Friday 15 August 2014

இரண்டாம் சுதந்திரம் வென்றிடுவோம்

வெள்ளையன் அன்றே கொடுத்திட்டான்
சுதந்திரம் என்றே களித்திட்டோம்
கொள்ளையர் கையில் அகப்பட்டோம்
தந்திர வலையில் விழுந்திட்டோம்

பொது நலமென்றே உரைத்திடுவார்
பொய்கள் பல புனைந்திடுவார்
சுயநலம் ஒன்றே கொண்டிடுவார்-(சுதந்திர)
கைகளை இங்கே கட்டிடுவார்
காடுகள் எல்லாம் அழித்திடுவார்
கனிம வளங்களை விற்றிடுவார்
ஏடுகள் சொல்வது பொய்யென்பார்
இனிதே மறக்க செய்திடுவார்
ஜாதிகள் இங்கே இல்லை என்பார்
சமத்துவமே கொள்கை என்பார்
நீதி நெறிகளை மறந்திடுவார்
மிக ஜாதி அரசியலே செய்திடுவார்
ஏழ்மையை ஒழிப்போம் என்பார்
எதிலும்  வளர்ச்சி என்பார்
ஊழலை உரமிட்டு வளர்ப்பார்
அதிலும் முதலிலே நிற்பார்

வெள்ளையன் அன்றே கொடுத்ததனை
முதலாம் சுதந்திரம் என்றிடுவோம்
கொள்ளையர் பிடியில் விடுபட்டு
இரண்டாம் சுதந்திரம் வென்றிடுவோம்.





Follow kummachi on Twitter

Post Comment

12 comments:

அம்பாளடியாள் said...

உண்மையை இடித்து உரைத்த கவிதை வரிகளுக்குத் தலை
வணங்குகின்றேன் அன்புச் சகோதரனே .வாழ்த்துக்கள்
இரண்டாம் சுதந்திரமேனும் இனிதாய் இங்கே மலரட்டும் .

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
கவிதையில் அருமையாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கும்மாச்சி said...

ரூபன் வருகைக்கு நன்றி.

KILLERGEE Devakottai said...

சவுக்கடி வார்த்தைகள் ஆனால் ? உறைப்பதில்லை யாருக்கும் கவிதை அருமை நண்பரே...
எமது சுதந்திரதின பதிவு. ''வெட்கப்படுவோம்'' காண்க...

கும்மாச்சி said...

கில்லர்ஜி வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

இனி ஒரு சுதந்திரம் தேவைதான்! அருமையான படைப்பு! நன்றி!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை...

கும்மாச்சி said...

குமார் வருகைக்கு நன்றி.

Yarlpavanan said...

"வெள்ளையன் அன்றே கொடுத்ததனை
முதலாம் சுதந்திரம் என்றிடுவோம்
கொள்ளையர் பிடியில் விடுபட்டு
இரண்டாம் சுதந்திரம் வென்றிடுவோம்." என்ற
கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.

Thulasidharan V Thillaiakathu said...

கொள்ளையர் கையில் அகப்பட்டோம்
தந்திர வலையில் விழுந்திட்டோம்

பொது நலமென்றே உரைத்திடுவார்
பொய்கள் பல புனைந்திடுவார்
சுயநலம் ஒன்றே கொண்டிடுவார்//

மிக மிக உண்மையே! நச் கவிதை!

மகிழ்நிறை said...

இரண்டாம் சுதந்திரம் தேவையான ஒன்று தான் சகோ! நல்ல முயற்சி!!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.