Thursday 2 March 2017

விதிக்குரங்கின் சேட்டைகள்

வீடு வாசல் துறந்து
கடற்கரையில் திரண்டு
நாடு வியந்து நோக்க
அமைதி வழியில் நடந்து
அதிரடியில் அரசாங்கம்
அவசர சட்டம் இயற்றி...
நாடு மெச்சும் வகையில்
வாடி வாசல் திறந்து .
அரசியல் அவலங்களை
அசதியுடன் கடந்து..
இனி வரும் காலங்கள்
இனிதாக இருக்கும் என்று
இறுமாந்து போகையிலே
அடுத்து வரும் அறிவிப்பு
நெடுவாசல் தொட்டு
தமிழ்நாட்டை அழிக்க வந்த
இயற்கை எரிவாயு திட்டமாம்
மறுபடியும் மக்களை
வீடு வாசல் விட்டொழித்து
நடு வீதியில் நிற்க வைக்கும்
நன்மை பயக்கும் திட்டம்!!
வாழ்க்கை சீரமைய
போராட்டங்கள் அவசியம்
போராட்டங்களே வாழ்க்கை ..
என்றாகிப்போனது.....
விஞ்ஞான வளர்ச்சியின்
பெயரில்.....
வியாபாரிகளின் உயரிய
நோக்கில்....
விதிக்குரங்கின்.................
சேட்டைகள்



Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனி வரும் காலங்கள்
இனிதாக இருக்கும்
என்று நினைத்தால்
தினம் ஒரு
போராட்டம்
வேண்டும்...

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

ஸ்ரீராம். said...

மக்கள் ஒற்றுமையுடன்தான் இருக்கிறார்களா என்று சோதித்துப் பார்க்கிறார்களா?

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ஸ்ரீராம்

இராய செல்லப்பா said...

....மக்கள் போராட்டத்திற்கு பலன் இருக்கும் என்று தெரிகிறது. - இராய செல்லப்பா நியூஜெர்சி

வெங்கட் நாகராஜ் said...

வீதிக்குரங்கின் சேட்டைகள்..... ம்ம்ம்ம் சேட்டை அதிகமாகவே இருக்கிறது....

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.