறிஞ்சிட்டில்லா முனிம்மே.............

டேய் இன்னாடா ஆளுங்க எங்கடான்னு கேட்டா ஆடுமாறி மே...மே.... ங்குற........உன் தமிய தூக்கி உன் கடை பாயிலருல போட..........நாடாரு.......லோகு.....செல்வம்.........பாய் அல்லாரும் எங்கடா போய்கினாங்க?

இன்னா முனிமா என்ன மறந்துகினே..............

ஐயோ பானலிங்கம் சாரு...........உன்னிய மறப்பேனா? கொண்டித்தோப்பே உன் பேரு சொல்லுது...........நீ கடியாண்ட ஓடியாருத கண்டுகினேன் அத்தான் உன்னிய சொல்லல........

அடே அப்புகுட்டா............லிங்கம் சாருக்கும்  எனிக்கும் ஸ்ட்ராங்கா டீ போடுறா.....

அது சரி முனிமே நாட்டுல இன்னா சேதி.............

டேய் இருடா.........அல்லாரும் வருவாங்க அப்பால நூசு சொல்றேன்....

ஐயே முனிம்மா இன்னா மீசைய ஒட்டிகினுகீர......

வாடா செல்வம் பழம் வியாவாரம் எப்படி போவுது? எங்கடா உன்னோட கூட்டாளிங்க.............

வந்துகினே கீறாங்க முனிம்மா...........

தோடா லோகு, நாடாரு,  பாய் கூட்டமா வராங்க.........

இன்னா முனிம்மா அம்மா செந்தில் பாலாஜிக்கு ஆப்பு வச்சிட்டா போல........

ஆமாண்டா  செல்வம் அந்தாளுதான் அம்மா ஊதுவத்தி உருட்ட சொல்ல அல்லா கோயிலாண்ட போயி காவடி எடுத்தவரு..........அவருக்கு ஆப்பு வச்சிட்டாங்க.

இன்னா காரணமாம் முனிம்மா.........

லிங்கம் சார் அதெல்லாம் நமக்கு தெரியாது........கமிஷன் கிமிஷன் கொடுக்கலையாங்காட்டியும்............

முனிம்மா இன்னா மருத்துவரு, ஐயா அல்லாரும் டாஸ்மாக்க மூடனும் சொல்லிகினு புது மேட்டரு கெளப்பறாங்க.........

ஆமா நாடார் சரக்குல லாவம் அல்லாரும் அடிச்சுப்பானுங்க ...........இப்போ எலிக்சன் வரசொல்ல ஓட்டுக்கு கும்மி அடிக்கிறாங்க..........

ஆனா அம்மா கடியா அல்லா மார்கெட்லையும்  தொறக்க சொல்லுது.........

பின்னா இன்னா பாய் இம்மா வர்சம் காசு பாத்துகிறாங்க...........அத்தே போய் மூடுவாங்களா? சொம்மா எலிக்ஸனுக்கு டபாய்க்கிறாங்க.........

முனிம்மா இன்னா அம்மா கேசு இன்னிக்கு சுப்ரீம் கோர்ட்டுல தொடங்கிட்டாங்க........

அது முடிஞ்சு போன கேசு லோகு.............சொம்மா த... அப்படி இப்படின்னு சொல்லி ஊத்தி மூடிடுவானுங்க..........அல்லாம் செய்ய வேண்டியது செஞ்சுகினாக............

இன்னா முனிமா நீ கடியாண்ட வராத சொல்ல எத்தினி விசயம் நடந்துகீது தெரியுமா..........

இன்னாடா சொல்லுறே செல்வம் அஞ்சலா உண்டாயிகீதா.........

த சொம்மா கலாய்க்காத முனிம்மா..........நான் மெட்ராசு மேட்டர சொன்னேன்.

ஆமாண்டா மெட்ரோ ரயிலு வுட்டுகிறாங்க...........நான் கூட ஒரு தபா கோயம்பேடுல ஏறி ஆலந்தூருல எறங்கிகினேன்......ரயிலு பொட்டி டேசன் அல்லாம் நல்லாத்தான் கீது............ஆனா நம்மாளுங்க சரக்கு வுட்டு எச்சி துப்பி நாரடிச்சிடுவானுங்க............

ஆமாம் முனிம்மா..........அதுவும் கரீட்டுதான்.

முனிம்மா நம்ம மெல்லிசை மன்னரு இறந்துட்டாரே...........ஊர்வலத்துக்கு போன...

ஆமாண்டா போயிருந்தன்...........அவரே அல்லாம் பாட்டு பாடிக்கினே தூக்கிட்டு போனாங்க.........இன்னா மூஸிக்கு போட்டுகிராறு..........அவரு பாட்ட மறக்க முடியுமா?

ஆமாம் முனிமா தமியுக்கும் அமுதென்று பேரு.........

டேய் செல்வம் உன் வாயில பினாயில கயுவி ஊத்த.............தமிழுக்கும் அமுதென்று பேர்.............நல்லாத்தான் தமிழுன்னு சொல்லேண்டா...........இன்னா பாட்டுடா அது அத்த காலம் புல்லா கேட்டுகினு  இருக்கலாம்............


சரி முனிம்மா பாகுபலி பாத்த............

ஆமாண்டா லோவு . சூப்பர எத்துகிறான்..........இன்னா துட்டு அல்லுதாமே..........சரிடா நான் கடியாண்ட போவனும்..........


Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

Thulasidharan V Thillaiakathu said...

டீ வித் முனியம்மா..ஆமா சென்னைஒ ரயில நாறடிச்சுருவாங்க நம்ம மக்கள்...ம்ம்ம்

டீ நல்லாருந்துச்சு...ரொம்ப நாள் கழிச்சு வந்ததுனால கொஞ்சம் சூடு குறைஞ்சுருக்கோ...அடுத்த டீ சூடு பிடிச்சுரும்ல!!!

திண்டுக்கல் தனபாலன் said...

யெல்ல காலமும் புல்லா கேட்டுகினு இருக்கலாம் தல....

”தளிர் சுரேஷ்” said...

டீ நல்லா இருந்துச்சு தொரை! தேங்க்ஸும்மா!

நம்பள்கி said...

ரொம்ப நாளா உங்க "ஜொள்ளு' படம் பார்க்காம மனசே சரியில்லை. என்ன இருந்தாலும் உங்க மினிம்மா போஸ்டரை அடிக்க வேற ஒருத்தி பொறந்து தான் வரணும்; தொப்புள் அழகியும் சபாஷ் சரியான போட்டி தான்!
த.ம.4

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.