Sunday 13 January 2013

கலக்கல் காக்டெயில்-99


எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்


புத்தகக் காட்சி 

இப்பொழுதுதான் பிரபாகரனின் "புத்தகக் காட்சி" பதிவை படித்தேன், எனது புத்தகக் காட்சி நினைவுகளைத் தட்டி எழுப்பிவிட்டார்.நான் சென்னையில் ஒரு மூன்று முறைதான் புத்தக காட்சிக்கு சென்றிருப்பேன். அப்பொழுது சென்னை உரத்தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தேன். ஒரு முறை சென்னை வூட்லண்ட்ஸ் மைதானத்திலும், காய்தே மிலத் கல்லூரியிலும் மற்றும் ஒரு முறை தேனாம்பேட்டை மைதானம் என்று நினைக்கிறேன். அப்பொழுதெல்லாம் புத்தங்கங்கள் வெகு மலிவாக கிடைத்தன. மைக்கில் சுஜாதா வருகிறார் என்று கூவிக்கொண்டிருப்பார்கள். எனது ஆதர்ச எழுத்தாளர் அவரை நான் ஒரு முறை கூட சந்தித்ததில்லை. அவருடைய புத்தகங்கள் எல்லாம் என்னிடம் இருக்கின்றன, ஒரே ஒரு சிறு நாவலை தவிர. "செப்டம்பர் பலி" என்ற புத்தகத்தை தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் கிடைக்க வில்லை. பிறகு பிழைக்க கடல் கடந்து வந்த பிறகு ஓரிரு புத்தக காட்சி (ரஷ்ய கப்பலில்) போயிருக்கிறேன், அனால் அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை. என்ன தமிழ் புத்தகங்கள் ஒரு பத்து இருந்தால் ஆச்சர்யம்.

சென்னை புத்தகக் காட்சியை மறுபடியும் பார்க்கவேண்டும் எனது ஆசை எப்பொழுது நிறைவேறுமோ தெரியவில்லை.

ஆனாலும் ஒவ்வொரு விடுமுறையும் ஊருக்கு சென்றுவரும்பொழுது குறைந்தது ஒரு ஐந்தாறு புத்தங்கங்கள் வாங்கி வருவது வழக்கமாகிவிட்டது. 

Men are from Mars Women are from Venus

 ஜான் கிரே எழுதிய இந்த புத்தகத்தை இப்பொழுதுதான் படித்து முடித்தேன். மிகவும் பயனுள்ள தகவல்கள். என்ன எப்பொழுதோ படித்திருக்க வேண்டியது. ஆண் பெண் உறவை புரிந்துகொள்வதற்கு மிகவும் உதவும். இதைப் படித்தாலும் பெண் மனதை புரிந்து கொள்வது மிகவும் சிரமம் தான்.

விஸ்வரூபம் சர்ச்சை 

கமலின் பிரச்சினைகள் முடிந்து படம் ஒரு வழியாக வெளிவரும் போல் தோன்றுகிறது. இருந்தாலும் டி.டி.ஹெச்சில் கட்டியவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்குமா? இல்லை படமே  போடுவார்களா? என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக தெரியவில்லை.

விருமாண்டி படத்திற்கு முதலில் வைத்த "சண்டியர்" பெயர் சர்ச்சையில் தொடங்கி அவர் எந்தப் படமென்றாலும் எதாவது ஒரு சர்ச்சைதான்.சண்டியர் பெயர் பிரச்சினையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழ் கலாசார காவலர்களையும், "சமணர்களை கழவிலேற்றியதாக" குற்றம் சாற்றப்படும் சைவர்களையும் கலங்கிய கண்களுடன் சாடினார். இந்த முறை தியேட்டர் காரர்கள்.

இதற்கு முடிவில்லை.

ரசித்த கவிதை

உலகுக்கு சோறு
போடும் விவசாயி
நகை நட்டு விற்றும்
கடன் பட்டும்
விதை விதைத்தான்
அறுவடை செய்யும்
காலமும் வந்தது
ஆவலுடன் எதிர்
பார்த்த அவனுக்கு
காலம் கடந்து
வந்த மழையால்
அவனுக்கு மிஞ்சியது
அவனது கண்ணீரும்
அவனது குடும்பத்தின்
இழப்புகளுமே................
 ------------------------------------------சிந்து.எஸ்.

ஜொள்ளு




13/01/2/13

Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்.

கும்மாச்சி said...

எஸ்.ரா வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

semmalai akash said...



உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

கும்மாச்சி said...

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ஆகாஷ்.

அருணா செல்வம் said...

புத்தகக் கண்காட்சிகளுக்குச் செல்வதற்கும்
ஒரு கொடுப்பினை வேண்டும் என்று தான் நான் நினைப்பேன்.
இருந்தாலும்... முதல் போல் இல்லாமல் இப்பொழுது புதுவையில் எல்லா புத்தங்களும் கிடைக்கிறது. அப்படி அவர்கள் கடையில் இல்லை என்றாலும் நமக்காக வரவழித்துக் கொடுக்கிறார்கள்.

கவிதை அருமை.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
என் இதயங்கனிந்த பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் கும்மாச்சி அண்ணா.

கும்மாச்சி said...

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி அருணா.

S P Sarathy said...

Good coverage from book exhibition to film distribution, in this article. Keep it up the varieties

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.