Friday 4 January 2013

புத்தாண்டு

முதலில் எல்லோருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இந்த வருடம் புத்தாண்டிற்கு சென்னை வந்து சேர்ந்தேன். புத்தாண்டிற்குஒன்றும் பெரிய கொண்டாட்டம் இல்லை. வழக்கம்போல் மூடியை முகர்ந்து மட்டையாகி உறங்கியது ஒருபுறமிருக்க, மற்றபடி வழக்கம்போல் மற்றுமொரு நாள்தான்.

முப்பத்தி ஒன்றாம் தேதி காலையில் விமானமிறங்கி வீடு வந்து சேர்ந்தவுடன், முதல் ஆப்பு முன்னாடி நின்று ஆடியது. என்ன வழக்கம்போல் மின்சராம்தான், எப்படியோ தட்டு தடுமாறி கதவை திறந்து வீட்டிற்குள் நுழைந்து செட்டில் ஆனாவுடன் ஆப்பு எல்லாம் வரிசயாக நின்று வாழ்த்து  சொல்லிக்கொண்டிருந்தன.

மின்சாரம் வந்தவுடன் மடிக்கணினியை ஆன் செய்து மின்னஞ்சல் பார்க்கலாம் என்றால், WiFi இணைப்பு "பெப்பரப்பே" என்றது. சரி லேன்ட் லைனை சரியா? என்று பார்த்தால் அது "அம்மா ஆட்சி எதிர்கட்சி தலைவர் போல" அடங்கியிருந்தது. சரி ஏர்டெல் உதவிக்கு அழைத்தால் அது மொபைலில் உள்ள எல்லா எண்களையும் மற்றும் உபரி சாவிகளையும் அழைத்த பின் ஒரு மொக்க பார்ட்டி வந்து குலம் கோத்திரமெல்லாம் கேட்டறிந்து ஒரு கம்ப்ளைன்ட் நம்பர் கொடுத்து அபீட் ஆகியது.

பின்னர் பழுது பார்ப்பவர், ஒயர்மேன், கம்பமேறி என்று ஒவ்வொருவர் காலை கையை பிடித்து இப்பொழுதுதான் ஒருவழியாக வேலை செய்ய ஆரம்பித்தது.

இனி புத்தாண்டு கவிதை

வருடா வருடம் யாரும்
அழைக்காமல் வந்து போகிறாய்
வரும் பொழுது மின்சாரம்
கொண்டு வந்தால்  என்ன
குறைந்தா போய்விடுவாய்
கன்னியர்களின் கற்பை காத்து
கடந்த வருடம் போலில்லாமல்
கர்னாடக கலாசாரம் விட்டு
காவிரியை கற்பிழக்க சொல்...................


04/01/2013



Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

வாழ்த்துக்கள்.

கும்மாச்சி said...

எஸ்.ரா. உங்களுக்கும் உங்களது குடும்பத்தாருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சுரேஷ்.

அருணா செல்வம் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் கும்மாச்சி அண்ணா.

கும்மாச்சி said...

அருணா வருகைக்கு நன்றி. உங்களுக்கு எங்களது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.