Saturday 22 May 2010

பண்பாடு காத்த தலைவனுக்கு பன்னாடைகளின் பாராட்டு விழா.


பாசத்தலைவனுக்கு பதினாலு லட்சத்தி இருபத்தாராயிரத்து எழுநூற்றி முப்பத்தெட்டாவது பாராட்டு விழா. விழா நடத்துவோருக்கு இரண்டு நாட்கள் விடுமுறை, பங்கேற்றதற்கு அத்தாட்சியாக சான்றிதழ் விழா அரங்கிலேயே வழங்கப்படும். இதுவரை உலக வரலாற்றில் எந்த அரசும் செய்யாத, முதன் முறையாக ஐம்பதாயிரத்தை தொடப் போகும் பாராட்டு விழாக்கள்.

சொம்படிக்க சொட்டையான சொண்ட்டி நடிகர்களும், குனிந்து கும்மியடிக்க, ...டி கொழுத்த குமரிகளும் அழைக்கப் படுவார்கள். பாசதலைவன் பதினாலு டிகிரி கோணத்தில் ஜொள்ளு விடுவதை புகழ்ந்து பாடும் கவிஞருக்கு மேல்சபை பதவி.

இந்த அரசு யாரையும் கட்டாயப்படுத்தி விழாக்களுக்கு அழைப்பதில்லை. ஆனால் வராத ஊழியர்கள் கட்டாயப் பணி நீக்கம் செய்யப் படுவார்கள்.

பந்தல் வரை வந்து “சொம்படிக்காத” ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கத்திற்கு ஆளாவார்கள்.

மேலும் மேடையில் ஏறி உண்மை உரைத்தால் “கட்டம் கட்டி பட்டா பட்டி உருவி” குனிய வைத்து குமுறப்படுவார்கள்.

நவீனக் கம்பரும், மனித துதி பாடியே வயிறு வளர்க்கும் அம்பிகாபதிகளின் கவிதை ஊற்று ஓடும்.



செம்மொழி காத்து வளர்த்த
சேக்கிழார் பெருமானே
ராஜதந்திரி ராஜ ராஜனின்
ஒன்றுவிட்ட பேரனே
ஈழம் ஈன்றெடுக்க
பரோட்டா பாயா தின்று
பத்து நிமிடம் உண்ணாவிரதமிருந்த
பண்பாட்டுக் கலைஞனே
ஒருமைப் பாடு வளர்க்க
ஊரெங்கும் “குடி” கண்ட கோமானே
செம்மொழி வளர்க்க
குடும்பதொழில் செழிக்க
தமிழில் பெயர் மறந்தும்
சூட்டாத மாவீரனே
மக்கள் வரிப்பணம்
(தம்)மக்கள் வளர
வழிவகை செய்த
வள்ளல் பெருமானே
நிதி நிறைந்தவரிடம்
பொற்குவையும் நிதி
குறைந்தோரிடம் கோடிகளும்
பஞ்சம் பிழைப்பவரிடம்
லட்சங்களும் பெற்று
பாராட்டு விழா காணும்
பாசதலைவனே நீவிர்
பல்லாண்டு வாழவும்
உமது குடும்பம் கோடிகளில்
கொழிக்கவும் ஈரோட்டு
எம்பெருமான் எழுந்தருளி
எட்டாயிரம் ஆண்டுகள்
வாழ வேண்டுகிறோம்.

Follow kummachi on Twitter

Post Comment

11 comments:

ரவி said...

Labels: நையாண்டி\

:)

sarathy said...

Oru Koodi thadavai paarattu vizzakkal nadathinaalum, tamiz makkal meen makkaleythaan! avargal nanraaga vaaza emperumaan arula veendum.
{paarum iya, vote saiya mudiyavillai; anda linkee illai thaan. kadavul paasath thalavan pakkam thaan, idu oru eduthkkaattu!}

Ramesh said...

கவிஜை சூப்பர்...

movithan said...

சூப்பர்............

சௌந்தர் said...

இந்த தடவை எங்க தலையை வர சொல்லுங்கோ பார்போம்

Unknown said...

எல்லோரும் ஜோரா கைதட்டுங்க ..

அஹோரி said...

கரி துப்புவாங்கன்னு தெரிஞ்சி தான கர்சீப் க்கு பதில் துண்ட போட்டு இருக்காங்க. அலேக்கா துடைச்சிட்டு அடுத்த விழாவுக்கு பந்தல் போட்டுடுவானுங்க.
அதவிடுங்க, இந்த மானங்கெட்ட பயலுவ எதுக்கு லீவு போட்டுட்டு போறானுங்க.

Chitra said...

பாசத்தலைவனுக்கு பதினாலு லட்சத்தி இருபத்தாராயிரத்து எழுநூற்றி முப்பத்தெட்டாவது பாராட்டு விழா. விழா நடத்துவோருக்கு இரண்டு நாட்கள் விடுமுறை, பங்கேற்றதற்கு அத்தாட்சியாக சான்றிதழ் விழா அரங்கிலேயே வழங்கப்படும். இதுவரை உலக வரலாற்றில் எந்த அரசும் செய்யாத, முதன் முறையாக ஐம்பதாயிரத்தை தொடப் போகும் பாராட்டு விழாக்கள்.

......முத்தாய்ப்பாய் உங்கள் நக்கல் கவிதை...... சூப்பர்!

பித்தன் said...

தூள்....

rajan said...

மிக மிக அருமை

கோவி.கண்ணன் said...

:) ஆகா ஆகா

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.