Thursday 6 December 2012

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ------விமர்சனம்

"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படத்தினை இன்று தோஹாவில் உள்ள  தியேட்டரில் பார்த்தேன். இது போன்ற ஸ்டார் வேல்யு இல்லாத படங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் வருவதில்லை. இந்தப் படத்தினை பற்றிய விமர்சனங்கள் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் ஏற்கனவே குறும்படங்கள் தயாரித்து விருது பெற்றவர். கதாநாயகன் விஜய் சேதுபதியும் மாஸ் ஹீரோ அல்ல. இருந்தாலும் நல்ல திரைக்கதையால் படம் பேசப்படுகிறது என்பது உண்மை. ஹீரோவுடன் கூட வரும் நண்பர்களின் இயல்பான நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம்.

கதாநாயகன் கல்யாணம் இன்னும் இரண்டு நாட்களில், அழைப்பிதழ்கள் எல்லாம் வைத்து தயாராகிக்கொண்டிருக்கின்றார். இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட போக தலையில்  அடிபட்டு "Temporary memory loss" ஏற்படுகிறது. நண்பர்கள் இது விரைவில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் கல்யாணப் பெண்ணிடமும், வீட்டாரிடமும் மறைத்து கல்யாணத்தை நடத்தி வைக்க ஏற்பாடு செய்கின்றனர். கல்யாணம் நடந்ததா, ஹீரோவிற்கு சரியாகிவிட்டதா என்பதை படத்தில் காணலாம்.

ஹீரோவின்  நண்பனாக வரும் "சரஸ்", ன் நடிப்பு மிக இயல்பாக உள்ளது. விஜய் சேதுபதி ஒரே வசனத்தை திரும்ப என்ன ஆச்சு" என்று கூறிக்கொண்டிருந்தாலும் படம் பார்த்த நமக்கு தோன்றுவது, என்ன ஆச்சு தமிழ் திரை உலகத்திற்கு, இது போன்ற படங்கள் அடிக்கடி வருவதில்லையே என்றுதான் தோன்றுகிறது. ஆனால் இடைவேளைக்கு பிறகு காமெடி தோரணங்கள் கதையோடு இழைய விட்டிருக்கிறார்கள்.

படத்தில் குறைகளே இல்லையா, என்றால்"இருக்கிறது", ஆனால் இது போன்ற படங்களில் அதை பெரிதாக்குவது தவறு.

இடைவேளை வரை கொஞ்சம் இழுவையை தவிர்த்திருக்கலாம். ஹீரோவின் காதலை பிளாஷ் பேக்கிலோ, இல்லை ஆரம்பத்திலேயோ சொல்லி ஒரு வித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பின்னர் "மெடுலா ஒப்லாங்கட்டா" மேட்டரை எடுத்திருந்தால் இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும் என்பது பெருமபாலானவர்கள் எண்ணம்.


இந்த படம் இன்று நான் பார்த்த பொழுது என்னையும் சேர்த்து தியேட்டரில் ஐந்து பேர்கள்தான், இதை நான் படத்தின் தரத்திற்காக சொல்லவில்லை. நல்ல படத்திற்கு என்று கூட்டம் வந்திருக்கிறது.

Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

அருணா செல்வம் said...

இப்பொழுதெல்லாம் நல்ல படம். பார்க்கலாம் என்று யாராவது உங்களைப் போன்றவர்கள் சொன்னால் தான் நான் அந்தப் படித்தைப் பார்ப்பேன். என்னைப் பொல் எத்தனை பேரோ...

நன்றி கும்மாச்சி அண்ணா. உங்களின் விமர்சனமே
படம் பார்க்கத் துாண்டுகிறது.

கும்மாச்சி said...

அருணா வருகைக்கு நன்றி.

semmalai akash said...

அருமையான விமர்சனம், இந்த படத்தை பார்க்க ஆவலாக உள்ளது, நான் இருப்பது அமீரகத்தில் என்பதால் பார்க்க கொஞ்சநாள் ஆகும்.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ஆகாஷ்.

sssss said...

padam really super konjam screenplay nalla pannirukalam

Unknown said...

A Superb film which has a fantastic storyline and unbelievable expressions from all 4 characters.Even the barber who comes for just 3 mins plays his role greatly.I hope this film bags the Best film award for 2012.Kudos to the story writer and director for such a fresh attempt.we are reminded of the low budghet Films of Visu sir in th 1980's .This movie proves that you need pay crores to super stars if u have a strong story like this.Intha padathil kathai thaan nayakan.well done crew.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.