Monday 17 December 2012

நீதானே என் பொன்வசந்தம்

கௌதம் வாசு(லூசு)தேவ மேனன் படம் என்று எதிர் பார்த்து போனால் படமும் அதே போலதான். மின்னலே தொடங்கி விண்ணைத்தாண்டி வருவாயா வரை தக்காளி ஒரே மாதிரிதான் கதை களம், கமல்ஹாசன் அமெரிக்காவில் கொலைகாரர்களை வேட்டையாடுவது நீங்கலாக.

நீதானே என் பொன்வசந்தம், கதை யாரோ ரேஷ்மா கட்டாலாவாம். அம்மணி கதையை திரைகதையாக்கியதில்தான் பிரச்சினை. கௌதம் அதை தன் பாணிக்கு மாற்றி புளிப்பூற்றிவிட்டார்.

ஜீவாவை பள்ளி மாணவனாக பார்க்க சகிக்கவில்லை. சிறுவயது தொட்டு பழகி அடிக்கடி சண்டை போட்டுக்கொள்ளும் காதல் கதை  சமீபத்தில் ஏதோ ஒரு படத்தில் பார்த்த நியாபகம். இருந்தாலும் இந்தப்படத்தில் சமந்தாவின் முகபாவங்களுக்கு சபாஷ் சொல்லியே ஆகவேண்டும். அதுவும் ஜீவா வேறொருத்தியை மனக்கப்போகிறார் என்று தெரிந்தவுடன் வீட்டில் தன் அக்காவிடம் புலம்புமிடம் சூப்பர்.

படத்தின் ஒளிப்பதிவு ஓம்பிரகாஷ், எம்.எஸ். பிரபு படத்தை ஓரளவிற்கு தூக்கி நிறுத்துகிறார்கள். ஜீவா எம்.பி.யே படிக்கப்போகுமுன் மொட்டை மாடியில் சொல்லும் காட்சியை ஏன் லாங் ஷாட்டிலேயே எடுத்திருக்கிறார் என்பது விளங்க வில்லை. ஜீவாவின் மேல் நம்பிக்கை இல்லையோ.

படத்தில் ஒரு குண்டு பெண் வருகிறார். நடிகர் மோகன் ராமின் மகளாம். அம்மணி உங்களுக்கு நல்ல எதிர் காலம் இருக்கிறது. அம்மணி சந்தானத்திற்கு ஜோடியாக சேர்ந்து ஒரு சில நிமிடங்கள் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை பரோடி(Parody) செய்கிறார்கள். சந்தானம் வழக்கம்போல் கிச்சுகிச்சு மூட்டுகிறார்.


விண்ணைத்தாண்டி  வருவாயா மொக்கை காதலை தூக்கி நிறுத்த ஏ.ஆர். ரஹ்மான் இசை கைகொடுத்த அளவிற்கு இந்தப் படத்தில் இளைய ராஜா செய்யவில்லை என்றே தோன்றுகிறது. "நீதானே ஏன் பொன்வசந்தம்" பாடலை பாடியது யார்? தமிழ் உச்சரிப்பில் அத்துனை கொலை, நீங்களுமா ராஜா?

ராஜா இந்த மாதிரி படங்களில் உங்களது குரலை தவிருங்கள். படத்தில் எல்லோரும் மெச்சும் "சாய்ந்து சாய்ந்து" மெட்டு சூப்பார்தான், அந்தப் பாடலை வேறு யாராவது ஒரு பாடகரை வைத்து செய்திருக்கலாம்.

படத்தில் எனக்குப் பிடித்த பாடல், காற்றை கொஞ்சம்............தான்.

இந்த முறை படத்தை டோஹாவில் சிடி சென்டர் திரையரங்கில் பார்த்தேன் ஆதலால் ஓரளவிற்கு சகிக்க முடிந்தது.

மொத்தத்தில் நீதானே ஏன் பொன்வசந்தம், கொஞ்சம் புழுக்கமான வசந்தம்தான்.

Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

அருணா செல்வம் said...

மொத்தத்தில் நீதானே ஏன் பொன்வசந்தம், கொஞ்சம் புழுக்கமான வசந்தம்தான்.

(ஏன் பொன் வசந்தமா...?)

விமர்சனம் அழகாக செய்திருக்கிறீர்கள்.
நன்றி கும்மாச்சி அண்ணா. (மொத்தத்தில் நான் இந்தப் படம் பார்க்க மாட்டேன்)

JR Benedict II said...

ம்ம் ரைட்டு தல

Unknown said...

சமந்தாவை மட்டுமே நம்பி எடுத்த படம் போல் இருக்கிறது.

//ராஜா இந்த மாதிரி படங்களில் உங்களது குரலை தவிருங்கள். படத்தில் எல்லோரும் மெச்சும் "சாய்ந்து சாய்ந்து" மெட்டு சூப்பார்தான், அந்தப் பாடலை வேறு யாராவது ஒரு பாடகரை வைத்து செய்திருக்கலாம்.//

இனிமேல் எந்த படத்திலும் இளையராஜா பாடாமல் இருப்பதே அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் நல்லது!

Unknown said...

விஜய் ஏன் தன் படத்துல குத்துப்பாட்டும், பஞ் டயலாக்கும் வேணுண்னு அடம் புடிக்கறாருன்னு இப்பதான் புரியுது.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.