Saturday 29 December 2012

மரணம் தின்றது......

மரணம் தின்றது
மனதில் கனவை சுமந்து
மலரத்துடித்த
மாணவியை அல்ல

மரணம் தின்றது
மலரை அல்ல
மனதில் உறைந்த
மனித நேயங்களையும் தான்

மரணம் தின்றது
மலரை அல்ல
பழமை கதைபேசி
கலாசாரம் பேணும்
கயவர்களின்
மனசாட்சியையும் தான்

மரணம் தின்றது
மலரை அல்ல
மனுநீதி காக்கும்
மக்கள் பிரதிநிதிகள்
மேலிருந்த
நம்பிக்கைகளையும் தான்


Follow kummachi on Twitter

Post Comment

8 comments:

semmalai akash said...

நல்ல சிந்தனை நண்பரே!

கும்மாச்சி said...

ஆகாஷ் வருகைக்கு நன்றி.

rajamelaiyur said...

கொடுமையான , வேதனையான நிகழ்வு .. உருப்படாத அரசியல் , சட்ட பிரிவுகளால் மற்ற வழக்கு போல இதுவும் மறக்கடிக்கபடுமோ ?

rajamelaiyur said...

இதையும் படிக்கலாமே :

தண்ணி அடிப்பவர்கள் கவனத்திற்கு ...


பென்குயினே பெயரெழுது

கும்மாச்சி said...

ராஜா வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

எஸ்.ரா. வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

இனி வரும் ஆண்டிலாவது இது போன்ற வன்கொடுமைகள் நிகழாதிருக்கட்டும்! நல்லதொரு அஞ்சலிகவிதை!

Avargal Unmaigal said...


உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.