Monday 8 September 2014

கலக்கல் காக்டெயில்-155

சிஷ்யைகளும் ஆண்மை பரிசோதனையும்

நித்திக்கு இன்று ஆண்மை பரிசோதனை செய்யப்படுகிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சோதனையை தவிர்க்க அவரது மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் இன்று நித்திம் சிஷயைகள் புடை சூழ மருத்துவ மனையில் ஆஜராகி பரிசோதனைக்கு தயாராகிவிட்டார்.

தனக்கு குழந்தைபோல உடல் தான் இருப்பதாக அவர் கூறியிருந்ததால், கடுப்பான கோர்ட்டு அவுத்துப்பாருங்கடா!!!!!! என்று ஆணையிட்டுவிட்டது.

நித்தி படு உஷார் பார்ட்டி தான், வெவரமாத்தான் சிஷயைகள் புடை சூழ போயிருக்கிறார்.

உள்ளாட்சி இடைத்தேர்தல்

கோவை, நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கும் மேலும் எட்டு மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. வழக்கம்போல அம்மா தனது வேட்பாளர்களை அறிவித்துவிட்டார். ஐயாவும் மற்ற கட்சிகளும் எப்படியும் ஒன்றும் தேறாது என்று "போட்டியில்லை" என்று ஜகா வாங்கிவிட்டார்கள்.

இது ஒரு "பணநாயக படுகொலை". போட்டியே இல்லை என்றால் பணம் எப்படி புழங்குவது? ஜனநாகம் எப்படி பிழைப்பது?

இதெல்லாம் நியாயமில்ல சொல்லிப்புட்டோம், ஆமா!!

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து

மேற்படி வாசகத்தை தன் அறையில் வைத்திருந்ததாலும், மேலும் அமைச்சரின் உத்தரவுகளுக்கு பணிந்து போகததாலும் கோ ஆப்டெக்ஸ் நிர்வாகப் பதவியிலிருந்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் இடமாற்றம் செய்யபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சகாயத்திற்கு இது ஒன்றும் புதிதல்ல, சகாயம் எல்லோரிடமும் சகாயமாகப் போகவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

ரசித்த கவிதை

சருகு

சட்டைப் பையில் கைவிடும்போது
சில பயணச் சீட்டுகளோடு சேர்ந்து
சருகு ஒன்றும் இருந்தது.
கூர்ந்து கவனித்தபோது
அந்தச் சருகு
பொன்னிறத்தில் நரம்புகள் தெரிய
என் தாத்தாவின் சருமத்தை ஒத்திருந்தது.
இன்று பயணித்த ஊர்களில்
ஏதோ ஓர் ஊராக இருக்கும்
இந்தச் சருகுக்கு
அவ்வூரிலும் ஒரு தாத்தா இருப்பார்
இந்தச் சருகுபோல!
நன்றி -------------------------------------உழவன் 

ஜொள்ளு





Follow kummachi on Twitter

Post Comment

No comments:

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.