Tuesday 12 August 2014

தெரிந்து கொள்வோம்

"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்"

என்றார் பாரதி.  நாம் பேசும் தமிழில் எத்தனையோ வேற்று சொற்கள் கலந்துவிட்டன. இன்றைய தமிழ் இன்னும் இனிக்கிறதா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி?

உண்மையில் நம் தமிழ் மொழி ஒரு சொற்களஞ்சியம். எண்ணற்ற அழகிய தமிழ் சொற்கள் உள்ளன, ஆனால் பிற மொழிக் கலப்பில்  அவை வழக்கொழிந்து போய் விட்டன.

பெற்றவருக்குத்தான் தெரியும் பிள்ளையின் அருமை
கற்றவருக்குத்தான் தெரியும் தமிழின் அருமை
பற்றும் புலமையும் அற்றவருக்குத் தெரியுமா
நற்றமிழ் பெருமை

என்கிறார் தேவநேயப் பாவாணர்

மேலும்

எளிதாகப் பேசுமொழி தமிழ் பாப்பா - மூச்
சிழுக்கும் வல்லொலி யதில் இல்லை பாப்பா
பேசு பாப்பா - தமிழ் பேசு பாப்பா
 என்கிறார்

அந்த வகையில் சில நல்ல தமிழ் சொற்களை வழக்கில் கொண்டு வருவோம்

இசையில் பல்லவி, அனுபல்லவி, சரணம்  போன்ற சொற்களின்  தமிழ் சொற்களை தெரிந்து கொள்வோம்.

பல்லவி--இதை தமிழ் சொல் என்கிறார் தேவநேயப் பாவாணர்
அனுபல்லவி-துனைப்பல்லவி
சரணம்-உருவடி
தொகையறா (உருது சொல்)-உரைப்பாட்டு

தாளங்களுக்கு

ஏகம்-ஒற்றை
ஆதி-முன்னை
ரூபகம்-ஈரொற்று
சம்பை-மூவொற்று
திரிபுடை-மூப்புடை
சாப்பு- இனையொற்று

கோள்களின் தமிழ் பெயர்கள்

சூரியன்-திவாகரன்
சந்திரன்-சோமன்
செவ்வாய்-நிலமகன்
புதன்-புலவன்
குரு-சீலன்
சுக்கிரன்-கங்கன்
சனி-முதுமகன், காரி
ராகு-கருநாகன்
கேது-செந்நாகன்

தமிழில் பேசுவோம்.........


Follow kummachi on Twitter

Post Comment

14 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
நல்ல விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ரூபன்.

அருணா செல்வம் said...

கும்மாச்சி அண்ணா.... நீங்கள் சொன்னதை எல்லாம் வைத்து நான் ஒரு கட்டுரை வரைந்தால் அதற்கு உரைநடை விளக்கத்தை இன்றைய தமிழ் நடையில் தான் எழுத வேண்டும்.
நம் சங்க கால இலக்கியங்கள் அனைத்தும் மக்களுடன் புழங்காமல் போனது அதில் உள்ள தமிழ் சொற்களையே தமிழரால் புரிந்து கொள்ள முடியாமல் போனது தான்.
இன்றைய நிலையில் நாம் பேசும் தமிழில் நமக்குத் தெரிந்தே மற்ற மொழிகளைக் கலக்காமல் இருந்தாலே போதும் என்பது என்னுடையத் தாழ்வான கருத்து.

கும்மாச்சி said...

உங்கள் கருத்து உண்மையே ஆனால் சில எளிமையான தமிழ் சொற்களை பயன் படுத்தலாமே.

Unknown said...

நன்று!புதிய சில தமிழ்ச் சொற்கள் உங்கள் மூலம் கிட்டியது,நன்றி!

கும்மாச்சி said...

யோகராசன் வருகைக்கு நன்றி.

Unknown said...

ஜொள்ளு விட நேரமில்லை போலிருக்கே ?அது சரி ,ஜொள்ளு என்பதற்கு உரிய தமிழ்ச் சொல்லை அறிமுகப் படுத்துங்கள் !
த ம 3

KILLERGEE Devakottai said...

நல்ல பகிர்வு நண்பரே....

கும்மாச்சி said...

பகவான்ஜி ஜொள்ளு என்ற வார்த்தைக்கு ஏற்ற தமிழ் சொல்லை கூகிளாண்டவரிடம் தேடினால் ஜொள்ளு படமாக காண்பிக்கிறது என்ன செய்ய?

கும்மாச்சி said...

கில்லர்ஜி வருகைக்கு நன்றி.

Anonymous said...

//பகவான்ஜி ஜொள்ளு என்ற வார்த்தைக்கு ஏற்ற தமிழ் சொல்லை கூகிளாண்டவரிடம் தேடினால் ஜொள்ளு படமாக காண்பிக்கிறது என்ன செய்ய?//

கும்மாச்சி,

’வழிதல்’, பொருந்தி வருமா?

கும்மாச்சி said...

பொருத்தமா இருக்கும்போல தெரிகிறது.

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல பதிவு கும்மாச்சி...அப்படியிருக்க ஏன் இதை மொக்கை என்று வகைப்படுத்த வேண்டும்....மொக்கை தமிழ் சொல்லா?!!!!!!! ஜொள்ளுக்கு வழிதல் போல மொக்கைக்கு என்ன தமிழ் சொல்?!!

Yarlpavanan said...

சிறந்த தமிழ் விழிப்புணர்வுப் பதிவு
தொடருங்கள்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.