Tuesday 23 September 2014

கலக்கல் காக்டெயில்-157

இசை மேதை மேன்டலின் ஸ்ரீநிவாஸ்

சென்னை உரத்தொழிற்சாலையில் பனி புரிந்துகொண்டிருந்த காலம். மேற்கு மாம்பலத்தில் வாசம். ராமநவமி உத்சவம் மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தில் மிகவும் பிரபலம்.

கல்லூரி நாட்களில் பகலில் தூங்கி இரவில் படிப்பது வழக்கம். ராமநவமி உத்சவத்தின் பொழுது படிப்பதற்காக விடுமுறை விடப்படும் நாட்களில் கிட்டத்தட்ட எல்லா இசை கச்சேரிகளுக்கும் இரவு எட்டு மணிக்கு மேல் ஆஜராவது வழக்கம். ஆனால் வேலைக்கு சென்ற பிறகு விடுமுறை நாட்களில்தான் கச்சேரி கேட்கமுடியும். அந்த வருடம் நிகழ்ச்சி நிரலில் மேன்டலின் ஸ்ரீநிவாஸ் என்று போட்டிருந்தது. புது பெயர் என்பதால் சற்று அலுப்புடந்தான் கச்சேரி கேட்க சென்றேன். கச்சேரி முதலில் ஹம்சத்வணி ராகத்தில் தொடங்கிய பொழுது வாசிப்பவர் கண்ணுக்கு தெரியவில்லை. வயலின் வித்வான் ஜாம்பவான் லால்குடி. கிட்டத்தட்ட நான்கு மணி நேர கச்சேரியில் சிறுவன் அசத்தினான்.

கச்சேரி முடிந்தவுடன் காரியதரிசி வேட்டிக்கட்டிக்கொண்டு அமர்ந்து வாசித்த சிறுவனை குழந்தை போல் தூக்கி கூட்டத்தினருக்கு காட்டினார். பிற்பாடு அதே ஸ்ரீநிவாசை பதினைந்து வருடங்களுக்குப் மத்திய கிழக்கு நாடுகளில் கச்சேரி செய்ய வந்த பொழுது நேரில் சந்தித்தேன். பின்னர் அவரது கச்சேரியை ரசித்த பொழுது அவரின் அபார வளர்ச்சி புரிந்தது. நேரில் சந்தித்த பொழுது அவரது பணிவு வியக்க வைத்தது. தனது புகழை புத்திக்கு ஏற்றிக் கொள்ளாத பணிவு.
இவரை போன்ற மேதைகள் ஆயிரம் வருடத்திற்கு ஒரு முறைதான் பிறப்பார்கள். அவரது அகால மரணம் இசைக்கு நேர்ந்த ஒரு பெரிய விபத்து.

உள்ளாட்சி தேர்தலும் அம்மா மனநிலையும்

எதிர்பார்த்தது போலவே அம்மா கட்சிதான் எல்லா இடத்திலும் வெற்றிக்கொடி நாட்டியது. தமிழக பி.ஜே.பி க்கு தமிழ் நாட்டில் காலூன்றியத்தில் சற்று மகிழ்ச்சிதான்.

ஆனால் அம்மா இதையெல்லாம் கொண்டாடும்  மனநிலையில் இல்லை எனபது ஊரறிந்த உண்மை.

பெங்களூரு வழக்கு முடிந்து தீர்ப்பின் எதிர் பார்ப்பு தலையை தின்று கொண்டிருக்கிறது. இரண்டு மாநில காவல்துறையுமே உஷார் படுத்தப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்த இந்தியாவுமே எதிர்பார்க்கும் தீர்ப்பு இது. இந்த தீர்ப்பும் இந்தியாவின் அரசியல் நிதர்சனத்தை தோலுரிக்கக் காத்திருக்கிறது.

ரசித்த கவிதை

சாபம்

அசிங்கமாக
இருப்பதாய்ச் சொல்லி
ஆற்றங்கரையிலிருந்து
அப்புறப்படுத்தினார்கள்
எங்கள் வீடுகளை.
அழகூட்டுவதாய்ச் சொல்லி
அங்கேயே
கட்டிக்கொண்டார்கள்
அவர்களின் மாடிகளை.
கடலுக்குப் போய்விடும்
கவலை வேண்டாமெனச் சொல்லி
கழிவுகளைக் கொட்டினார்கள்.
குளிர்பான ஆலைக்கு
வேண்டுமென
குழாய் பதித்து
நீரை உறிஞ்சினார்கள்.
அப்போதெல்லாம்
ஆற்று மணலில்
அழுது புரண்டபடி
'மாரியாத்தா கேட்பாள்’ என
மண்ணை வாரித் தூற்றுவாள்
அம்மா.
இன்று
அவள்
வாரித் தூற்றிய மண்ணையும்
வாரிக்கொண்டு போகிறார்கள்
லாரிகளில்.
என்ன செய்வார்கள் இனி...
அம்மாவும்
மாரியாத்தாவும்!
----------------------நன்றி: கண்மணிராசா


ஜொள்ளு
Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

J.Jeyaseelan said...

இவ்வளவு சிறிய வயதிலேயே இறந்ததது வருத்தம் தான் சார்.. நன்றாக இருக்கிறது சார், வச‌னங்கள் கூட சிம்பிளி சூப்பர்ப், நாளைக்கும் காத்திருக்கிறோம்...

J.Jeyaseelan said...

இவ்வளவு சிறிய வயதில் அவருடைய இழப்பு வருத்தமானது தான் சார், பார்ப்போம் தீர்ப்பு எப்படி வருகிறது என்று, கவிதைப்பகிர்வும் சூப்பர்... கொஞ்சம் இடைவெளி ஆகிவிட்டது, இனி தொடருவேன்..

”தளிர் சுரேஷ்” said...

மாண்டலின் ஸ்ரீநிவாசின் மறைவு எனக்கும் அதிர்ச்சி அளித்தது! தீர்ப்பு பாதகமாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது! கவிதை அருமை! நன்றி!

கும்மாச்சி said...

ஜெயசீலன் வருகைக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் said...

மாண்டலின் அதிர்ச்சியான மறைவு...
அம்மாவுக்கு தீர்ப்பு சாதகமாகத்தான் இருக்கும் போல...
கவிதை ரொம்ப அருமை...

கும்மாச்சி said...

குமார் வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.