Monday 31 May 2010

புட்டுக்கோ புடிச்சிக்கோ (நூற்றி ஐம்பதாவது இடுகை)


இப்பொழுது எல்லாம் செய்திகளை பெரிதும் ஆக்கிரமிப்பது விமான விபத்து, ரயில் கவிழ்ப்பு, சாலை விபத்து. பெரும்பாலும் விபத்தை பற்றிய விவரங்களை கொடுத்து செய்திகள் அடுத்து தருவது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு என்ற பெயரில் பிரதமரோ அல்லது முதல்வரோ கொடுக்கும் பிச்சைக் காசு.

நஷ்ட ஈடு கொடுப்பதில் தவறில்லை. ஆனால் இந்த அரசாங்கம் “crisis management” எந்த அளவுக்கு உருவாக்கியிருக்கிறார்கள். தவறாக எண்ண வேண்டாம் இதற்காக ஒரு தனி பிரிவு உண்டு. அதற்காக ஒரு வட்டமோ அல்லது மாவட்டமோ தலைவராக்கப்பட்டு அவருக்கு உண்டான சம்பளமும் உண்டு. மக்களே சிந்தித்துப் பாருங்கள். இவர்கள் சம்பவ இடத்திற்கு வருவது என்பது “செத்த அன்றைக்கு வர சொன்னால் பத்துக்கு வருவார்கள்” இது தான் நிதர்சனம். போபால் விஷவாயுக் கசிவின் பொழுது ஆர்ஜுன் சிங் எங்கு ஒளிந்திருந்தார் என்பது நாடறிந்த ரகசியம்.

இதை எல்லாம் நாம் கேட்காமல் இருக்கத்தான் இந்த நஷ்ட ஈடு. இந்த உதவித் தொகையை நினைத்து மக்கள் அடங்கி விடுவார்கள் என்று நினைக்கிறது அரசாங்கம். மேலும் இது ஒட்டு பொறுக்கும் வழி முறைகளில் முக்கியமான ஒன்று.


கவிழ்ந்தது ரயில்
இழந்தது உயிர்
அமைச்சர் வராரு
அள்ளித் தருவாரு
“புட்டுக்கோ புடிச்சிக்கோ””:


இறங்குது விமானம்
இழந்தது ஏராளம்
அமைச்சர் வராரு
அள்ளித் தருவாரு
“புட்டுக்கோ புடிச்சிக்கோ”.


பேருந்துப் பயணம்
ஆற்றிலே பிணம்
அமைச்சர் வராரு
அள்ளித் தருவாரு
“புட்டுக்கோ புடிச்சிக்கோ”.

பள்ளியில் நெருப்பு
பிள்ளைகள் எரிப்பு
அமைச்சர் வராரு
அள்ளித் தருவாரு
“புட்டுக்கோ புடிச்சிக்கோ”.

Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

ரவி said...

நீங்கபாட்டுக்கு கலக்கிக்கிட்டே இருங்க !!!

ரிஷபன் said...

150 வது இடுகைக்கு நல்வாழ்த்துகள்..
//இது ஒட்டு பொறுக்கும் வழி முறைகளில் முக்கியமான ஒன்று.//
நூறு சதவீத உண்மை

பனித்துளி சங்கர் said...

150 வது இடுகைக்கு நல்வாழ்த்துகள்..


ஆதங்கம் வார்த்தைகளில் தெறிக்கிறது .

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

150 க்கு நல்வாழ்த்துகள் ,

மங்குனி அமைச்சர் said...

பேருந்துப் பயணம்
ஆற்றிலே பிணம்
அமைச்சர் வராரு
அள்ளித் தருவாரு
“புட்டுக்கோ புடிச்சிக்கோ”.
////


இது மட்டும் தப்பு , 150 வாழ்ழ்ழ்ழ்ழ்ழ்த்துக்கள் (உஸ்...... அப்பா........ போதுமா ????)

சுப்பு said...

கவிதை வரிகள் நல்லா இருக்கு

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.