Tuesday 5 November 2013

தமிழ் ஈழமும் ஆணுறைகளும்.............

இந்த மாதம் இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்வாரா? இல்லை நமது நாட்டின் சார்பாக வேறு அமைச்சர்களோ அல்லது பிரதிநிதிகளோ அனுப்பபடுவார்களா? என்பதுதான் ஊடகங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் செய்தி.

"தமிழ் ஈழம்" என்ற ஒரு சொல்லும் அது சார்ந்த போராட்டங்களும் அரசியலும் இன்றைய காலகட்டத்தில் அரசியல்வாதிகளால் நன்றாகவே உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் எந்த அரசியல் கட்சிகளும் விதிவிலக்கல்ல. முதலில் தமிழ் நாட்டில் தி.மு.க வும், அ.தி.மு.க வும் மாறி மாறி தமிழ் ஈழம் பெற்றுத்தந்தனர். முதலில் ஐயா நான்கே நாட்களில் தமிழ் ஈழம் வாங்கிக்கொடுத்தார். பிறகு "ஈழத்தாய்" மற்றொருமுறை தமிழ் ஈழம்  பெற்றுத்தந்தார்.

இப்பொழுது காங்கிரசும் (தமிழ்நாடு காங்கிரஸ்) தன் பங்கிற்கு தமிழ் ஈழத்தை கையிலெடுத்திருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அமைச்சர்கள் எல்லாம் விமான  நிலையத்தில் மைக்கைப் பிடித்து "இசைப் ப்ரியா" படுகொலை, ராஜபக்ஷே போர்க்குற்றவாளி, அது இது என்று கூவிவிட்டு செல்கின்றனர். வை கோ. காங்கிரஸ் அமைச்சர்கள் இத்துணை நாட்கள் கோமாவில் இருந்தார்களா? என்று கேட்கிறார். ஆனால் இவரும் சட்டசபை தேர்தலுக்கு முன் அம்மாவிற்கு வால் பிடித்த காலத்தில் கோமாவில் இருந்தார் என்பதை மறந்துவிட்டு பேசுகிறார்.

 ஈழப்போர் உச்ச கட்டத்தில் இருந்த பொழுது நடந்த போராட்டங்களும், அரசின் அடக்குமுறைகளும், தீக்குளிப்புகளும், ரஜினாமாக்களும், உண்ணாவிரத நாடகங்களும் ஊரறிந்தது. இவையெல்லாம் பொய் பித்தலாட்டங்களின் உச்சகட்டம்.

முள்ளிவாய்க்கால் நிகழ்விற்கு காரணம் யார் என்பது இப்பொழுது கூவிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் எல்லோருக்கும் தெரியும். என்பதுகளில் தமிழ்நாட்டில் இருந்த தமிழ் ஈழ ஆதரவு இரண்டாயிரத்து ஒன்பதில் இல்லாது போனது ஏன்? என்பதுகளில் இந்திரா காந்தியும், எம்.ஜி.ஆரும் வகுத்த நிலை இலங்கை ஜெயவர்தனே அரசை ஆட்டுவித்தது. இலங்கை அரசு சீன அரசு பக்கம் சாயும்போதெல்லாம் இந்திராகாந்தி இலங்கையை தனது சானக்கியதனத்தால் மிரட்டி அடிபணிய வைத்திருந்தார். அத்தகைய நிலை இப்பொழுது மாறியதற்கு காரணம் இந்திய அரசியல்வாதிகளின் சுயநலம்  என்று சொன்னால் மிகையாகாது. இதற்கு எந்தக்கட்சியும் விதிவிலக்கல்ல.

தேர்தல் வரும் நேரம் எல்லா கட்சிகளும் தமிழ் ஈழத்தை ஆணுரைபோல்  உபயோகித்து விட்டு கழற்றி எறிகின்றனர் என்பதே உண்மை.


Follow kummachi on Twitter

Post Comment

11 comments:

மகேந்திரன் said...

மிகச் சரியாக சொன்னீர்கள் நண்பரே...
சுயநலம், ஓட்டுகள் இப்படி வெறும்
அரசியலுக்காக மட்டுமே இலங்கைத் தமிழர்
பிரச்சனையை கையில் எடுக்கிறார்கள்....

கும்மாச்சி said...

மகேந்திரன் வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

நெத்தியடி வார்த்தை! இதுவும் ஈன ஜென்மங்களுக்கு உரைக்காது!

Anonymous said...

வணக்கம்
சரியான சாட்டையடி...... வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

காமக்கிழத்தன் said...

சிங்களக் காடையரால் இசைப்பிரியா சித்திரவதைக்கு உள்ளாகிக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட காட்சியை பார்த்துக்கொண்டே பட்டாசுகள் வெடித்துப் பலகாரங்கள் தின்று குதூகலித்தவன்தானே தமிழன்!!! [நாம் உட்படத்தான்].

’தமிழன்’ என்ற வார்த்தையை உச்சரிக்கக்கூட இனி எவனுக்கும் யோக்கியதை இல்லை.

மெல்ல இந்த இனம் அழியும்.



கும்மாச்சி said...

காமகிழத்தன் ஆதங்கம் புரிகிறது.

கும்மாச்சி said...

சுரேஷ், ரூபன் வருகைக்கு நன்றி.

வேகநரி said...

//இலங்கை அரசு சீன அரசு பக்கம் சாயும்போதெல்லாம் இந்திராகாந்தி இலங்கையை தனது சானக்கியதனத்தால் மிரட்டி அடிபணிய வைத்திருந்தார்.//
தவறான ஒரு நம்பிக்கை.
இலங்கை அரசு அந்த காலத்தில் அமெரிக்காவின் அரவணைப்பு வட்டத்துக்குள் இருந்த நாடுகளில் ஒன்று. அதே காலத்தில் இந்திராகாந்தியால் சோவியத் யூனியனின் அரவணைப்பு வட்டத்துக்குள் அப்போது இந்தியா இருந்தது . அதன் காரணமாகவே அமெரிக்காவின் அன்பு வட்டத்துக்குள் இருந்த இலங்கையில் உள்ள வன்முறைவாதிகளுக்கு இந்திராகாந்தி ஆயுதம் வழங்கி ஊக்குவித்தார். அதன் பக்க விளைவுகளை இந்தியா தற்போது அனுபவிக்கிறது.

Unknown said...

நான் பல ஆண்டுகளாக பட்டாசு வெடிப்பதையே விட்டுவிட்டேன்.

Anonymous said...

என்னவோ போங்க! சொந்த வீடே பற்றிக் கொண்டு எரியுதாம், பக்கத்து வீட்டுக்கு தண்ணி மொண்டு ஊத்தினானாம்! :/

வேகநரி said...

நீங்க சொன்ன இந்திராகாந்தி காலத்தில் இலங்கை எந்த அணியில் இருந்திச்சு இந்தியா எந்த அணியில் இருந்தது என்பதை இந்த செய்தியில் காணலாம்.
http://www.bbc.co.uk/tamil/multimedia/2014/01/140117_britainsrilankahariharan.shtml

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.