Sunday 31 August 2014

டீ வித் முனியம்மா பார்ட்-19

இன்னா செல்வம் முனியம்மாவை கண்டோ.........

டேய் மீச இன்னா முனியம்மாவ கேட்டுன்னு கீற, பொயுதோட வந்து குந்திகினுகீறன் எனுக்கு மொதல்லோ ஒரு சைனா டீ போடுறா டோமரு....

இன்னா லிங்கம் சாரு முனிம்மா வராம ஒரே புளிப்பூத்துது.....

டேய்  இர்றா........தோ வருது பாரு

இன்னா செல்வம், லோகு, பாய், லிங்கம் எல்லாம் இங்கன குந்திகினுகீறிங்க கடைல வியாவாரம் இல்ல.......

நாடாரு எங்கடா?......... லோகு ஆளே காணோம்,

அவரு சரக்கு பிடிக்க காலில கோயம்பேடு போனவருதான், இன்னும் கடையாண்ட வரல. அது சரி முனிம்மா இன்னா நூசு போட்டுக்கிறான் பேப்பர்ல.....

சன் டீ.வி.க்கு ஆப்பு வக்குறாங்க போல.

ஐய இது இன்னா புது நூஸா கீது........

ஆமாம் பாய் அவனுங்க தானே கேபிள் டிவி அல்லாத்தையும் வலிச்சிகினு ஆட்டம் போட்டானுங்க.......இப்போ எல்லாம் அம்பேல்.

ரண்டு மாறனுங்களையும் பிடிச்சி உள்ளார போடுவானுங்க போல.

அதான் லிங்கம் சாரு பேப்பர்ல போட்டுக்கிறான். அந்த மலேசியா காரனுக்கு ஸ்பெக்ட்ரம் காண்ட்ராக்ட் கொடுக்க சொல்ல அவனுங்க கிட்ட சண் டிவியில அறுநூறு கோடிக்கு துட்டு வாங்கி ஆட்டைய போட்டுகிறாங்க போல. சி.பி.ஐ இப்போ முயுச்சிகினு கேசு போட்டு உள்ளார தள்ள போறாங்க.

தமியு நாட்ல துட்டு அடிச்சவங்க கேசெல்லாம் இப்ப வெளிய வருது, வரமாசம் வேற பெங்களூரு கோர்ட்டுல தீர்ப்பு சொல்லப்போறாங்க. இன்னா ஆவபோவுது முனிம்மா.

இன்னா ஆவும், ஒன்னியும் ஆவாது லிங்கம் சாரு. அப்பால கீய கோர்ட்டு, மேல கோர்ட்டுன்னு போயி அல்லாம் எஸ்கேப்பு தான்.

இன்னா விசயம் முனிம்மா கலீனறு கச்சில அல்லாம் போயி கேப்டன கண்டுக்குரானுங்க. அன்பழகன் போனாரு, அப்பால நெப்போலியன் போனாரு.

அதெல்லாம் தெரிஞ்ச விசயம்தானடா லோகு, அடுத்த தபா எலிக்ஸனுக்கு ரெடி ஆவுரானுங்கோ.

இன்னா முனிம்மா உள்ளாட்சி இடைத்தேர்தலுல கலீனறு போட்டி இல்லங்கறாரு.

அடபோடா லோகு, இவரு நின்னாலும் ஒன்னியம் புடுங்க முடியாது.

இன்னா முனிம்மா  வை.கோ கூட்டணி உட்டு கயிண்டுக்கப் போறாராமே.

அவரு இன்னா செய்வாரு பாய், சொம்மனான்காட்டியும் டகில் பாச்சா காமிக்குராறு, அவுரால யாருக்கு லாவம்?

முனிம்மா ஒரு நூசு கேட்டியா? நம்மூருல ஒரு ஜட்ஜூ ஊருக்கு போயிருக்க சொல்ல அவரு வூட்டுலயே முப்பது பவுனு நகைய எவனோ லவுட்டிகிறான்.

அம்மா ஆச்சில கொள்ளக்காரனுங்க எல்லாம் ஆந்திரா பக்கம் ஜகா வாங்கிக்கினானுங்க அம்மா சொல்லிச்சு, இன்னும் இங்கதான் கீறானுங்களா?

முனிம்மா ஐசு பக்கிட்டு போட்டியாமே இன்னா விசயம் ஊரே பேசிக்கிதே,

டேய் பயம் எல்லாம் உன் மேட்டருதாண்டா, ஏதோ ஒரு நோய் கீதாம் அதுக்கு உதவி செய்ய துட்டு கேட்ட எவனோ ஒருத்தன் ஆரம்பிச்சு கீறான், அத்த வச்சிக்கினு நம்மூரு நடிகைங்க அம்மணம்மா நின்னுகினு ஐசு தண்ணி ஊத்துதுங்க, இன்னாத்த சொல்ல.

முனிம்மா நூஸ் பேப்பர இப்பால தல்லு, இன்னா படம் போட்டுகிரானுங்க.........

நடுப்பக்கத்துல பாருடா செல்வம்.

  

Follow kummachi on Twitter

Post Comment

1 comment:

'பரிவை' சே.குமார் said...

டீ வித் முனியம்மா ஸ்ட்ராங்காய்...
படம் சூப்பர்....

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.