Monday 15 October 2012

மானமுள்ள தமிழர்கள்

மானமுள்ள தமிழர்கள் நாங்கள்
ஈனமுற்று தண்ணீருக்கு அலையோம்
விண்ணுயரும் ஊழலுக்கு துணையிருப்போம்
மின்வெட்டுக்கு  தலையசைப்போம்
பஞ்சத்தை மஞ்சத்திற்கு அழைத்த
வஞ்சகர் கூட்டமென கொஞ்சுதமிழ்
மேடைப்பேச்சில் மயங்கியிருப்போம்
இலவசங்கள் தேடிப்பெற்று
தொலைக்காட்சியில் தொலைந்திருப்போம்
நாட்டை துண்டாடும் மந்திரிகளுக்கு
பேட்டை முழுவதும் விழா எடுப்போம்
சொந்த சகோதரர்கள் குடியறுக்க
பந்தங்களுடன்  துணை நிற்போம்
விளைநிலங்களை வளைத்திடுவோம் பின்
விளைச்சல் இல்லை என புலம்பிடுவோம்
விடிந்ததும் டாஸ்மாக்கை நாடிடுவோம்
குடிகெட குடித்திருப்போம்
தகதகக்கும் வெயில் என்றாலும்
தார்சாலையில் படுத்திருப்போம்
ஜதிபோட்டு ஆடும் குத்தாட்ட நடிகர்களின்
மதிகெட்ட படங்களை கண்டு களித்திருப்போம்
விலைவாசி மலை ஏறினாலும் பெண்டாட்டி
நகை வைத்து கடன் பெறுவோம்
அறைவேட்டியை உருவினாலும்
கரைவேட்டிகள் புகழ் பாடுவோம்
அடிமேல் அடி விழுந்தாலும்
அம்மா, அய்யா என்று
கழகங்களை வாழவைக்கும்
தமிழர்கள் மானமுள்ள
தமிழர்கள் நாங்கள்...


Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

அருணா செல்வம் said...

தமிழர்களின் மானத்தை
எடைபோட்டு நிறுத்தியிருக்கிறீர்கள்
கும்மாச்சி அண்ணா.

கும்மாச்சி said...

அருணா வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

போட்டுத் தாக்குங்க....

உண்மைகள்...

தமிழ் காமெடி உலகம் said...

உண்மையை அப்படியே சொல்லி இருக்கிறீர்கள்....என்ன பண்ண இதை எல்லாம் எண்ணி பார்த்தால் ரொம்ப ரொம்ப மனதுக்கு வருத்தமாக உள்ளது....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.