Sunday 29 November 2009

ஈனத்தமிழன் இவன்தானோ


பேரினவாதத்தின் கைப்பொம்மை; தமிழ் - சிங்களப் புரோக்கர்; மத்தியில் கிழிந்த ஆட்சி, மாநிலத்தில் நைந்த ஆட்சி புரியும் தோழருக்கு சனீஸ்வரனின் இரண்டாவது மடல்"நவம்பர் 27 கொலைகாரர்கள் தினம்" என்று நேற்றைய தினம் மன்னாரில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய இலங்கையின் சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அறிக்கையை வாபஸ் வாங்குமாறு கோரி யாழிலிருந்து சனீஸ்வரன் எமது தளத்திற்கு ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளார்.
சனீஸ்வரனின் அறிக்கையின் முழுவடிவம்:-

வார்த்தைகளால் வரிக்க முடியாக ஈகத்தைப் புரிந்த மகத்தான அந்த மாவீரர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தி “கொலைகாரர்கள் தினம்” என்று வர்ணித்து உன் சுயரூபத்தையே காட்டிவிட்டாயேடா நீயா தமிழரின் பிரதிநிதி - நீயா மக்கள் தொண்டன் - நீயா ஈழத்தின் விடிவெள்ளி – உன்பின்னால் கோஷம் போட்டுத் திரியும் கூட்டம் கூட உன்னை மன்னிக்காதடா மாபாவி – நடந்து முடிந்தவற்றை எண்ணி மனதுக்குள் மௌமாக அழுது கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தின் உணர்வு புரியாது கொலைகாரர்கள் தினம் என்று கொக்கரித்தாயே நாசமாய்த்தான் போவாயடா…
வேலை கேட்டுத்திரியும் யாழ்ப்பாணத்து இளஞ்சமூகமே சிந்தியுங்கள். உங்கள் வீடுகளிலும் ஒரு மாவீரன் இருப்பான் - அவனும் கொலைகாரனா - இந்த இரக்கமற்றவனிடம் கையேந்துவதை விடுத்து சிங்களவனிடம் கையேந்துங்கள். அவன் வேலை தருவான். துரோகியிடம் செல்வதை விடுத்து விரோதியிடம் செல்லுங்கள். இவனின் வேலைப்பிச்சையால் சோறு தின்பதை விட மலத்தை உண்ணலாம்.
முப்பத்தையாயிரம் இளம் பிஞ்சுகளின் தியாகத்தை ஒரு வார்த்தையால் மிதித்துவிட்டான் பாவி. உன்னை தாய் மண்ணை, தாயை நேசிக்கும் எங்கள் வீட்டு சொறி நாய் கூட மன்னிக்காதடா? பிரேமதாசாவின் வேட்டிக்குள்ளும் சந்திரிக்காவின் பாவாடைக்குள்ளும் இன்று மகிந்தனின் வேட்டிக்குள்ளும் ஒளித்திருந்து அரசியல் செய்யும் உனக்கு தியாகம் என்ற ஒற்றைச் சொல் புரியாது தானடா பாவி. மக்களையும் மாவீரரையும் பிரித்து பார்க்காதேடா பாவி.

நீ ஒரு தமிழ் தலைவனாக இருக்க ஏன் ஒரு மனிதனாக இருக்க கூட தகுதியில்லாதவன். தான் கொண்ட இலட்சியத்திற்காக தன்னையே ஆகுதியாக்கிய எங்கள் குழந்தைகளை கொலைகாரர்கள் என்று சொன்னால் நீ யாரடா படுபாவி. யாழில் வாழும் ம(h)க்களே இவன் பேச்சை மன்னிக்கப் போகின்றீர்களா.
இவனது வேலை வாய்ப்பை நம்பி இவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் இழுபடப் போகின்றீர்களா? இவனின் காசு வாங்கி கோயில் கட்டினால் பாவம்தானடா மிஞ்சும். இவனது காசில் வாசிகசாலை திருத்தினால் அறியாமைதானடா எஞ்சும். இவனிடம் திரிந்து ஊர்வலம் சென்று போஸ்டர் ஒட்டி காசு லஞ்சம் கொடுத்து கேவலம் ஒரு வேலை வாங்குவதைவிட நாக்கை பிடுங்கிக் கொண்டு கொண்டு சாவதே மேலடா.
கேடு கெட்ட இனமல்லடா எங்கள் இனம். கங்கை கொண்டு கடாரம் வென்று கோலோச்சிய இனமடா எங்கள் இனம். மஞ்சள் துண்டுக்கு கழுத்தறுத்த சிங்களவனிடம் மடியேந்திப் பிச்சை கேட்பதா? ஏனடா இவனும் இவனது தலைவன் பத்மநாபாவும் போராடப் போனாங்கள். மதகு திருத்தவும், தார் ஊற்றவுமாடா போனவங்கள்.

யாழ்ப்பாணத்து இளைஞர்களே எல்லோரும் ஒரு கணம் சிந்தியுங்கள்.

மாவீரர்களின் தொகை முப்பத்தையாயிரத்தை தாண்டிவிட்டது. ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு மாவீரனோ போராளியோ இருக்கும் நிலை தமிழீழத்தில் இன்று காணப்படுகின்றது. இவர்களனைவரையும் கொலைகாரர்கள் என்று கூறி கொச்சைப்படுத்தும் ஒரு கூட்டத்தின் பின்னால் திரிந்து போஸ்டர் ஒட்டி கோஷம் போட்டு, ஊர்வலம் சென்று, சங்கு ஊதி பிழைப்பதை விடுத்து சுய தொழில் ஒன்றை தேடிக் கொள்ளுங்கள்.
வேலையில்லாப் பட்டதாரிகளே! இவனுக்கு பின்னால் சென்று ஊம்பித்தான் வேலை எடுக்க வேண்டும் என்றில்லை. உங்களுக்கு கட்டாயம் சிங்கள அரசு வேலை தரவேண்டும். அவன் தாறதை இவன் ஏதோ தான் தாறதாக நடிக்கிறான் அவ்வளவும்தான்.
நீங்கள் அன்று பல்கலைக்கழகத்தில் இருந்து செய்யத பொங்கு தமிழை நினைத்து பாருங்கள். இப்போது வேலை கேட்டு அவன் வாசலில் போய் நிற்க வெட்கமாயில்லை.

உயர்ந்தவர்கள் நாமெல்லாரும்
உலகத்தாய் வயிற்று மைந்தர்
நசிந்து இனி கிடக்க மாட்டோம்
நாமெல்லாம் நிமிர்ந்து நிற்போம்
நாமெல்லாம் நிமிர்ந்து நிற்போம்
நாமெல்லாம் நிமிர்ந்து நிற்போம்

உங்களது கோஷத்தை சனீஸ்வரன் உங்களுக்கு சொல்லி தர வேண்டியதில்லை. புரிந்து கொள்ளுங்கள்.

தோழரே! நீர் திருந்துவீர் மக்கள் தொண்டனாய் மாறுவீர் என்று எதிர்பார்த்தவர்களில் நானும் ஒருவன்.
ஆனால் மாவீரச் செல்வங்களை கொலைகாரர் என்று கூறியதன் மூலம் பேரினவாதத்தின் பிச்சைக்காரன் நீர் என்பதை மீண்டும் ஒருமுறை அறியத்தந்துவிட்டீர்.
உமது மனதில் இன்னும் கொஞ்சம் ஈரம் ஒட்டியிருந்தால் உமது அறிக்கையை வாபஸ் வாங்கி எங்கள் வயிற்றெரிச்சலை சம்பாதிக்காமல் இரும்.

மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும் வரை
யாழ்ப்பாணத்திலிருந்து சனீஸ்வரன்

Follow kummachi on Twitter

Post Comment

No comments:

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.