Tuesday 3 January 2017

நெட்டிசன்களும், வாட்சப் அலப்பறைகளும் மற்றும் ட்விட்டர் டுபாகூர்களும்

ன்றைக்கு பிறந்த குழந்தை முதல் பல்லு வைத்த (போன) கிழங்கள் வரையில் வாட்சப் தெரியாத ஆளில்லை. இதற்கு ஸ்மார்ட் போன் இன்றியமையாதது என்று தெரிந்த சாம்சங்குகளும், ஹெச்டிசி களும் சந்தையில் சல்லிசாக அள்ளிவிட்டுருகிறார்கள். ஆதலால் அடுத்த வேளைக்கு சோறு இருக்கோ இல்லையோ எல்லோரிடமும் மேற்படி ஐட்டம் உண்டு. இதில் கொடுமை என்னவென்றால் இந்த வாட்சப் தொல்லை விடாமல் நம்மை விரட்டி அடிக்கும், காலையில் எழுந்தவுடன் காபி என்ற காலம் போய்  இப்பொழுது விழிப்பதே வாட்சப் முகத்தில்தான்.

எல்லோரும் ஒரு இருபது இருப்பத்தைந்து குழுக்களிலாவது சேர்த்துவிடப்பட்டிருப்பார்கள், கவனிக்க!! சேர்ந்த இல்லை, சேர்த்துவிட. முதலில் நல்லபடியாகத்தான் தொடங்கும், நான் நலம், நீ நலமா, அம்மா எப்படி ஆட்டுக்குட்டி எப்படி என்று தொடங்கும். இதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. பிறகுதான் இருக்கிறது.

இந்த வாங்கிப்போட (forward) ஒரு கூட்டம் இருக்கிறது, இவர்கள் வேலை ஒரு குழுவிலிருந்து வரும் தகவலை அப்படியே அடுத்த குழுவிற்கு தள்ளிவிடுவது. இவர்கள் பெரும்பாலும் அந்த தகவலை படிக்கமாட்டார்கள்.  இந்த வருடம் பிப்ரவரி மாதம் ஒவ்வொரு கிழமையும் நான்குமுறை வரும் இதுபோல் இனி 823 ஆண்டுகள் கழித்துதான் வரும் இதற்கு பெயர் பணப்பை (Moneybag) இந்த தகவலை நீங்கள் வாங்கி எட்டு குழுவிற்கு அனுப்பினால் உங்களுக்கு பணம் கொட்டோகொட்டு என்று கொட்டும் (எச்சரிக்கை: வருவாய்த்துறை ரெய்டு வர வாய்ப்புண்டு) என்று அடித்துவிடுவார்கள். இவர்கள் பெரும்பாலும் படித்த அறிவுஜீவிகளாக இருப்பார்கள். தகவலை சரிபார்க்கவே மாட்டார்கள், அடேய் சிப்சு வருடா வருடம் லீப் வருடம் தவிர இப்படிதான் வருமென்று சொல்ல தோன்றும் சபை நாகரீகம் கருதி கம்மென்று இருக்கவேண்டும். பிறகு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நம்நாட்டு தேசியகீதம்தான் உலகில் சிறந்தது என்று யுனெஸ்கோ நிறுவனம் சற்றுமுன் அறிவித்துள்ளது என்று தங்களது தேசபக்தியை மெச்சி சொரிந்துகொள்(ல்)வார்கள்.

இது இப்படி இருக்க பருவமழை காலத்தில் மற்றுமொரு புயல் சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது, கிட்டத்தட்ட நாலாயிரம் சென்டிமீட்டர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக நாசா அறிவுத்துள்ளது. (அடேய் ஏன் டொமேட்டோ நாசா எங்கேடா நடுவில் வந்தது என்று நடு மண்டையில் போட தோன்றும்) ஆதலால்  எல்லோரும் உடனடியாக சென்னையை விட்டு வெளியேறுங்கள். இதற்காக கோயம்பேட்டில் கோடி கோடியாக பேருந்துகள் தயார் நிலையில் இருக்கின்றன என்று பெரிசு நெஞ்சுகளில் புளியை கரைப்பார்கள். இதை மறக்காமல் அடுத்த வருடமும் போடுவார்கள்.

பிறகு மீம்ஸ், இதையம் சலிக்காமல் வாங்கிப்போட்டுக்கொண்டு இருப்பார்கள். இதில் தேவர்மகன் ஸ்டில் கட்டாயம் உண்டு, எந்த சூழ்நிலையிலும் சும்மா நச்சென்று உட்காரும், இதைதவிர அங்கே ஒரு கவுண்டர் இங்கே ஒரு வடிவேலும் என்று கலை!! கட்டி அடிக்கும்.

அடுத்தது ட்விட்டர் இங்கு பெரும்பாலும் கடலை வியாபாரமும் அணில் ஆமை சண்டைகளும் நடக்கும், சண்டை என்றால் இந்தியா பாகிஸ்தான் சண்டையல்ல. இது அதைவிட மோசம். இந்த அணில் குஞ்சுகளும் ஆமை குஞ்சுகளும் சகட்டுமேனிக்கு திட்டிக்கொள்வார்கள். உலகில் உள்ள அத்துனை கெட்டவார்த்தைகளையும் புழுத்த நாய் குறுக்கே போக முடியாதபடி பிரயோகிப்பார்கள். இதில் சில பிரபலங்களும் சேர்ந்துகொண்டு அவர்களும் தங்கள் பங்கிற்கு இன்னும் கேவலமாக திட்டி திரும்ப வாங்கிக்கட்டி சிலநாள் காணாமல் போவார்கள். இங்கு ஒரே ஒரு நகைச்சுவை விஷயம் இந்த டப்ஸ்மேஷ்கள். அங்கங்கு சில நல்ல முகங்கள் தென்படும்.


மற்றுமொரு கலக்கல் இடம் மூஞ்சிபுத்தகம் அவனவன் ஸ்டேட்டஸ் போட்டு கொல்வான்............காலையில மணி ஒரு ஆறிருக்கும், பொண்டாட்டி குளிச்சிட்டு வந்து தலை நிறைய மல்லிகைப்போவோட என்ன உசுப்பினா...........நான் காபி குடிச்சிட்டு கக்கா போனேன் ....என்று படம் வரைந்து பாகங்கள குறிப்பானுங்க.

இங்கயே இன்னுமொரு கூட்டம் மோடிய செல்லாக்காசு என்று போட்டு தாளித்து எவனாவது மோடியின் செயலில் சில நன்மை.... என்று ஆரம்பித்தால் அவனை "தேஷ்பக்தாஸ்" என்று கெட்டவார்த்தையில் திட்டுவது போல நினைத்து இறுமாந்து போவாவர்கள்.

 எது எப்படியோ இந்த சமூக வலை தளங்கள் பார்க்கமுடியவில்லை  என்றால் டாஸ்மாக் மூடிய குடிமகன் நிலைபோல் இன்று தனிமனிதன் தவிப்பது காலம் செய்த கோலம்.


கும்மாச்சி 

Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாங்க... உங்களை தான் தேடிக் கொண்டிருந்தேன்... தொடர்க...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம்...

Unknown said...

சில மாதங்களுக்கு பிறகு ஜாலியான பதிவு! அடிக்கடி பகிரவும்

Yarlpavanan said...

அருமையான ஆய்வுக் கட்டுரை

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.