Thursday 5 September 2019

ஆச்சார்யா தேவோ பவ

ஆசிரியர் தினங்களில் பெரும்பாலும் எல்லோரும் நினைவு கொள்வது நம்மை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கல்வியையும் மற்றும் தொழில் நிறுவனங்களில் நமக்கு தொழில் சொல்லிக்கொடுத்த பயிற்ச்சியாளர்களையும்தான்.

ஆனால் நமது வாழ்வில் நமக்கு ஒவ்வொரு பருவத்திலும் வாழ்க்கை பாதையில் தேவையான போதனைகளை தந்த அனைவருமே நமது ஆசிரியர்கள்தான். அந்த வகையில்  தாய், தந்தை, ஆசிரியர் தொடங்கி எத்தனையோ முகம் மறந்த ஆசிரியர்கள் நம் வாழ்வில் இணைந்திருக்கிறார்கள்.

அந்த வகையில்..............

நான் சென்னையில் மணலியில் பணி புரிந்த காலம். இரவு பகல் என்று ஷிப்ட் வேலை.  தி.நகர் பஸ் ஸ்டாண்டில் கம்பனி வண்டி ஏறினால் சுமார் ஒரு மணி நேர பயணம். சென்னை சிட்டியில் உள்ள எல்லோரையம் வண்டி ஏற்றிக்கொண்டு விவேகானந்தர் இல்லத்தருகே எங்கள் பஸ் இன்றைய காமராஜர் சாலை (பீச் ரோட்) பிடித்து அடுத்த நிருத்தம் பீச் ஸ்டேஷன். பிறகு நேராக கம்பனி செக்யூரிட்டி கேட்தான். நிற்க நான் சொல்லவந்தது எங்கள் பஸ் ரூட் பற்றி அல்ல.

இந்த பஸ் ரூட்டில்தான் அண்ணா நீச்சல் குளம் உள்ளது. ஒருநாள் நாங்கள் இரவு டூட்டி முடிந்து வரும் பொழுது அண்ணா சமாதி அருகே ஏதோ சினிமா ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. (டைரடக்கர் ஸ்ரீதர் கார்த்திக்கையும், ஜீஜியையயும் விரட்டிக்கொண்டிருந்தார்)  எவனோ பஸ்ஸில் இருந்த ஒருவன் குரல் கொடுக்க தூக்கத்தில் இருந்து முழித்த என் சக தொழிலாளி..

 டேய் மச்சி இறங்கு இறங்கு.. ...

என்று சொன்னவுடன் நான் அங்கேயே தூக்க கலக்கத்தில் இறங்கி விட்டேன், கூட இறங்கிய நண்பன் அண்ணா நீச்சல் குளம் நோக்கி நடையை கட்டினான்.

டேய் எங்கடா போற...

நீச்சல் குளத்திற்கு

எதுக்குடா என்ன கூப்பிட்ட

நான் எங்கே கூப்பிட்டேன்

நீதானடா எறங்கு எறங்குன்ன

டேய் நான் உன்ன கூப்பிடலடா சகாதேவனை கூப்பிட்டேன் அந்த பாடு தூங்கிட்டான் போல...

சரி உனக்கு என்ன இப்போ பிரச்சினை என்றான்.

ஒன்னும இல்ல இப்போ நான் பல்லவன் பிடிச்சுதான் வீட்டுக்கு போகணும்

ஒன்னும் பிரச்சினை  இல்லை என்னோடு ஒரு அரை மணி நேரம் இரு அப்புறம் மேன்ஷன் போயிட்டு என்னோட வண்டியில் வீட்டில் கொண்டு விடுகிறேன் என்றான்.

நான் பார்வையாளராக இருக்க அவன் பாட்டிற்கு நீந்த சென்றுவிட்டான்.

அப்பொழுது வந்த ஆசைதான் எனக்கு நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று.......

அன்று முதல் நான் அவனுடன் நீச்சல்  குளத்திற்கு ரெகுலராக ஆஜராகி விடுவேன்.

அனால் பிரச்சினை எனக்கு நீந்தத் தெரியாது.

தத்தக்கா பித்தக்கா என்று தண்ணீரில் காலையும் கையையும் அடித்துக்கொண்டிருப்பேன்

அதை பார்த்த ஒரு முதியவர், அவருக்கு கிட்டத்தட்ட ஒரு எனபது வயதிருக்கும், தம்பி இங்கே வா நீச்சல் எனபது இப்படி அல்ல.

முதலில் நீ மூழ்க மாட்டாய் என்று நம்பிக்கை வை. பிறகு தண்ணீரில் மூழ்கும் பொழுது கண்களை மூடாதே............பிறகு நீந்தும்  பொழுது தலையை எந்த கோணத்தில் வைத்துக்கொண்டால் எளிதாக நீந்தலாம் என்று எத்துணையோ பாடங்களை கற்றுத்தந்தார், இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக தண்ணீரில் பிணம் போல மிதக்கும் வித்தையை கிட்டத்தட்ட இரண்டே நிமிடங்களில் எனக்கு கற்றுத்தந்தார்.

அதன் பிறகு எனக்கு நீச்சல் ஒரு பிரச்சினையே அல்ல. ஆனால் காலப்போக்கில் நமது பழக்க வழக்கங்களால் நீச்சல் குளம் பக்கம் போகவில்லை.

ஆனால் சமீபத்தில் ஆர்தரைடிஸ் தொல்லையால் அவத்திப்படும் பொழுது எனது மருத்துவர் ..................உங்களது பிரச்சினை போக வேண்டுமென்றால் வாட்டர் தெரப்பி தான் சிறந்தது என்றார்.

இப்பொழுது மறுபடியும் நீச்சல் குளம் நாடி.....................அவரை நினைவு கொள்கிறேன்............

கிட்டத்தட்ட இரண்டே மாதங்கள் எனது நீச்சல் பயிற்சியை தொடர்ந்ததால் வலி போயயே போச்சு..........

இப்பொழுது எனக்கு நீச்சல் பயிற்சி அளித்த அந்த முதியவரை நினைவு கொள்கிறேன்.

குருவே சரணம்..........

Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

வெங்கட் நாகராஜ் said...

சரியான நாளில் சரியான பகிர்வு.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி வெங்கட்

வேகநரி said...

//வாழ்க்கை பாதையில் தேவையான போதனைகளை தந்த அனைவருமே நமது ஆசிரியர்கள்தான்.//
முற்றிலும் உண்மை.
அந்த வகையில் தந்தை,தாய்,எத்தனையோ முகம் மறந்தவர்கள் நம் வாழ்வில் இணைந்திருக்கிறார்கள்.
//அதன் பிறகு எனக்கு நீச்சல் ஒரு பிரச்சினையே அல்ல. ஆனால் காலப்போக்கில் நமது பழக்க வழக்கங்களால் நீச்சல் குளம் பக்கம் போகவில்லை.//
தவறு செய்துவிட்டீர்களே!
மறுபடியும் நீச்சல் செய்ய ஆரம்பித்து புத்துணர்வு பெற்றது மகிழ்ச்சி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.