Wednesday, 10 September 2014

சரக்கடிக்கும் தியாகிகள்

சமீபத்தில் ஜூனியர் விகடனில் "குடிகாரர்கள் விழிப்புணர்வு சங்கம்" தலைவர் செல்ல பாண்டியன் அவர்களை பேட்டி கண்டு ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. அந்த கட்டுரை ஒரு எகத்தாள தொனியில் இருந்தாலும் அதில் உள்ள சில நியாயமான உண்மைகள் சிந்திக்க வைக்கிறது.

இந்த மாதிரி கோரிக்கைகள் வைக்கத் தூண்டியது அரசியல் வாதிகள் தான். ஒட்டு கேட்க இவர்களுக்கு சரக்கும், கோழிகுருமாவும் கொடுத்து பழக்கப் படுத்திவிட்டார்கள். இப்பொழுது குடிகாரர்களுக்காக ஒன்றுமே செய்யவில்லை என்று இவர்கள் ஆதங்கம்.

முதலில் இவர்களது வாகனங்களுக்கு தனி நிறத்தில் நம்பர் ப்ளேட் கேட்கிறார்கள். அந்த நிற நம்பர் வண்டியை மட்டும் போலிஸ் பிடிக்கவே கூடாதாம். பின்னே எல்லா வண்டியையும் பிடித்து ஊது ஊது என்றால் குடிகாரர்கள் என்ன செய்வார்கள், வாரம் ஒரு முறை குடித்தாலே மாதம் முழுவதும் நாறும் சரக்கை அரசாங்கம் அநியாய விலைக்கு விற்கிறது.

ஒவ்வொரு டாஸ்மாக் அருகிலும் ஒரு டாக்டர் இருக்கணும். குடியினால் வரும் பாதிப்புகளுக்கு இலவச சிகிச்சையும் மருந்தும் கொடுக்கப்பட வேண்டும்.

வாங்கும் சரக்கிற்கு சரியான பில் கொடுக்க வேண்டும். குடியினால் இறப்பவர் குடும்பத்தை அரசாங்கமே தத்தெடுத்துக்கணும். சினிமாவில் குடிக்கிற சீன வைத்தால் அந்தப் படத்தில் வரும் வருவாயில் 25 விழுக்காடு குடிகாரர்களுக்கு தரவேண்டும்.

குடிகாரகளுக்கென்று ஒருவருக்கு ஐந்து லட்சரூபாய் இன்சூரன்சு பாலிசி அரசு தரவேண்டும். சரக்கை ஆலையிலிருந்து எடுத்து வரும்பொழுது விபத்துக்குள்ளானால் இன்சூரன்ஸ் உள்ளது ஆனால் குடிகாரர்களுக்கு இல்லை. நியாயம்தானே.

மேலும் ஒரு லிட்டர் சரக்கு உற்பத்தியாக 12 ரூபாய்தான் செலவாகிறது, ஆனால் ஒரு க்வாட்டர் எனபது ரூபாய்க்கு விற்கப்படுகிறது, ஆதலால் அரசு விலை குறைப்பு செய்யவேண்டும், ஒரு க்வாட்டர் இருபது ரூபாய்க்குமேல் விற்கக்கூடாது.

மேலும் இந்த டாஸ்மாக் கடைகள் ஒரு மாட்டுத்தொழுவத்தைவிட கேவலமான நிலையில் உள்ளது. சரக்கடிக்குமுன் ஒருவன் அங்கு வெகுநேரம் மூச்சை பிடித்துக்கொண்டு நிற்க வேண்டியுள்ளது. அரசாங்கத்திற்கும் பெரிய அளவு வருவாய் ஏற்படுத்தும் இந்த இடத்திற்கு ஒரு குறைந்த பட்ச குளிர்சாதன வசதி கூட இல்லை. மின்சார துறையும், போக்குவரத்துத் துறையும் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பொழுது, குடி துறை அரசாங்கத்திற்கு கொள்ளை லாபத்தை கொடுத்துக்கொண்டிருக்கிறது.

குடிகாரங்களை தியாகின்னு அறிவிக்கனும் என்ற போஸ்டர்கள் வடசென்னை முழுவதும் ஒட்டப்பட்டிருந்ததாம். பின்னே அரசாங்கம் நடத்துவதற்கு உண்டான பெரும்பொருளை இவர்கள் தங்கள் குடலை உருக்கி, பெண்டாட்டி பிள்ளைகளின் ஏளனப் பேச்சையும், தெரு நாயோடு படுத்து உறங்கியும் ஈட்டிக்கொண்டுக்கின்றனர்.

நியாயமான கோரிக்கைதான், கூடிய விரைவில் இந்த சங்கம் ஒரு குடிகாரர்கள் முன்னேற்ற கட்சியாக உருவெடுத்து ஆட்சியைப் பிடித்தாலும் பிடிக்கலாம்.

நாம் விரும்பும் ஆட்சி மாற்றம் ஒருவேளை இவர்களால்தான் வருமோ?


Follow kummachi on Twitter

Post Comment

12 comments:

”தளிர் சுரேஷ்” said...

காமெடியா இருந்தாலும் நியாயமாவும் தோணுது! ஹாஹாஹா!

”தளிர் சுரேஷ்” said...

காமெடியா இருந்தாலும் நியாயமாவும் தோணுது! ஹாஹாஹா!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

KILLERGEE Devakottai said...

இவர்களாவது வந்து ஆச்சியை பிடிக்கட்டும் அப்பவாவது நாறுதானு சீச்சீ மாறுதானு பார்ப்போம்.

அருணா செல்வம் said...

தலைவர் செல்ல பாண்டியன் அட்ரசைக் கொடுங்கள்......

அவர் பெண்களுக்காக எவ்வளவோ சொல்ல வேண்டியதை விட்டுவிட்டார்.
அதையெல்லாம் அவர் கட்டுரையில் சேர்க்கச் சொல்ல வேண்டும் கும்மாச்சி அண்ணா.....)))

கும்மாச்சி said...

கில்லர்ஜி என்னத்த மாறி என்னப்பண்ணப்போறோம்.

கும்மாச்சி said...

அருணா அவரை ஆவடி டாஸ்மாக் கடையருகில் பார்க்கலாம்.

வருகைக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் said...

அவர்கள் கோரிக்கை நியாயமானதுதானே...

கும்மாச்சி said...

குமார் வருகைக்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

நாடு ரொம்ப முன்னேறிச்சுடுங்க.....நல்லா விளங்கினாப்புலதான்....

கும்மாச்சி said...

துளசிதரன் வருகைக்கு நன்றி.

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.