Thursday 28 August 2014

கலக்கல் காக்டெயில்-154

நெருங்கும் க்ளைமாக்ஸ் 

சொத்துக் குவிப்பு வழக்கு முடியும் தருவாயில் உள்ளதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இதன் முடிவு ஏறத்தாழ எல்லோராலும் யூகிக்க முடிந்ததே. 

இறுதி வாதம் முடியவேண்டிய தருவாயில் வழக்கறிஞர் கோர்ட்டுக்கு வராததால் நீதிபதி கோபமடைந்து ஐந்து மணிக்குள் வரவில்லை என்றால் தீர்ப்பு தேதியை அறிவித்து விடுவேன் என்று சொல்லியும் இறுதி வாதம் முடிந்ததாக தகவலில்லை.

இந்த மாதிரி விஷயமெல்லாம் இங்கு மிக சாதாரணம். ஆரம்பத்திலிருந்தே இந்த வழக்கு பலவிதமாக இழுத்தடிக்கப்பட்டதை நாடு அறியும்.

சாமானியனின் கேள்வி எல்லாம் இதே போன்று வழக்கை இழுத்தடிப்பது ஒரு சாதாரண குடிமகனால் முடியுமா? என்பதே.

மூன்று சம்மன் பெற்று கோர்ட்டுக்கு வரவில்லை என்றால் எக்ஸ் பார்ட்டியாக தீர்ப்பு வழங்க சட்டத்தில் அனுமதியுண்டு.

அது ஏன் இது போன்ற வழக்குகளில் உபயோகப்படுத்தவில்லை என்பது ஒரு பெரிய கேள்விக்குறி?

கேப்டனின் நிலை 

கேப்டன் ஆரம்பத்திலிருந்தே கடவுளிடமும் மக்களுடனும் தான் கூட்டணி என்று சொல்லிக்கொண்டே எல்லா கூட்டணிகளிலும் ஒரு வலம் வந்து விட்டார். தற்பொழுது கலைஞரின் தூதுவர் ஒருவர் கேப்டனை சந்தித்து ஏதோ பேச்சு வார்த்தைகள் நடத்தியதாக செய்தி.

என்னதான் கேப்டனை எல்லோரும் ஓடி ஓடி ஓட்டினாலும் தமிழ் நாட்டு அரசியலில் இன்னும் அவருக்கு செல்வாக்கு இருப்பதாகவே தெரிகிறது.

கேப்டன் இன்னும் சிறிது காலத்திற்கு கட்சியை ஓட்டலாம் கவலை இல்லை.

ரசித்த கவிதை 

சல்லடை நினைவுகள் 



வேர்களுக்குள் வேர்த்தபடி
என்னுள் கிளைவிட
தோல்கீறி
முயற்சித்துக் கொண்டிருக்கிறாய்.

சில....
நிழல் பரப்பும்
எலுமிச்சை வாச வேர்களின்
நடுவில்தான்
உனது வீடும்
எனது வீடுமெனச் சொல்லி...

வானம் தாண்டிய
ஒரு பெருவெளியில்தான்
முந்திய நம் குடிசை
இருந்ததாக
அன்றைய ஊடல் பொழுதில்
எழுதியும் வைத்திருந்தாய்.

எப்போதெனக் கேட்டபடி
உன் தோள் சாய
முன்பொரு காலமென
நீ...சொல்ல
நான்...சிணுங்க
மெல்ல என்....
கொலுசின் மணிகளைக்
கழற்றிக் கொண்டிருந்தாய்.

பூக்களில்தான்
உன் குடியிருப்போ
தேனீக்களின்
தோழியோ நீ
இறகுகளை
தேவதைகளுக்குப்
பரிசளிப்பாயோவென...

வான் பறக்கும்
பறவைகளாய் மாறி
கண் தரும் காமக்களியில்
உன்னோடு களிப்பதில்தான்
எத்தனை அற்புதம் !!!

நன்றி: குழந்தைநிலா ஹேமா !


ஜொள்ளு



Follow kummachi on Twitter

Post Comment

11 comments:

முத்தரசு said...

சல்லடை நினைவுகள் ஜொள்ளுதே

Yoga.S. said...

அருமையான,காக்டெய்ல்!///யாருய்யா இது,(ஜொள்ளு)வண்டியும்,தொந்தியுமா?ஹி!ஹி!!ஹீ!!!

கும்மாச்சி said...

முத்தரசு வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

யோகா வருகைக்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

காக்டெய்ல் நல்லாருக்கு...சுவை சேர்த்தது அந்தக் கவிதைப் பகிர்வு!!

கும்மாச்சி said...

துளசிதரன் வருகைக்கு நன்றி.

அருணா செல்வம் said...

நம் நாட்டில்....
சோற்றுக்கள் முழு பூசணிக்காயை வக்கில்கள் மறைத்தாலும்
அதை பூதக்கண்ணாடி கொண்டு நீதிபதிகள் தேடிக்கொண்டே இருப்பார்கள்.

கும்மாச்சி said...

நீங்கள் சொல்வது போல் நடந்தால் தீர்ப்பில் தெரிந்துவிடும்.

வருகைக்கு நன்றி அருணா.

'பரிவை' சே.குமார் said...

காக்டெயில் கலக்கல்...
கவிதை சூப்பர்...
ஜொள்ளு ஜில்லு...

கும்மாச்சி said...

குமார் வருகைக்கு நன்றி.

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு

தொடருங்கள்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.