Friday 7 December 2012

கலக்கல் காக்டெயில்-95

"FDI" மத்திய அரசின் கடைசி மூச்சின் முயற்சி

சில்லறை வர்த்தகத்தில்அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் மசோதாவை இன்று ஆளும் கட்சி, உபரி கட்சிகளின் கையை காலைப் பிடித்து இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டது.

இந்த மசோதாவினால் யாருக்கு லாபம் என்பது தெளிவாக தெரியவில்லை?, இதனால் சில்லறை  வியாபாரிகள் பாதிக்கப் படுவார்களா? நம்ம அறிவுக்கு எட்டாத விஷயம்.

ஆனால் ஒன்று நிச்சயம், அரசியல் கட்சிகள் அடுத்த தேர்தலுக்கு இதை ஒரு ஆயுதமாக பயன் படுத்தி, வெள்ளந்தி மனிதர்களின் ஒட்டு வேட்டையாடுவது நிச்சயம்.

தமிழ்நாட்டில் இதற்கான ஆயத்தங்கள் ஏற்கனவே செய்யப்பட்டிருக்கின்றன. நாடார் சமூகம்தான் ஏதோ வியாபாரம் செய்வது மாதிரியும் மற்றவர்கள் "அண்ணாச்சி அரை கிலோ புளி" என்று வாங்கும் நிலயில் இருப்பதாகவும் ஒட்டு வேட்டைக்கு ஆட்டையைப் போட ஆரம்பித்திருக்கிறார்கள்.

இனி  அய்யாவும், அம்மாவும் நாடார் சமூக காவலர்களாக காண்பித்துக் கொள்வார்கள்.

மாயாவதி அடித்த அந்தர் பல்டிதான் மசோதாவின் வெற்றிக்கு காரணம்.

காவிரி யூ டர்ன் அடிக்க வேண்டுமாம்

பருவமழை பொய்க்கும் போதெல்லாம் இந்த காவிரி பிரச்சினை தலையெடுக்கும். இந்திய பாகிஸ்தான் எல்லை பிரச்சினை போல இதுவும் ஒரு தீராத பிரச்சினை.அம்மா ஆட்சிக்கு வரும் பொழுதெல்லாம் காவிரி பிரச்சினையும் கை கோர்த்துக்கொண்டு வரும். இதை பற்றி நான் எப்பொழுதோ எழுதிய கவிதை இது.காவிரி "யு டர்ன்" அடிக்கவேண்டும்

கர்நாடக மக்கள் வேண்டுதல்.

கபினி கரை புரளும் பொழுது,

காவிரி தமிழ் நோக்கிப் பாயும்,

கண்துடைப்பு உண்ணாவிரதம்,

கதாநாயகர்கள் மேடைச்சண்டை,

கடந்த வருடம் போல் இந்த வருடம்,

கடற்கரையில் கிடையாது,

கவலையில் தொலைக்காட்சிகள்,

அரசியல் நாடக அரங்கேற்றம்,

அடுத்த வருடம் பார்த்துக்கொள்ளலாம்.

2013 எப்படி இருக்கும்?

எல்லா தொலைக்காட்சிகளிலும் காலையில் வரும் நிகழ்ச்சி இன்றைய ஜோதிடம். இதில் ராசி வாரியாக அன்றைய நம் நாள் எப்படி இருக்கும் என்று சரியாக தப்பாக சொல்லுவார்கள். இதில் ந்யூமரலாஜி ஜோதிடம் பற்றி ஒரு நாள் கேட்க நேர்ந்தது.பிறந்த தேதியின் கூட்டுத்தொகையை வைத்து சொல்லிக்கொண்டிருந்தார்.

கூட்டுத்தொகை

ஒன்று  என்றால் ஒன்றும் விளங்காது
இரண்டு என்றால் இடிந்து விழுவாய்
மூன்று என்றால் மூளியாகிவிடும்
நாலு என்றால் நாய் படாத பாடுதான்
ஐந்து என்றால் அழிவு நிச்சயம்
ஆறு  என்றால் "ஆ............டி"டும்
ஏழு என்றால் ஏமாற்றம் தான்
எட்டு என்றால் பட்டென அழிவு
ஒன்பது என்றால் ஒழிந்துவிடும்.


ஸ்............ப்பா ............முடியலடா சாமீ..............

ரசித்த கவிதை

நானென்பது யாரென
புரியவில்லை
வெறும் புத்தகங்களா
நண்பர்களின் சாயைகளா
அனுபவங்கள் என்று நம்பப்படுகிற
புனைவுகளா
காலத்தில் படர்ந்து திரியும்
மூதாதைகளா
எனது உடல் எதனால்
நிரப்பப்பட்டிருக்கிறது.

-------------------------லக்ஷ்மி மணிவண்ணன்


ஜொள்ளு07/12/2012Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

Prem S said...

ஜொள்ளு -கீழ் நோக்கு பார்வை நமக்கு இல்லை

கும்மாச்சி said...

பிரேம்குமார் வருகைக்கு நன்றி.

NKS.ஹாஜா மைதீன் said...

ok ok

கும்மாச்சி said...

ஹாஜா வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

அருமையான தொகுப்பு! நன்றி!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சுரேஷ்.

அருணா செல்வம் said...

“அரசியல் நாடக அரங்கேற்றம்,
அடுத்த வருடம் பார்த்துக்கொள்ளலாம்“

நல்ல வரி.
நாட்டு நிலைமையை எளிதாகச்
சொல்லியிருக்கிறீர்கள் கும்மாச்சி அண்ணா.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி அருணா.

NKS.ஹாஜா மைதீன் said...

சகோ ...உங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிபிட்டுள்ளேன்...நேரமிருந்தால் பார்க்கவும்...

கும்மாச்சி said...

ஹாஜா என்னுடைய பதிவுகளைப்பற்றி குறிப்பிட்டதற்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.