Thursday 9 December 2010

கேவுருல நெய் ஒழுகுது டோய்.......................அமெரிக்காவுல கூப்பிட்டாக, அண்டார்டிகாவுல கூப்பிட்டாக, அயனாவரத்துலயும் கூப்பிட்டாக.

சோழிங்கர்: சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்க தமிழகத்தை ஆளும் கட்சி, இதுவரை ஆண்ட கட்சி, தேசிய கட்சி என பல கட்சிகளும் பாமகவுக்கு அழைப்பு விடுத்து கொண்டிருக்கின்றன என்று அக் கட்சியின் இளைஞரணித் தலைவரான அன்புமணி கூறினார்.




கூட்டணிக்கு ஒபாமா கூப்பிட்டாரு, நாங்கதான் ஐந்து கோடி வன்னியரை தவிக்கவிட்டுப் போகவில்லை.


பாமக இளைஞர்கள், இளம்பெண்கள் பயிற்சி முகாமில் பேசிய அவர், உலகின் பல்வேறு நாடுகளிலும் 5 கோடி வன்னியர்கள் உள்ளனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறிய கிராமத்தில் பிறந்தார். வேளாண் தொழில் செய்து கிடைத்த வருமானத்தில் படித்தார். டாக்டருக்கு படிக்க வாய்ப்பு கிடைத்தும் கூட உறவினர்கள் உதவியுடன்தான் படிக்க முடிந்தது.



இன்னாபா சொல்லுற ஒன்னியும் விளங்கமாட்டேங்குது. ஒரே கேராகீது.

படித்து முடித்ததும் அமெரிக்காவுக்கு வேலைக்கு அழைத்தனர். ஆனால் அவர் மறுத்து விட்டார். எனது சமுதாயத்துக்காக பாடுபடப் போகிறேன் என்று கூறிவிட்டார்.

அஹான் அமெரிக்காவுல இடது கைபோன பாட்டிய பாத்துக்கவா. நாளைக்கு ஒரு டாலர் சம்பளம், மாதம் முப்பது டாலர் பிடிப்பு, அந்த வேலைதானே?

தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் கட்சி பாமக மட்டும் தான். மற்ற கட்சிகள் அனைத்தும் தேய்ந்து வருகின்றன. மற்ற கட்சிகளில் உள்ள வன்னியர்களையும் பாமகவுக்கு அழைத்து வர வேண்டும்.




ஏம்பா நல்லா அளந்து பாத்தீங்களா, எத்தனை இஞ்ச் வளர்ந்தீங்கன்னு புள்ளிவிவரம் கொடுங்கப்பு. வளர்த்தும், தேயர்தும் அரசியலில் சகஜமப்பா.

பாமக ஆதரவு இல்லாமல் எவரும் ஆட்சி அமைக்க முடியாது. டாக்டர் ராமதாஸ் யாரை கைகாட்டுகிறாரோ அவர்தான் முதல்வர் ஆக முடியும் என்றார் அன்புமணி ராமதாஸ்.

ஏனுங்க நீங்க முதல்வராகற கனவு அப்போ இந்த ஜென்மத்தில் இல்லையா?


அப்போ விஜயகாந்து, விஜய் டி ராஜேந்தர், விஜய், சிம்பு யார் பக்கமாவாது கையை காமிப்பீங்களா? பாத்து கைய காமிங்க.


அப்பாலே இன்னும் நிறைய பேர் இருக்காங்க. வைகோவ மறக்காதீங்க.


ஏங்க தமிழ்நாட்டு மக்களை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே?

...........

Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

ADAM said...

GOOD JOKES

கும்மாச்சி said...

Adam வருகைக்கு நன்றி

Chitra said...

ஏங்க தமிழ்நாட்டு மக்களை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே?

.... ha,ha,ha,ha....

கும்மாச்சி said...

சித்ரா வருகைக்கு நன்றி. தமிழனின் நிலை இப்பொழுது அப்படிதான், எவன் வேண்டுமென்றாலும் வைத்து காமெடி பண்ணலாம்.

Philosophy Prabhakaran said...

இவனுங்க ரெண்டு பெரும் அல்லக்கை முண்டங்கலாச்சே...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏங்க தமிழ்நாட்டு மக்களை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே?
//

சே..சே.. காமெடி பண்ணியிருந்தா.. அவ்வலவு எப்படி சம்பாரிச்சு இருக்க முடியும்?...( ஹி..ஹி கோடிகளை சொன்னேன்..

அவனுக, மக்களை, ’ மாக்களா ’ நினக்கிறானுக அண்ணே....

பனித்துளி சங்கர் said...

///////ஏங்க தமிழ்நாட்டு மக்களை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே?
/////////


என்ன நண்பா இப்படி சொல்லிட்டிங்க மொத்தத்தில் தமிழ் நாட்டு மக்கள்தானே இவங்க எடுக்குற அனைத்துப் படத்துக்கும் ரசிகர்கள் . எல்லாத்துக்கும் கை தட்டுவோம் அதுதானோ என்னவோ தெரியவில்லை . இப்ப எல்லாம் வெளிப்படையாகவே நடக்குது அனைத்தும் .!

MANO நாஞ்சில் மனோ said...

///ஏனுங்க நீங்க முதல்வராகற கனவு அப்போ இந்த ஜென்மத்தில் இல்லையா///
அது தெரிஞ்சி'தானே இப்பிடி பேசுறானுக...:]]]

sarathy said...

காமேடியா.... காப்ராவா .... ஒண்ணுமே விளங்கலையே? தமிழ் மக்களை எந்தா இராஜா ஐயா நிதி அளந்து காப்பாற்றுவார்கள்?

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.